விமான படை முதல் போலீஸ் வேலை வரை - சினிமாவிற்காக அரசு பணியை விட்ட டாப் 4 தமிழ் நடிகர்கள்!
Kollywood Actors : அரைக்காசு சம்பளம் என்றாலும் அரசாங்க சம்பளம் வாங்க வேண்டும் என்பார்கள். ஆனால் கலை தாகத்தில் சிலர் அந்த அரசு பணியை கூட உதறி தள்ளியுள்ளார்கள்.
Actor Vinu Chakravarthy
மதுரை உசிலம்பட்டியில் கடந்த 1945ம் ஆண்டு பிறந்து தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் நடிகராகவும், எழுத்தாளராகவும், தயாரிப்பாளராகவும் வலம்வந்தவர் தான் வினு சக்கரவர்த்தி. தமிழ் திரையுலகத்தில் "சில்க்" சுமிதா என்கின்ற மாபெரும் நடிகையை அறிமுகப்படுத்தியதும் இவர் தான்.
ஆனால் 1979ம் ஆண்டு இவர் திரைத்துறையில் அறிமுகம் ஆகும் முன்னே, சென்னை ஐஸ் ஹவுஸ் பகுதியில் 6 மாத காலம் சப் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்துள்ளார். அதன் பிறகு நான்கு ஆண்டுகள் தென்னக ரயில்வேயில் பணி செய்து வந்த அவர், அதன் பிறகு நான் "ரோசாப்பூ ரவிக்கைக்காரி" என்கின்ற திரைப்படத்தின் மூலம் திரையதுறையில் அறிமுகமானார்.
Actor Delhi Ganesh
விரைவில் தனது ஐம்பதாவது ஆண்டு கால திரை பயணத்தை கொண்டாட உள்ள மூத்த தமிழ் திரையுலக நடிகர் தான் டெல்லி கணேஷ். திருநெல்வேலி, பட்டமடை பகுதியில் பிறந்த அவர், இயக்குனர் பாலச்சந்தர் மூலம் தான் திரைத்துறையில் அறிமுகமானார். அதற்கு முன்னதாக சில டிராமா கம்பெனிகளிலும் பணியாற்றியுள்ளார்.
அவரைப் அவரை பற்றி நம் அனைவருக்கும் தெரிந்த விஷயம் அவ்வளவு தான். ஆனால் 1944ம் ஆண்டு பிறந்த டெல்லி கணேஷ், தனது 20வது வயது முதல் முப்பதாவது வயது வரை இந்திய விமானப்படையில் வீரராக பணியாற்றி வந்துள்ளார் நம்மில் பலர் அறியாத உண்மை.
Actor Nassar
தமிழ் சினிமாவில் ஹீரோவாக, வில்லனாக, குணச்சித்திர நடிகனாக, காமெடியனாக என்று எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதை மிக நேர்த்தியாக நடித்து முடிக்கும் ஒரு மெகா ஹிட் நடிகர் தான் நாசர். சென்னையில் பிறந்து வளர்ந்த அவருக்கு வயது 66, கடந்த 1985ம் ஆண்டு வெளியான "கல்யாண அகதிகள்" என்கின்ற கே. பாலச்சந்தரின் திரைப்படத்தின் மூலம் இவர் திரையுரையில் அறிமுகமானார்.
350க்கும் மேற்பட்ட தமிழ் திரைப்படங்கள், 150க்கும் மேற்பட்ட தெலுங்கு திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்ற நாசர், திரைத்துறைக்கு வருவதற்கு முன்பாக இந்திய விமானப்படையில் சில ஆண்டு காலம் பணியாற்றியவர் என்பது குறிப்பிடப்பட்டது.
Director Tamizh
"டாணாக்காரன்" திரைப்படம் மூலமாக இயக்குனராக தனது பயணத்தை தொடங்கியவர் தான் தமிழ். ஆனால் அதற்கு முன்னதாகவே இவர் பல திரைப்படங்களில் நல்ல பல கதாபாத்திரங்கள் ஏற்று நடித்து வந்தவர் ஆவார். குறிப்பாக வெற்றிமாறனின் திரைப்படங்களில் நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தும் நடிகர் தமிழ், திரைத்துறைக்கு வருவதற்கு முன்னதாக சப் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
“ஏற்கனவே CM; இப்போ PM.." விஜய்யின் தாய் ஷோபா சொன்னதை நோட் பண்ணீங்களா?