மாஸ் படம்னா இப்படி இருக்கனும்; அஜித்தை அல்டிமேட் ஸ்டார் ஆக்கிய டாப் 5 மாஸ்டர் பீஸ் மூவீஸ்
விடாமுயற்சி நாயகன் அஜித்குமார் நடித்து பிளாக்பஸ்டர் ஹிட்டான டாப் 5 மாஸ்டர் பீஸ் படங்களின் பட்டியலை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

அஜித்தின் டாப் 5 மாஸ் படங்கள்
விடாமுயற்சி என்பது நடிகர் அஜித்துக்கு கச்சிதமாக பொருந்தும் தலைப்பாகும். சினிமாவில் எந்தவித பின்புலமும் இன்றி தன்னுடைய விடாமுயற்சியால் பல விஸ்வரூப வெற்றிகளை பெற்று இன்று தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி ரசிகர் படையயே உருவாக்கி வைத்திருப்பவர் அஜித்குமார். அவர் சினிமாவில் நிறைய வெற்றி, தோல்விகளை சந்தித்திருந்தாலும் அவரை அடுத்த லெவலுக்கு கொண்டு சென்ற படங்கள் ஒரு சில உள்ளன. அதைப்பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
தீனா
நடிகர் அஜித்தை ஒரு தரமான மாஸ் ஹீரோவாக முன்னிருத்தி எடுக்கப்பட்ட படம் தான் தீனா. ஏ.ஆர்.முருகதாஸின் அறிமுகப் படமான இதில் அஜித்தின் ஸ்டைல் கவனம் பெற்றது. மேலும் இப்படத்தின் மூலம் தான் அஜித்துக்கு தல என்கிற புனைப்பெயரும் கிடைத்தது. அஜித்தின் மாஸ் படங்களுக்கு பிள்ளையார் சுழி போட்டது தீனா என்பதில் மாற்றுக் கருத்தில்லை.
பில்லா
லோக்கல் டானாக தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்த அஜித்தை சர்வதேச டான் ஆக்கி அழகு பார்த்த படம் பில்லா. இப்படத்தில் ஸ்டைலிஷ் ஹீரோவாக வந்து நடிப்பில் அதகளம் செய்திருந்தார். இது ரஜினி படத்தின் ரீமேக் ஆக இருந்தாலும் அதையே தூக்கி சாப்பிடும் அளவுக்கு இப்படம் பிரம்மாண்ட வெற்றியை ருசித்தது.
இதையும் படியுங்கள்... முன்பதிவில் அதிக வசூல் அள்ளிய டாப் 5 தமிழ் படங்கள்; விடாமுயற்சிக்கு எந்த இடம்?
மங்காத்தா
அஜித்தின் மாஸ் அந்தஸ்தை அடுத்த கட்டத்துக்கு கொண்டு சென்ற படம் மங்காத்தா. வெங்கட் பிரபு இயக்கிய இப்படத்தில் தன்னுடைய வில்லத்தனமான நடிப்பையும் வெளிப்படுத்தி அசத்தி இருந்தார் அஜித். இப்படி ஒரு 50வது படம் எந்த ஹீரோவுக்கு கிடைத்திருக்காது என சொல்லும் அளவுக்கு மங்காத்தா மாஸ் வெற்றியை பெற்றது.
வீரம்
அஜித்தை வில்லேஜ் லுக்கில் பார்க்க ஆவலோடு இருந்த ரசிகர்களுக்கு விருந்தாக வந்த படம் தான் வீரம். இப்படத்தில் வில்லேஜ் டான் ஆக வந்து வில்லன்களை துவம்சம் செய்து இருந்தார் அஜித். சிறுத்தை சிவா இயக்கிய இப்படம் அஜித்தின் கெரியரில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. மேலும் பாக்ஸ் ஆபிஸிலும் வசூல் வேட்டை ஆடியது வீரம்.
விஸ்வாசம்
வீரம் வெற்றிக்கு பின் வேதாளம், விவேகம் என அஜித் நடித்த இரண்டு படங்களும் படுதோல்வியை சந்தித்ததால், மீண்டும் கம்பேக் கொடுக்க வேண்டும் என்கிற வெறியோடு அஜித் நடித்த படம் தான் விஸ்வாசம். வில்லேஜ் லுக்கில் அன்பான கணவனாக, பாசமான தந்தையாக, வில்லன்களை அடிச்சு துவம்சம் செய்யும் மாஸ் ஹீரோவாகவும் பல பரிணாமங்களில் மிளிர்ந்ததால் விஸ்வாசம் அவரின் கெரியரில் மறக்க முடியாத படமாக அமைந்தது.
இதையும் படியுங்கள்... விடாமுயற்சியை விரட்டி வரும் படங்கள் என்னென்ன? இந்த வார தியேட்டர் & OTT ரிலீஸ் மூவீஸ்