ஆசியக் கோப்பை வரலாற்றில் அதிக ரன்கள் எடுத்த வீரர் விராட் கோலி. 10 போட்டிகளில் 9 இன்னிங்ஸ்களில் 429 ரன்கள் எடுத்துள்ளார், அவரது அதிகபட்ச ஸ்கோர் 122
இந்தப் பட்டியலில் பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வான் இரண்டாவது இடத்தில் உள்ளார். 6 போட்டிகளில் 281 ரன்கள் எடுத்துள்ளார். இதில் அவரது அதிகபட்ச ஸ்கோர் 78 ரன்கள்.
முன்னாள் இந்திய டி20 கேப்டன் ரோஹித் சர்மா இதில் மூன்றாவது இடத்தில் உள்ளார். 9 ஆசியக் கோப்பை போட்டிகளில் 271 ரன்கள் எடுத்துள்ளார். இதில் அவரது அதிகபட்ச ஸ்கோர் 83 ரன்கள்.
நான்காவது இடத்தில் ஹாங்காங் வீரர் பாபர் ஹயாத் உள்ளார், அவர் இதுவரை ஆசியக் கோப்பையில் 5 போட்டிகளில் 235 ரன்கள் எடுத்துள்ளார். இதில் அவரது அதிகபட்ச ஸ்கோர் 122 ரன்கள்.
ஆப்கானிஸ்தான் வீரர் இப்ராஹிம் ஜத்ரான் இந்தப் பட்டியலில் ஐந்தாவது இடத்தில் உள்ளார். ஆசியக் கோப்பையில் 5 இன்னிங்ஸ்களில் 196 ரன்கள் எடுத்துள்ளார்,
இலங்கை வீரர் பானுகா ராஜபக்ஷ இதுவரை ஆசியக் கோப்பையில் 6 போட்டிகளில் 191 ரன்கள் எடுத்துள்ளார், இதில் அவரது அதிகபட்ச ஸ்கோர் 71 ரன்கள்.
வங்கதேச பேட்ஸ்மேன் சபீர் ரஹ்மான் ஆசியக் கோப்பையில் ஆறு போட்டிகளில் இதுவரை 181 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 80 ரன்கள் அவரது அதிகபட்ச ஸ்கோர்.
எட்டாவது இடத்தில் ஆப்கானிஸ்தான் வீரர் நஜிபுல்லா ஜத்ரான் உள்ளார். ஆசியக் கோப்பையில் இதுவரை 8 போட்டிகளில் 176 ரன்கள் எடுத்துள்ளார். 60 ரன்கள் அவரது அதிகபட்ச ஸ்கோர்.
யுஏஇ வீரர் முகமது உஸ்மான் இதுவரை ஆசியக் கோப்பையில் 7 போட்டிகளில் 176 ரன்கள் எடுத்துள்ளார். அவரது அதிகபட்ச ஸ்கோர் 46 ரன்கள்.
வங்கதேச வீரர் மஹ்முதுல்லா இதுவரை ஆசியக் கோப்பையில் 7 போட்டிகளில் விளையாடியுள்ளார். 7 இன்னிங்ஸ்களில் 173 ரன்கள் எடுத்துள்ளார். இதில் அவரது அதிகபட்ச ஸ்கோர் 36* ரன்கள்.