பிக்பாஸ் நிகழ்ச்சியில் கூட காசு கொடுத்து ஓட்டு வாங்குகிறீர்களா 3 போட்டியாளர்கள்? கிளம்பிய புது சர்ச்சை..!
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள மூன்று போட்டியாளர்கள் பணம் கொடுத்து ஓட்டுக்களை பெற்று வருவதாக தற்போது புதிய சர்ச்சை ஒன்று எழுந்துள்ளது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள மூன்று போட்டியாளர்கள் பணம் கொடுத்து ஓட்டுக்களை பெற்று வருவதாக தற்போது புதிய சர்ச்சை ஒன்று எழுந்துள்ளது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிக் பாஸ் வீட்டிற்குள் அடி எடுத்து வைத்துள்ள சில போட்டியாளர்களுக்கு, வெளியே அவர்களை பற்றி பிரமோட் செய்து மேலாளர்கள் இருந்து வருகின்றனர். அவர்கள் தான், இந்த போட்டியாளர்கள் வெளியே செல்லாமல் பலருக்கு காசு கொடுத்து ஓட்டுக்களை போட்டு, மிகவும் பாடுபட்டு காப்பாற்றி வருவதாக கூறப்படுகிறது.
அந்த வகையில் இந்த சர்ச்சையில் தற்போது தனலட்சுமி, ராம் மற்றும் ஜனனி ஆகியோர் சிக்கி உள்ளனர். இவர்களில் பிரபல கிரிக்கெட் வீரரான ராம், இரண்டு லட்ச ரூபாய் செலவு செய்துள்ளதாகவும், தனலட்சுமி ஐந்து லட்சம் செலவு செய்துள்ளதாகவும், ஜனனி ஒரு லட்சம் வரை செலவு செய்து ஓட்டுக்களை பெற்று வருவதாக கூறப்படுகிறது.
இதன் காரணமாகத்தான் பிக்பாஸ் வீட்டில் ஒண்ணுமே செய்யாமல் இருக்கும் ராம் தற்போது வரை காப்பாற்றப்பட்டு வருவதாகவும்... அதிரடியாகவும், அடாவடியாகவும், நடந்துவரும் தனலட்சுமி பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்க காரணம் என்றும் கூறி வருகின்றனர் நெட்டிசன்கள்.
மேலும் பிக்பாஸ் வீட்டின் உள்ளே வருவதற்கு கூட தன்னிடம் காசு இல்லை, என கண்ணீர் விட்ட தனலட்சுமி தற்போது 5 லட்சம் வரை செலவு செய்வது ஓட்டு வாங்குவது எப்படி என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருவதோடு, மகளை காப்பாற்ற அவனுடைய அம்மாவும் நாடகமாடி வருவதாக விமர்சனம் செய்து வருகிறார்கள். எனினும் வரும் நாட்களில் என்ன நடக்கும் என்பதையும் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
கடந்த வாரம், பிக்பாஸ் வீட்டில் இருந்து குயின்சி வெளியேறிய நிலையில்... இந்த வாரம் டபுள் எவிக்ஷன் நடக்க உள்ளது உறுதி என கூறப்படுகிறது. எனவே இந்த வாரம் என்ன நடக்கும் என்பதையும் பொறுத்திருந்து பார்ப்போம்.
Aishwarya Lekshmi: கருப்பு நிற கோட்டு சூட்டில்... ஸ்டைலிஷ் மங்கையாக மாறிய பொன்னியின் செல்வன் பூங்குழலி!