- Home
- Cinema
- அடுத்தடுத்து ட்விஸ்ட்.. எந்த உச்ச நடிகரும் இல்லாமல் மிரள வைத்த டாப் 10 தமிழ் த்ரில்லர் படங்கள்..
அடுத்தடுத்து ட்விஸ்ட்.. எந்த உச்ச நடிகரும் இல்லாமல் மிரள வைத்த டாப் 10 தமிழ் த்ரில்லர் படங்கள்..
எந்த பெரிய நடிகர், நடிகைகளும் இல்லாமல் ரசிகர்களின் கவனம் ஈர்த்த சிறந்த தமிழ் த்ரில்லர் படங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

பொதுவாக உச்ச நடிகர்களுக்கென தனி மார்க்கெட் வேல்யு இருக்கிறது. இந்த மதிப்பு ஒவ்வொரு ஹீரோவுக்கும் மாறுபடும். அதாவது இந்த ஹீரோ நடித்தால் ரூ.100 கோடி வசூல் உறுதி அல்லது இந்த நடிகர் நடித்தால் போட்ட பணத்தை திருப்பி போட்ட பணத்தை திருப்பி எடுத்துவிடலாம் என்ற உத்திரவாதம் இருக்கும். இதனால் தான் பெரிய ஹீரோக்களின் படங்கள் எளிதாக மக்களை சென்றடைகின்றன. மேலும் வசூல் ரீதியாகவும் நல்ல லாபம் ஈட்டுகின்றன. ஆனால் எந்த பெரிய நடிகர், நடிகைகளும் இல்லாமல் ரசிகர்களின் கவனம் ஈர்த்த சிறந்த தமிழ் த்ரில்லர் படங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
துருவங்கள் பதினாறு
கார்த்திக் நரேன் இயக்கத்தில் 2016-ம் ஆண்டு வெளியான த்ரில்லர் படம் துருவங்கள் பதினாறு. ரகுமான் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான இந்த படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.
8 தோட்டாக்கள் :
ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் வெளியான த்ரில்லர் படம் 8 தோட்டாக்கள். வெற்றி, நாசர் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான இந்த படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது.
யுத்தம் செய் :
மிஷ்கின் இயக்கத்தில் வெளியான யுத்தம் செய் படத்தில் இயக்குனர் சேரன் லீட் ரோலில் நடித்திருந்தார். இந்த படத்திற்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது. தமிழ் சினிமாவின் சிறந்த த்ரில்லர் படங்களில் ஒன்றாகவும் மாறியது.
நான் :
ஜீவா சங்கர் இயக்கத்தில் 2012-ம் ஆண்டு வெளியான படம் நான். க்ரைம் த்ரில்லர் படமாக உருவான இந்த படத்தில் விஜய் ஆண்டனி ஹீரோவாக நடித்திருந்தார். இந்த படத்திற்கு விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு கிடைத்தது.
ஈரம் :
2009-ம் ஆண்டு அறிவழகன் இயக்கத்தில் வெளியான க்ரைம் த்ரில்லர் படம் ஈரம். நந்தா, ஆதி, சிந்து மேனன் உள்ளிட்டோர் நடித்திருந்த இந்த படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.
ஓநாயும் ஆட்டுக்குட்டியும் :
மிஷ்கின் இயக்கி நடித்திருந்த படம் ஓநாயும் ஆட்டுக்குட்டியும். 2013-ம் ஆண்டு த்ரில்லர் படமாக உருவான இந்த படம் சர்வதேச அளவில் கவனம் ஈர்த்தது. தமிழ் சினிமாவின் கல்ட் கிளாசிக் படமாக மாறியது.
தெகிடி :
பி. ரமேஷ் இயக்கத்தில் 2014-ம் ஆண்டு வெளியான படம் தெகிடி. அசோக்செல்வன், ஜனனி உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான இந்த க்ரைம் த்ரில்லர் படம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.
Maanagaram
மாநகரம் :
2017-ம் ஆண்டு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான ஆக்ஷன் த்ரில்லர் படம் மாநகரம். இந்த படத்தில் ஸ்ரீ, சுந்தீப் கிஷன், ரெஜினா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்த படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது.
காளிதாஸ் :
2019-ம் ஆண்டு ஸ்ரீ செந்தில் இயக்கத்தில் வெளியான த்ரில்லர் படம் காளிதாஸ். பரத் நடிப்பில் வெளியான இந்த படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.