- Home
- Cinema
- அஜித் நடிக்க மறுத்த கதை... ஓகே சொன்ன தனுஷ்! துணிவுக்கு பின் எச்.வினோத் செய்யப்போகும் தரமான சம்பவம்
அஜித் நடிக்க மறுத்த கதை... ஓகே சொன்ன தனுஷ்! துணிவுக்கு பின் எச்.வினோத் செய்யப்போகும் தரமான சம்பவம்
அஜித் நடித்துள்ள துணிவு திரைப்படம் வருகிற ஜனவரி 11-ந் தேதி ரிலீசாக உள்ள நிலையில், இயக்குனர் எச்.வினோத் தான் தனுஷை வைத்து இயக்க உள்ள படம் குறித்த அப்டேட்டை வெளியிட்டுள்ளார்.

சதுரங்க வேட்டை படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் எச்.வினோத். நட்டி நட்ராஜ் நடிப்பில் மிகவும் குறைவான பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் வித்தியாசமான கதையம்சத்தில் உருவாகி இருந்ததால் இப்படத்தை மக்கள் பெரிய அளவில் கொண்டாடினர். இதையடுத்து கார்த்தியின் தீரன் அதிகாரம் ஒன்று படத்தை இயக்கி முன்னணி இயக்குனராக உயர்ந்தார் எச்.வினோத்.
இதையடுத்து அவருக்கு கிடைத்த ஜாக்பாட் வாய்ப்பு தான் அஜித்தின் நேர்கொண்ட பார்வை. பிங்க் என்கிற இந்தி படத்தின் தமிழ் ரீமேக் ஆக உருவாகி இருந்த இப்படத்தை விறுவிறுப்பு குறையாத திரைக்கதையுடன் இயக்கி வெற்றி கண்டார் வினோத். இதையடுத்து தனது வலிமை படத்தை இயக்கும் வாய்ப்பையும் எச்.வினோத்துக்கு வழங்கினார் அஜித்.
இதையும் படியுங்கள்... அஜித்தை போல் சூர்யாவுக்கும் V சென்டிமெண்டை கையிலெடுத்த இயக்குனர் சிவா! சூர்யா 42 படத்துக்கு இப்படி ஒரு தலைப்பா
இது முழுக்க முழுக்க எச்.வினோத்தின் கதை, திரைக்கதை, வசனத்தில் உருவாகி இருந்த படம் என்பதால் இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு இருந்தது. இருப்பினும் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ரிலீஸான இப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது. இருப்பினும் வணிக ரீதியாக அப்படம் வெற்றி அடைந்ததால், இந்த கூட்டணி மீண்டும் இணைந்தது.
இம்முறை துணிவு என்கிற படத்துடன் களமிறங்கி உள்ளனர். இப்படம் வருகிற ஜனவரி 11-ந் தேதி ரிலீசாக உள்ளது. இதன் புரமோஷன் பணிகளில் பிசியாக உள்ள இயக்குனர் எச்.வினோத், பல்வேறு பேட்டிகளை கொடுத்து வருகிறார். அதன்படி அடுத்ததாக தனுஷை வைத்து தான் இயக்க உள்ள படம் சதுரங்க வேட்டை படத்தின் பிரம்மாண்ட வெர்ஷன் என்றும் முதலில் இந்த கதையை அஜித்திடம் சொன்னதாகவும், அது நடக்காமல் போனதால் தற்போது தனுஷை வைத்து எடுக்க முடிவு செய்துள்ளதாக எச்.வினோத் தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள்... ராஷ்மிகாவை விட அதிக சம்பளம் கேட்டு அடம்பிடிக்கும் ஜான்வி கபூர்... அதுக்குன்னு இத்தனை கோடியா கேட்குறது?
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.