MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தொலைக்காட்சி
  • விரைவில் அரங்கேறும் மித்ரா- மகேஷ் திருமணம்? அன்புவின் மாஸ் சபதத்தால் அதிர்ச்சியில் குடும்பத்தினர்!

விரைவில் அரங்கேறும் மித்ரா- மகேஷ் திருமணம்? அன்புவின் மாஸ் சபதத்தால் அதிர்ச்சியில் குடும்பத்தினர்!

மருத்துவமனையிலிருந்து ஆனந்தி டிஸ்ஜார்ஜ் செய்யப்பட்டு வீட்டிற்கு அழைத்து செய்யப்பட்ட நிலையில் அன்புவின் அம்மா தனது ரியாக்‌ஷனை வெளிப்படுத்தினார். இதே போன்று மகேஷ் ஆனந்தியின் வயிற்றில் வளரும் குழந்தையை பற்றி கனவு காண்கிறார்.

2 Min read
Author : Rsiva kumar
Published : Apr 09 2026, 11:08 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
விரைவில் அரங்கேறும் மித்ரா மகேஷ் திருமணம்?
Image Credit : Sun TV You Tube

விரைவில் அரங்கேறும் மித்ரா- மகேஷ் திருமணம்?

சன் டிவியின் பிரபலத் தொடரான 'சிங்கப்பெண்ணே' வின் இன்றைய (ஏப்ரல் 9) தேதி எபிசோடிற்கான ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. அன்பு, ஆனந்தி மீதான தனது அக்கறையை மிகவும் தீவிரமாக வெளிப்படுத்தும் வகையில் காட்சிகள் அமைந்துள்ளன. முன்னதாக ஆனந்தியின் இந்த நிலைக்கு யார் காரணம் என்று அன்புவின் அம்மா லட்சுமி மற்றும் துளசியிடம் போலீசார் விசாரனை மேற்கொள்ள, அதற்கு ஆனந்தியோ தானாக மளிகை பொருட்களை எடுத்து அலமாரியில் வைக்கும் போது கீழே விழுந்து விட்டதாக அன்புவிடம் கூறினார். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
25
வீட்டிற்கு அழைத்து செல்லப்பட்ட ஆனந்தி
Image Credit : Sun TV You Tube

வீட்டிற்கு அழைத்து செல்லப்பட்ட ஆனந்தி

இதைத் தொடர்ந்து அன்புவும் போலீசிடம் அப்படியே சொல்லவே, அவர்களும் துளசி மற்றும் லட்சுமியிடம் மேற்கொண்ட விசாரணையை பாதியிலேயே விட்டு விட்டு அங்கிருந்த் புறப்பட்டுச் சென்றனர். இதைத் தொடர்ந்து மருத்துவமனையிலிருந்து ஆனந்தி டிஸ்ஜார்ஜ் செய்யப்பட்டு வீட்டிற்கு அழைத்து செல்லப்பட்டார். குறிப்பாக, தனது மனைவியைப் பார்த்துக் கொள்ள வேண்டியது தனது பொறுப்பு என்றும், அதைப் பற்றி யாரிடமும் விளக்கம் சொல்ல வேண்டிய அவசியமில்லை என்றும் அவர் ஆவேசமாகப் பேசுகிறார்.

35
ஆனந்தி வீட்டிற்கு வந்ததைத் தொடர்ந்து அன்புவின் அம்மா ரியாக்‌ஷன்
Image Credit : SUN TV You Tube

ஆனந்தி வீட்டிற்கு வந்ததைத் தொடர்ந்து அன்புவின் அம்மா ரியாக்‌ஷன்

அன்புவின் அதீத பாசமும் அங்கிருப்பவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. மேலும் மகேஷ், ஆனந்தி வயிற்றில் வளரும் குழந்தையை தன குழந்தை போல் உணர ஆரம்பித்துவிட்டார். இதை மித்ராவிடம் சொன்ன நிலையில் அவருக்கு பயம் ஏற்படுகிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க, எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் தங்கள் திருமணத்தை நடத்தி முடிப்பதே நல்லது என்ற முடிவிற்கு மித்ரா வருகிறார். வீட்டுப் பெரியவர்களிடம் இது குறித்து சொல்கிறார்.

45
சிங்கப்பெண்ணே சீரியல் இன்றைய எபிசோடு
Image Credit : Sun TV You Tube

சிங்கப்பெண்ணே சீரியல் இன்றைய எபிசோடு

இது ஆனந்தியின் எதிர்காலத்தை நோக்கிய ஒரு முக்கியத் திருப்புமுனையாகப் பார்க்கப்படுகிறது. மறுபக்கம் நடந்த அனைத்தையும் தெரிந்து கொண்டு ஆனந்தியின் அக்கா கோகிலா தங்கையை நலம் விசாரிக்கிறார். மேலும் கர்ப்பமாக இருக்கும் போது எதற்காக இது போன்ற கஷ்டமான வேலைகளை செய்ய வேண்டும் என்று கடுமையாக திட்டினார்.

55
சன் டிவி சிங்கப்பெண்ணே இன்றைய எபிசோடு புரோமோ
Image Credit : SUN TV You Tube

சன் டிவி சிங்கப்பெண்ணே இன்றைய எபிசோடு புரோமோ

தொடர்ந்து போராட்டங்களையும் சவால்களையும் சந்தித்து வரும் ஆனந்திக்கு, அன்புவின் ஆதரவு ஒரு பலமாக இருந்தாலும், இவர்களை சுற்றி நடக்கும் விஷயத்திற்கு எல்லை இல்லாமல் சென்று கொண்டு இருக்கிறது. ஆனந்தியின் தைரியத்தையும், அதே சமயம் குடும்ப உறவுகளுக்குள் நடக்கும் போராட்டங்களையும் மையமாகக் கொண்ட இந்தத் தொடரின் அடுத்த எபிசோட், ரசிகர்களுக்கு ஒரு விறுவிறுப்பான அனுபவத்தைத் தரும் என்பதில் சந்தேகமில்லை.

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.
தொலைக்காட்சி

Latest Videos
Recommended Stories
Recommended image1
Pandian Stores 2 : தங்கமயில் கேட்ட கேள்வியால் ஆடிப்போன சரவணன்... கோமதிக்கு காத்திருந்த பேரதிர்ச்சி
Recommended image2
Siragadikka Aasai : மீனா எடுத்த முட்டாள்தனமான முடிவு... சிறகடிக்க ஆசை சீரியலில் எதிர்பாரா ட்விஸ்ட்
Recommended image3
Ethirneechal Thodargiradhu : தர்ஷினியை கடத்தியது இவரா? ஈஸ்வரியிடம் வசமாக சிக்கப்போகும் ஜனனி
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved