MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • முன்பதிவிலேயே ரஜினி படத்தின் லைஃப் டைம் வசூல் சாதனை சல்லி சல்லியாய் நொறுக்கிய விடாமுயற்சி!

முன்பதிவிலேயே ரஜினி படத்தின் லைஃப் டைம் வசூல் சாதனை சல்லி சல்லியாய் நொறுக்கிய விடாமுயற்சி!

மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடித்துள்ள விடாமுயற்சி படம் பிப்ரவரி 6ந் தேதி ரிலீஸ் ஆக உள்ள நிலையில், அப்படத்தின் முன்பதிவு வசூல் நிலவரத்தை பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : Feb 04 2025, 02:04 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
ரஜினியை ஓவர்டேக் செய்த அஜித்

ரஜினியை ஓவர்டேக் செய்த அஜித்

முன்னணி நடிகர்கள் படங்கள் ரிலீஸ் ஆனால் அதன் முதல் நாள் முதல் ஷோ பார்ப்பதற்கு ரசிகர்கள் ஆர்வம் காட்டுவதுண்டு. விசில் சத்தத்துடன், ஆட்டம் பாட்டம் என அன்று தியேட்டரே திருவிழாக்கோலம் பூண்டிருக்கும். தமிழ்நாட்டில் கடந்த 2023-ம் ஆண்டு வரை அதிகாலை 4 மணிக் காட்சிகள் திரையிடப்பட்டு வந்தன. அதன்பின்னர் அந்த காட்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. இதற்கு காரணம், துணிவு படம் பார்க்க வந்த ரசிகர் இந்த கொண்டாட்டத்தின் போது பலியானார். அதனால் அதன்பின்னர் எந்த படங்களுக்கும் அதிகாலை காட்சிக்கு அனுமதி அளிக்கப்படுவதில்லை.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
25
விடாமுயற்சி ரிலீஸ்

விடாமுயற்சி ரிலீஸ்

தற்போது தமிழ்நாட்டில் முதல் ஷோ காலை 9 மணிக்கு திரையிடப்படுகிறது. அதற்கு முன்னதாகவே அண்டை மாநிலங்களான ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகியவற்றில் அதிகாலை காட்சிகள் திரையிடப்படுவதால், அங்கு படையெடுக்கும் ரசிகர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்த ஆண்டு தமிழ் சினிமாவில் ரிலீஸ் ஆக உள்ள முதல் பிரம்மாண்ட படம் அஜித்தின் விடாமுயற்சி தான். இப்படம் வருகிற பிப்ரவரி 6ந் தேதி திரைக்கு வர உள்ளது.

இதையும் படியுங்கள்... குட் பேட் அக்லி படத்துக்காக ரீமிக்ஸ் செய்யப்படும் அஜித்தின் எவர்கிரீன் ஹிட் சாங்!

35
முன்பதிவில் மாஸ் காட்டும் விடாமுயற்சி

முன்பதிவில் மாஸ் காட்டும் விடாமுயற்சி

விடாமுயற்சி திரைப்படத்தை மகிழ் திருமேனி இயக்கி உள்ளார். லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் நடிகர் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடித்திருக்கிறார். இது பிரேக்டவுன் என்கிற ஹாலிவுட் படத்தை தழுவி எடுக்கப்பட்டு உள்ளது. இப்படத்தின் ரிலீஸ் நெருங்கிவரும் நிலையில், அதற்கான முன்பதிவு பிப்ரவரி 1ந் தேதி முதல் நடைபெற்று வருகிறது. அஜித் படம் 2 ஆண்டுகளுக்கு பின்னர் ரிலீஸ் ஆவதால் அதை பார்க்க ஆவலோடு காத்திருக்கும் ரசிகர்கள் விறுவிறுவென டிக்கெட்டுகளை புக் செய்து வருவதால் ரிலீசுக்கு முன்பே விடாமுயற்சி பட வசூல் வேட்டையை தொடங்கி இருக்கிறது.

45
விடாமுயற்சிக்கு குவியும் வசூல்

விடாமுயற்சிக்கு குவியும் வசூல்

அதன்படி பிப்ரவரி 6-ந் தேதிக்காக தமிழ்நாட்டில் 2 ஆயிரத்து 680 காட்சிகளுக்கான முன்பதிவு நடந்துள்ளன. அதன்மூலம் ரூ.10 கோடி வசூல் ஈட்டி உள்ளது. அதேபோல் பிப்ரவரி 7ந் தேதிக்கான முன்பதிவு மூலம் ரூ.3.52 கோடியும், பிப்ரவரி 8ந் தேதிக்கான முன்பதிவு மூலம் 3.81 கோடியும், பிப்ரவரி 9ந் தேதிக்கான முன்பதிவு மூலம் 3.46 கோடியும் வசூலித்துள்ளது. இதன்மூலம் தமிழ்நாட்டில் மட்டும் முன்பதிவு மூலம் விடாமுயற்சி திரைப்படம் ரூ.21 கோடிக்கு மேல் வசூலித்து உள்ளது.

55
லால் சலாம் லைஃப் டைம் வசூல் சாதனையை முறியடித்த விடாமுயற்சி

லால் சலாம் லைஃப் டைம் வசூல் சாதனையை முறியடித்த விடாமுயற்சி

இதுதவிர வெளிநாடுகளிலும் 4 கோடிக்கு மேல் வசூல் ஈட்டி இருக்கும் என கூறப்படுவதால் விடாமுயற்சி படம் பிரம்மாண்ட வசூல் சாதனை நிகழ்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் மற்றுமொரு சுவாரஸ்ய தகவல் என்னவென்றால் கடந்த ஆண்டு இதே பிப்ரவரி மாதம் ரிலீஸ் ஆன ரஜினியின் லால் சலாம் படம் தியேட்டரில் ரிலீஸ் ஆகி ஒட்டுமொத்தமாகவே வெறும் 20 கோடி மட்டும் தான் வசூலித்து இருந்தது. அந்த சாதனையை முன்பதிவு மூலமே அசால்டாக அடிச்சு தூக்கி இருக்கிறது அஜித்தின் விடாமுயற்சி திரைப்படம். இந்த இரண்டு படங்களையும் தயாரித்தது லைகா நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... விஜய்யை விட அஜித்துக்கு 100 கோடி கம்மி சம்பளம்; விடாமுயற்சி பட நடிகர்களின் சம்பள விவரம் இதோ

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
அஜித் குமார்

Latest Videos
Recommended Stories
Recommended image1
This Week OTT Releases : மே 18 முதல் 24 வரை இந்த வாரம் ஓடிடியில் போட்டிபோட்டு ரிலீஸ் ஆகும் படங்கள் மற்றும் வெப் சீரிஸ் இதோ
Recommended image2
Karuppu Box Office Collection : கங்குவா லைஃப்டைம் வசூலை 3 நாளில் வாரிசுருட்டிய கருப்பு... பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்த சூர்யா..!
Recommended image3
Ethirneechal Thodargiradhu : ஜனனிக்காக சக்தி எடுத்த அதிரடி முடிவு.... கல்யாணத்தில் காத்திருக்கும் ட்விஸ்ட்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved