முன்பதிவில் அதிக வசூல் அள்ளிய டாப் 5 தமிழ் படங்கள்; விடாமுயற்சிக்கு எந்த இடம்?
விடாமுயற்சி படத்திற்கான முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இதுவரை ப்ரீ புக்கிங்கில் அதிக வசூல் செய்த டாப் 5 படங்களை பார்க்கலாம்.

முன்பதிவில் அதிக வசூல் அள்ளிய டாப் 5 படங்கள்
முன்னணி நடிகர்களின் படங்கள் என்றாலே அதற்கு பிரம்மாண்ட ஓப்பனிங் இருக்கும். விஜய், அஜித், ரஜினி போன்ற டாப் ஹீரோக்களின் படம் ரிலீஸ் ஆகும் முன்னரே அதற்கான முன்பதிவு தொடங்கி நடைபெறுவதுண்டு. அதிலும் முதல் நாள் முதல் ஷோவிற்கான டிக்கெட்டை எப்படியாவது வாங்கிவிட வேண்டும் என ரசிகர்கள் போட்டிபோட்டு டிக்கெட்டுகளை புக் செய்வார்கள். அந்த வகையில் தமிழ்நாட்டில் முன்பதிவு மூலம் அதிக வசூல் அள்ளிய டாப் 5 தமிழ் படங்களின் பட்டியலை பார்க்கலாம்.
5. விடாமுயற்சி
அஜித் நடித்துள்ள விடாமுயற்சி திரைப்படம் தான் ஐந்தாம் இடத்தில் உள்ளது. இப்படத்திற்கான முன்பதிவு கடந்த பிப்ரவரி 1ந் தேதியில் இருந்து நடைபெற்று வருகிறது. இதுவரை இப்படத்திற்கு தமிழ்நாட்டில் முன்பதிவு மூலம் மட்டும் ரூ.12.02 கோடி வசூல் ஈட்டி இருக்கிறது. இப்படம் நாளை உலகமெங்கும் ரிலீஸ் ஆக உள்ளது. இப்படத்தை மகிழ் திருமேனி இயக்கி உள்ளார். இது 3044 காட்சிகளுக்கான முன்பதிவு நிலவரமாகும்.
4. பொன்னியின் செல்வன் 1
மணிரத்னம் இயக்கிய மாஸ்டர் பீஸ் திரைப்படமான பொன்னியின் செல்வன் முதல் பாகம், முன்பதிவில் அதிக வசூல் செய்த டாப் 5 படங்களின் பட்டியலில் 4ம் இடம் பிடித்திருக்கிறது. இப்படத்திற்கான தமிழ்நாடு முன்பதிவு வசூல் மட்டும் ரூ.12.49 கோடி. அதுவும் 2640 காட்சிகளுக்கான முன்பதிவு நிலவரம் இது.
இதையும் படியுங்கள்... விடாமுயற்சியை விரட்டி வரும் படங்கள் என்னென்ன? இந்த வார தியேட்டர் & OTT ரிலீஸ் மூவீஸ்
3. கோட்
வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி விஜய் நடித்த திரைப்படம் கோட். இப்படம் கடந்தாண்டு திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது. இப்படத்திற்கான முதல் நாள் முன்பதிவு தமிழ்நாட்டில் 2390 காட்சிகளுக்கு நடைபெற்றது. அதன்மூலம் ரூ.12.56 கோடி வசூல் ஈட்டி இந்த பட்டியலில் மூன்றாம் இடம் பிடித்துள்ளது கோட் திரைப்படம்.
2. லியோ
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த லியோ திரைப்படம் கடந்த 2023-ம் ஆண்டு ரிலீஸ் ஆனது. இப்படத்திற்கான முதல் நாள் முன்பதிவு வசூல் மட்டும் ரூ.13 கோடி ஆகும். தமிழ்நாட்டில் 2197 காட்சிகளுக்கான முன்பதிவு நிலவரம் இது. கம்மியான காட்சிகள் திரையிடப்பட்டாலும் முன்பதிவில் மாஸ் காட்டி இரண்டாம் இடம் பிடித்துள்ளது லியோ.
1.பீஸ்ட்
முன்பதிவில் அதிக வசூல் அள்ளிய தமிழ் படங்களின் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது விஜய்யின் பீஸ்ட் தான். கடந்த 2022-ம் ஆண்டு ரிலீஸ் ஆன இப்படத்திற்கான முன்பதிவு ரிலீசுக்கு 2 வாரங்களுக்கு முன்பே தொடங்கப்பட்டதால், மொத்தமுள்ள 2939 காட்சிகள் மூலம் ரூ.15.05 கோடி வசூலித்து நம்பர் 1 இடத்தை பிடித்தது. இதில் தளபதி விஜய் தான் பாக்ஸ் ஆபிஸ் கிங் ஆக திகழ்கிறார்.
இதையும் படியுங்கள்... முன்பதிவிலேயே ரஜினி படத்தின் லைஃப் டைம் வசூல் சாதனை சல்லி சல்லியாய் நொறுக்கிய விடாமுயற்சி!