கூகிள் ஜெமினியில் இந்திய கிரிக்கெட் வீரர்களின் எதிர்காலப் படங்கள் பகிரப்பட்டுள்ளன. இதில் ரோஹித் சர்மா முதல் விராட் கோலி வரையிலான புகைப்படங்கள் உள்ளன.
கூகிள் ஜெமினி உருவாக்கிய ரோகித் சர்மாவின் இந்தப் படத்தில், அவர் நீல நிற சூட் மற்றும் வெள்ளை தாடியுடன் காணப்படுகிறார். அவர் ஐசிசி தலைவராக சித்தரிக்கப்பட்டுள்ளார்.
கூகிள் ஜெமினி உருவாக்கிய ரியான் பராக் புகைப்படத்தில், அவர் பிசிசிஐ தலைவராகக் காட்டப்பட்டுள்ளார். இந்தப் படங்கள் cricketgullyofficial என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளன.
இளம் வீரர் ஆயுஷ் மாத்ரேயின் புகைப்படத்தையும் கூகிள் ஜெமினி உருவாக்கியுள்ளது. இதில் அவர் 2040ல் இந்திய டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணியின் கேப்டனாக காட்டப்பட்டுள்ளார்.
15 வயதான வைபவ் சூர்யவன்ஷி 2040ல் எப்படி இருப்பார் என்பதை கூகிள் ஜெமினி உருவாக்கியுள்ளது. இதில் அவர் இந்திய டி20 அணியின் கேப்டனாக காட்டப்பட்டுள்ளார்.
இந்திய அணியின் ஆல்-ரவுண்டரும், ஃபீல்டிங் நிபுணருமான ரவீந்திர ஜடேஜா, 2040ல் நரைத்த முடியுடன் இந்திய அணியின் ஃபீல்டிங் பயிற்சியாளராகக் காணப்படுகிறார்.
கூகிள் ஜெமினி உருவாக்கியுள்ள ஆர். அஸ்வின் புகைப்படத்தில், அவர் வயதான தோற்றத்தில் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராகக் காட்டப்பட்டுள்ளார்.
ரிஷப் பண்ட் சிறிய நரை முடி மற்றும் தாடியுடன் வித்தியாசமான தோற்றத்தில் காணப்படுகிறார். அவர் என்சிஏ-வின் தலைமைப் பயிற்சியாளராகக் காட்டப்பட்டுள்ளார்.
ஜஸ்பிரித் பும்ராவின் புகைப்படம் வித்தியாசமாக உள்ளது. நரைத்த முடி மற்றும் தாடியுடன் அவரை அடையாளம் காண்பது கடினம். அவரை இந்தியாவின் பந்துவீச்சு பயிற்சியாளராக கூகுள் உருவாக்கியுள்ளது.
2040ல் விராட் கோலி இப்படித்தான் இருப்பார். கூகிள் ஜெமினி அவரை இந்தியாவின் பேட்டிங் பயிற்சியாளராக உருவாக்கியுள்ளது.
ஷ்ரேயஸ் ஐயர் சூட் அணிந்து மிகவும் அழகாக இருக்கிறார். நரைத்த முடி மற்றும் தாடியுடன், கூகிள் ஜெமினி அவரை இந்திய அணியின் வழிகாட்டியாக உருவாக்கியுள்ளது.