அதிக படங்களில் கமிட்டான டாப் 5 நாயகிகள்..முதல் இடம் யாருக்கு தெரியுமா?
ஒரு வருடத்தில் அதிக படங்களில் நடித்து ரசிகர்களின் மனதை வென்ற டாப் 5 ஹீரோயின்ஸ் பற்றி இங்கு பார்க்கலாம்..

nayanthara
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா :
முதல் இடத்தை பிடித்திருப்பது நம்ம லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தான். இவர் கடந்த 2019 இல் 7 படங்களில் நடித்துள்ளார். ‘விஸ்வாசம்’, ‘ஐரா’, ‘மிஸ்டர் லோக்கல்’, ‘கொலையுதிர் காலம்’, ‘லவ் ஆக்ஷன் டிராமா’, ‘சைரா நரசிம்ம ரெட்டி’ மற்றும் ‘பிகில்’ ஆகிய படங்களில் நடித்துள்ளார். ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ நடித்து முடித்துள்ளார். அதோடு AK 62 இவர் தான் நாயகியாவார் என கூறப்படுகிறது. உச்ச நாயகியாக இருக்கும் நயன் ஒரு வருடத்தில் 3 படங்களுக்கு மேல் கமிட் ஆகிவிடுகிறார்.
Tamanna Bhatia
தமன்னா பாட்டியா:
அடுத்த இடத்தில் இருப்பவர் தமன்னா. தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி திரைப்படங்களில் முன்னணி நடிகையாக வலம் வரும் தமன்னா கடந்த 2019 இல் சுமார் 8 படங்களில் நடித்துள்ளார்.. அவை 'F2: Fun and Frustration', 'கண்ணே கலைமானே', 'ஆக்ஷன்', 'தேவி 2', 'அபிநேத்ரி 2', 'காமோஷி', 'பெட்ரோமாக்ஸ்', மற்றும் 'சை ரா நரசிம்ம ரெட்டி'.
மேலும் செய்திகளுக்கு...KGF 2 டிக்கெட் விலையை உயர்த்தி கொள்ள அரசு அனுமதி..அதிர்ச்சியில் ரசிகர்கள்..
Keerthy Suresh
கீர்த்தி சுரேஷ் :
மூன்றாவது இடத்தை கீர்த்தி சுரேஷ் தக்க வைத்துள்ளார். பக்கத்து வீட்டு பெண் போல தோன்றும் கீர்த்தி மிக குறைந்த காலத்தில் ரசிகர்களின் மனதில் ஆளபதிந்தவர். தமிழில் மட்டுமல்ல கீர்த்தி சுரேஷ் தற்போது தெலுங்கு திரையுலகிலும் முன்னணி இடத்தை பிடித்துள்ளார். இவர் கடந்த 2018 இல் 7 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். ‘அக்ஞயாதவாசி’, ‘தானா சேர்ந்த கூட்டம்’, ‘மகாநதி’, ‘நடிகையர் திலகம்’, ‘சாமி 2’, ‘சண்டக்கோழி 2’, மற்றும் ‘சர்கார்’. மேலும் தற்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் இன்னும் பெயரிடப்படாத படத்தில் உதயநிதி ஸ்டாலினுடன் நடித்து வருகிறார்.
priyamani
பருத்திவீரன் பிரியா மணி :
பிரபல நடிகர் கார்த்தி அறிமுகமான ‘பருத்துவீரன்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கால் பதித்தவர் பிரியாமணி. இவர் முடிக்க படத்திலேயே தேசிய விருதை வென்றார்.. இந்த படத்தை தொடர்ந்து 2009 இல் அவர் அதிகப்பட்சமாக 7 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். அவை ‘துரோணா’, ‘மித்ருடு’, ‘ஆறுமுகம்’, ‘புதிய முகம்’, ‘நினைத்தாலே இனிக்கும்’, ‘ராம்’, மற்றும் ‘பிரவரக்யுடு உள்ளிட்ட படங்களில் நடித்தார்.
மேலும் செய்திகளுக்கு...கார்த்தியுடன் மோதும் சிவகார்த்திகேயன்...யார் வெல்லப்போவது?
Sneha
சிரிப்பழகி சினேகா :
அழகிய சிரிப்பால் தமிழக ரசிகர்களின் மனதை வென்றவர் சினேகா. புன்னகை அரசி என்று அழைக்கப்படும் சினேகா 2002 மற்றும் 2008ல் 7 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். 2002ல் பம்மல் கே சம்மந்தம், புன்னகை தேசம், உன்னை நினைத்து, ஏ நீ ரொம்ப அழகாயிருக்கா, ராஜா, ஏப்ரல் மாதத்தில், விரும்புகிறேன் ஆகிய படங்களில் நடித்தார். பின்னர் 2008ல் பிரிவோம் சந்திப்போம், இன்பா’, பாண்டி, ஆதி விஷ்ணு, சிலம்பாட்டம், பாண்டுரங்கடு மற்றும் நீ சுகமே நீ கொருகுன்னா ஆகிய படங்களில் நடித்துள்ளார்..