- Home
- Sports
- Sports Cricket
- CSK vs DC: வேஸ்ட் லக்கேஜ்.. இளம் வீரர் நீக்கம்.. 'சிக்சர்' மன்னன் உள்ளே.. சிஎஸ்கே பிளேயிங் லெவன் இதோ!
CSK vs DC: வேஸ்ட் லக்கேஜ்.. இளம் வீரர் நீக்கம்.. 'சிக்சர்' மன்னன் உள்ளே.. சிஎஸ்கே பிளேயிங் லெவன் இதோ!
ஐபிஎல் 2026 தொடரில் தொடர் தோல்வியை சந்தித்து வரும் சிஎஸ்கே அணி அடுத்த போட்டியில் டெல்லி அணியுடன் மோதுகிறது. சிஸ்கே பிளேயிங் லெவன் குறித்து விரிவாக பார்க்கலாம்.

சிஎஸ்கே அணி படுமோசம்
ஐபிஎல் 2026 கிரிக்கெட் தொடர் களைகட்டியுள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் ஆர்சிபி மற்றும் டெல்லி கேப்பிட்டல் ஆகிய அணிகள் தொடர் வெற்றிகளை பதிவு செய்து வரும் நிலையில் ஐந்து முறை சாம்பியனான சிஎஸ்கே அணி நிலைமை படுமோசமாக உள்ளது. ஆம்.. நடப்பு ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே இதுவரை விளையாடிய மூன்று போட்டிகளிலும் படுதோல்வியை சந்தித்துள்ளது.
தொடர் தோல்வி
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான தனது முதல் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் சிஎஸ்கே அணி தோல்வியை சந்தித்தது, இதனை தொடர்ந்து பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான இரண்டாவது போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது சிஎஸ்கே அணி. இதன் பிறகு கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணி 43 ரன்கள் வித்தியாசத்தில் மீண்டும் தோல்வியை தழுவியது.
சிஎஸ்கே பலவீனம் இதுதான்
கடந்த 2025 ஐபிஎல் சீசனில் புள்ளி பட்டியலில் கடைசி இடம் பெற்று மோசமான நிலையை சந்தித்த சிஎஸ்கே அணி நடப்பு ஐபிஎல் தொடரிலாவது சிறப்பாக விளையாடி வெற்றி பெறும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் ரசிகர்களை இந்த முறையும் ஏமாற்றி வரும் சிஎஸ்கே தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது. சிஎஸ்கே அணியின் பேட்டிங் படுமோசமாக உள்ளது. ராஜஸ்தான் அணியில் இருந்து வாங்கப்பட்ட பெரிதும் எதிர்பார்க்கப்படும் விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சன் எதிர்பார்த்து அளவு சிறப்பாக விளையாடவில்லை. இதே போல் கேப்டன் ருத்ராஜ் கெய்க்வாட்டும் சரியாக விளையாடாதது ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை அளித்துள்ளது.
பவுலிங், பீல்டிங்கும் மோசம்
பேட்டிங் மட்டுமின்றி பவுலிங் டிபார்ட்மெண்டிலும் சிஸ்கே அணி எதிர்பார்த்த அளவு சரிவர செயல்படவில்லை. கடந்த முறை விக்கெட்டுகளை வேட்டையாடிய ஸ்பின் பவுலர் நூர் அகமது இந்த முறை ரன்களை வாரி வழங்கி வருகிறார். ஸ்விங் மன்னன் என அழைக்கப்படும் நியூசிலாந்து வீரர் மேட் ஹென்ரியும் விக்கெட் எடுக்க திணறுவது மட்டுமின்றி ரன்களையும் விட்டுக் கொடுத்து வருகிறார். மேலும் சிஎஸ்கே அணியின் பீல்டிங்கும் மெச்சும்படி இல்லை. கைக்கு வரும் கேட்ச்களை எளிதில் கோட்டை விட்டு வருகின்றனர். இதனால் சிஎஸ்கே அணியின் மீது ரசிகர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.
கார்த்திக் சர்மா அதிரடி நீக்கம்
இந்த நிலையில் சிஎஸ்கே தனது 4வது போட்டியில் டெல்லி கேப்பிட்டல் அணியை வரும் 11ஆம் தேதி (சனிக்கிழமை) சந்திக்க உள்ளது. தனது சொந்த மைதானமான சென்னையில் டெல்லியுடன் மோதுகிறது. இந்தப் போட்டியில் சிஎஸ்கே அணி வெற்றி பெற வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. மிக முக்கியமான இந்த போட்டியில் சிஎஸ்கே அணியில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது பல கோடிகளை கொட்டி கொடுத்து அணியில் எடுக்கப்பட்ட கார்த்திக் சர்மா பெரிய அளவில் சோபிக்கவில்லை இதனால் அவர் அணியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட உள்ளார்.
டெவால்ட் பிரெவிஸ் உள்ளே
இவருக்கு பதிலாக கடை சில நாட்களாக காயத்தால் அவதிப்பட்டு வந்த 'சிக்சர்' மன்னன் டெவால்ட் பிரெவிஸ் மீண்டும் அணியில் இணைய உள்ளார். பிரவெஸ் வருகை சிஎஸ்கே மிடில் ஆர்டரில் கூடுதல் பல சேர்க்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இதே போல் ஏலத்தில் 14 கோடிக்கு வாங்கப்பட்ட ஆல்ரவுண்டர் பிரசாந்த் வீர் டெல்லிக்கு எதிரான போட்டியில் இம்பெக்ட் வீரராக களமிறங்க வாய்ப்புகள் உள்ளன.
தோனி ஆடுவாரா?
தசைப் பிடிப்பு காயத்திலிருந்து குணமடைந்து விட்ட கேப்டன் கூல் மகேந்திர சிங் தோனி தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். ஆனால் டெல்லிக்கு எதிரான போட்டியில் அவர் விளையாடுவது சந்தேகம் தான். தோனி விளையாடாத பட்சத்தில் சஞ்சு சாம்சன் வழக்கம் போல் விக்கெட் கீப்பராக இருப்பார். மற்றபடி அணியில் வேறு எந்த மாற்றமும் இருக்காது என கூறப்படுகிறது.
டெல்லிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே உத்தேச பிளேயிங் லெவன்: ருத்ராஜ் கெய்க்வாட் (கேப்டன்), சஞ்சு சாம்சன், ஆயூஷ் மாத்ரே, சர்ப்ராஸ் கான், டெவால்ட் பிரெவிஸ், ஷிவம் துபே, ஜேமி ஓவர்டன், மேட் ஹென்றி, ராகுல் சாஹர், நூர் அகமது, கலீல் அகமது. இம்பேக்ட் வீரர்: பிரசாந்த் வீர்.

