- Home
- Cinema
- அதிக சம்பளம் வாங்கும் டாப் 5 நடிகைகளின் பட்டியல்: கோடிகளில் புரளும் டாப் பெஸ்ட் நடிகை யாருன்னு பாருங்க!
அதிக சம்பளம் வாங்கும் டாப் 5 நடிகைகளின் பட்டியல்: கோடிகளில் புரளும் டாப் பெஸ்ட் நடிகை யாருன்னு பாருங்க!
Top 5 Highest Paid South Indian Actress List in Tamil : தென்னிந்திய சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளின் பட்டியல் வெளியாகியிருக்கிறது. அதில் டாப் பெஸ்ட் நடிகை யார் என்று பார்க்கலாம் வாருங்கள்.

அதிக சம்பளம் வாங்கும் டாப் 5 நடிகைகளின் பட்டியல்: கோடிகளில் புரளும் டாப் பெஸ்ட் நடிகை யாருன்னு பாருங்க!
Top 5 Highest Paid South Indian Actress List in Tamil : நாளுக்கு நாள் பான் இந்தியா படங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நடிகர், நடிகைகளும் பான் இந்தியா படங்களில் நடிப்பதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். ரசிகர்களும் அதைத்தான் விரும்புகிறார்கள். அதுமட்டுமின்றி வசூலிலும் பான் இந்தியா படங்கள் சாதனை படைத்து வருகின்றன. இதன் காரணமாக நடிகர், நடிகைகளின் சம்பளமும் அதிகரித்து வருகிறது. அந்தவகையில் தென்னிந்திய அளவில் அதிக சம்பளம் வங்கும் நடிகைகளின் பட்டியல் வெளியாகியிருக்கிறது. இதில், முதலிடத்தில் யாருக்கு? லேடி சூப்பர் ஸ்டார் நயன் தாராவா அல்லது எக்ஸ்பிரஷன் குயீன் ராஷ்மிகா மந்தனாவா என்று இந்த தொகுப்பில் காணலாம்.
சாய் பல்லவி சம்பளம்:
அமரன் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு நாக சைதன்யா உடன் சாய் பல்லவி இணைந்து நடித்த தெலுங்கு படமான தண்டேல் 7ஆம் தேதி வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்தப் படத்திற்கு சாய் பல்லவிக்கு ரூ.5 கோடி சம்பளம் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றது. இதற்கு முன்னதாக அவர் நடித்த அமரன் படத்திற்கு அவருக்கு ரூ.3 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து நிதேஷ் திவார் இயக்கத்தில் ராமர் கதாபாத்திரத்தில் ரன்பீர் கபீர் நடிக்கும் ராமாயண படத்திற்கு சாய் பல்லவிக்கு ரூ.6 கோடி சம்பளம் என்று தகவல் தெரிவிக்கின்றது. இந்தப் படம் 2026 மற்றும் 2027ஆம் ஆண்டுகளில் 2 பாகங்களாக வெளியாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
நயன்தாரா சம்பளம்:
திருமணமான பிறகும் கூட நம்பர் 1 நடிகையாக சாதித்து காட்டிய நயன்தாரா ஒவ்வொரு படத்திற்கும் ரூ.3 கோடி முதல் ரூ.12 கோடி வரையில் சம்பளம் பெறுகிறார். கடந்த 2018 ஆம் ஆண்டு ஃபோர்ப்ஸ் இந்தியா வெளியிட்ட பிரபலங்கள் 100 பட்டியலில் இடம் பெற்ற ஒரே நடிகை என்ற சாதனையையும் நயன்தாரா படைத்தார். தற்போது இவரது நடிப்பில் டெஸ்ட், மண்ணாங்கட்டி சின்ஸ் 1960, டியர் ஸ்டூடண்ட்ஸ், டாக்ஸிக், ராக்காயி, MMMN ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
அனுஷ்கா ஷெட்டி சம்பளம்:
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்த அனுஷ்கா ஷெட்டி இப்போது படங்களில் நடிப்பது குறைந்து வருகிறது. 2020 ஆம் ஆண்டு நிசப்தம் படத்தில் நடித்திருந்தார். 3 வருட இடைவெளிக்கு பிறகு 2023 ஆம் ஆண்டு மிஸ் ஷெட்டி மிஸ்டர் பாலிஷெட்டி படத்தில் நடித்திருந்தார். இதையடுத்து 2 ஆண்டுகளுக்கு பிறகு இப்போது காதி மற்றும் Kathanar – The Wild Sorcerer ஆகிய படங்களில் நடித்து வருகிறார். 2010 ஆம் ஆண்டு தமிழக அரசின் கலைமாமணி விருது வென்றார். தற்போது ஒவ்வொரு படத்திற்கும் ரூ.5 கோடி முதல் ரூ.7 கோடி வரையில் சம்பளம் வாங்குகிறார்.
ராஷ்மிகா மந்தனா சம்பளம்:
தமிழ் மட்டுமின்றி எல்லா மொழிகளிலும் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கும் ராஷ்மிகா மந்தனாவிற்கு புஷ்பா படம் சிறந்த அடையாளத்தை கொடுத்தது. இந்தப் படம் மட்டுமின்றி படத்தில் இடம் பெற்ற பாடல்களும் ரசிகர்களிடையே அமோக வரவேற்பு பெற்றது. சமீபத்தில் புஷ்பா 2 படம் வெளியாகி ரூ.1700 கோடிக்கும் அதிகமாக வசூல் குவித்தது. இப்போது வரலாற்று கதையில் நடித்திருக்கிறார். சத்ரபதி சிவாஜி மகாராஜாவின் மூத்த மகன் சத்ரபதி சம்பாஜி மகாராஜாவின் கதை இந்த வரலாற்றுப் படத்தில் உள்ளது. சாவா படம் வரும் பிப்ரவரி 14 ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. புஷ்பா 2 படத்திற்கு ராஷ்மிகா மந்தனாவிற்கு ரூ.10 கோடி சம்பளம் கொடுக்கப்பட்ட நிலையில் சாவா படத்திற்கு ரூ.4 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
சமந்தா சம்பளம்:
விவாகரத்து, அப்பா மறைவு, மயோசிடிஸ் நோய் ஆகிய பாதிப்புகளுக்கு பிறகு கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வரும் சமந்தா இப்போது சினிமாவிலிருந்து ஒதுங்கியிருக்கிறார். மாறாக அவர் வெப் சீரிஸ்களில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார். ஒவ்வொரு படத்திற்கும் ரூ.3 கோடி முதல் ரூ.8 கோடி வரையில் சமந்தா சம்பளம் வாங்குகிறார். கடைசியாக குஷி படத்தில் நடித்திருந்தார். இந்தப் படத்திற்கு அவருக்கு ரூ.4.5 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.