மிகவும் விலையுயர்ந்த மற்றும் ஆடம்பரமான வீடுகளைக் கொண்ட 10 இந்திய கிரிக்கெட் வீரர்களை பார்ப்போம்.
விலையுயர்ந்த வீடுகளின் பட்டியலில் 10வது இடத்தில் முன்னாள் இந்திய கேப்டனும் வர்ணனையாளருமான சுனில் கவாஸ்கர் உள்ளார். அவருடைய கோவா வில்லாவின் விலை 20 கோடி ரூபாய் ஆகும்.
இந்திய அணியின் ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா பட்டியலில் 9வது இடத்தில் உள்ளார். இவருக்கு மும்பையில் 30 கோடி ரூபாய் மதிப்புள்ள பிளாட் உள்ளது.
மிகவும் விலையுயர்ந்த வீடுகளின் பட்டியலில் எட்டாவது இடத்தில் முன்னாள் இந்திய கேப்டன் ரோஹித் சர்மா உள்ளார், இவருக்கு மும்பையில் 30 கோடி ரூபாய் மதிப்புள்ள வீடு உள்ளது.
கிர்க்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் வீட்டின் விலை சுமார் 38 கோடி ரூபாய் ஆகும். இருப்பினும், அவர் வீட்டில் 60 கோடி ரூபாய்க்கு புதுப்பித்தல் பணிகளை செய்திருந்தார்.
இந்தப் பட்டியலில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலியும் இடம்பெற்றுள்ளார். இவருக்கு கொல்கத்தாவில் 40 கோடி ரூபாய் மதிப்புள்ள வீடு உள்ளது.
இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங்கிற்கு மும்பையில் 64 கோடி ரூபாய் மதிப்புள்ள வீடு உள்ளது. இது தவிர சண்டிகரிலும் அவருக்கு ஒரு சொகுசு பங்களா உள்ளது.
இந்தப் பட்டியலில் ஷிகர் தவான் பெயரும் இடம்பெற்றுள்ளது. இவருக்கு குருகிராமில் 69 கோடி ரூபாய் மதிப்புள்ள வீடு உள்ளது.
இந்திய கிரிக்கெட்டின் கிங் விராட் கோலியின் குருகிராம் வீட்டின் விலை 80 கோடி ரூபாய். அவருக்கு மும்பை மற்றும் பல இடங்களில் வீடுகள் உள்ளன.
மிகவும் விலையுயர்ந்த வீடு கொண்ட வீரர்களின் பட்டியலில் 2வது இடத்தில் தோனியின் பெயர் வருகிறது. இவருக்கு ராஞ்சியில் சுமார் 100 கோடி ரூபாய் மதிப்புள்ள வீடு உள்ளது.
இந்தப் பட்டியலில் அதிரடி ஜாம்பவான் வீரேந்திர சேவாக் முதலிடத்தில் உள்ளார். இவருக்கு டெல்லியில் 130 கோடி ரூபாய் மதிப்புள்ள ஆடம்பர பங்களா உள்ளது.