TRP-யில் அடித்து நொறுக்கி முன்னுக்கு வரும் விஜய் டிவி தொடர்! முதலிடத்தில் எந்த சீரியல் தெரியுமா?
ஒவ்வொரு வாரமும், ரசிகர்கள் மத்தியில் அதிகம் பார்த்து ரசிக்கப்படும் சீரியல் எது என்பது குறித்த தகவல்கள் டிஆர்பி அடிப்படையில் கணிக்கப்படுகிறது. அந்த வகையில் இந்த வருடத்தின் 31 வது வாரத்திற்கான டிஆர்பி ரேட்டிங் குறித்த விபரங்கள் தற்போது வெளியாகி உள்ளது. இதில் டாப் 10 லிஸ்டில் இடம் பிடித்த சீரியல்கள் குறித்து, இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
திரைப்படங்களை விட இல்லத்தரசிகள் மத்தியில் அதிகம் பார்த்து ரசிக்கப்பட்டு வருவது சீரியல்கள் தான். அதிலும் சமீப காலமாக வித்தியாசமான கதைகளத்துடன் மிகவும் விறுவிறுப்பான கதைக்களத்தில் சில சீரியல்கள் ஒளிபரப்பப்படுவதால், இல்லத்தரசிகளை தாண்டி பல இளைஞர்களும் சீரியல்களை விரும்பி பார்க்கிறார்கள். அந்த வகையில் அர்பன் மற்றும் ரூரல் ஏரியாக்களில் அதிகம் பார்க்கப்படும் சீரியல்கள் பற்றி தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது.
இந்த வாரம் முதல் இடத்தில் வழக்கம் போல் 'கயல்' சீரியல் தான் உள்ளது. எழில் பல்வேறு தடைகளை தாண்டி கயலை திருமணம் செய்து கொள்வாரா மாட்டாரா? என்பது குறித்த எபிசோடை சுமார் இரண்டு வாரங்களுக்கு மேலாக ஜவ்வு மிட்டாய் போல் எழுத்து வந்தாலும், இந்த சீரியல் 12.2 புள்ளிகள் உடன் முதல் இடத்தை பிடித்துள்ளது.
இயக்குனர் ஏ.எல்.விஜய்க்கு இவ்வளவு பெரிய மகனா? தீவிர ரஜினி ரசிகர் போலயே... வைரலாகும் கியூட் வீடியோ..!
இதைத்தொடர்ந்து இரண்டாவது இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது 'எதிர்நீச்சல்' சீரியல். ஜீவானந்தம் யார் என்பது தற்போது ஈஸ்வரிக்கு தெரிய வந்துள்ள நிலையில், இதைத்தொடர்ந்து என்ன நடக்கும் என்கிற எதிர்பார்ப்புடன் இந்த சீரியல் நகர்வதால்... அடுதடுத்த நாட்களில் இந்த தொடர் எப்படி நகரும் என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த சீரியல் 11.1 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.
மூன்றாவது இடத்தில் 'வானத்தைப்போல' சீரியல் உள்ளது. துளசி ஏற்கனவே கணவருடன் ஏற்பட்ட பிரச்சனையில் இருந்து மீள்வதற்குள், அடுத்ததாக மற்றொரு பிரச்சனையில் சிக்கியுள்ளார். துளசியின் கவனக்குறைவால், இவரின் உறவினர் ஒருவர்... சொந்த பந்தங்களை பார்க்க வெளியூரில் இருந்து வந்துகொண்டிருக்கும் போது, விபத்தில் சிக்க நேர்கிறது. இதில் மீரா கதாபாத்திரத்தில் நீண்ட இடைவெளிக்கு பின்னர் ரீ-என்ட்ரி கொடுத்த ஷாமிலி உயிரிழந்து விடுகிறார். எனவே இனி எதிர்பாராத திருப்புமுனைகளுடன் இந்த தொடர் நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வாரம் 'வானத்தை போல' சீரியல் 10.39 புள்ளிகளை பெற்றுள்ளது.
ஷாரூக்கானுடன் மிரட்டல் லுக்கில் விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா! வைரலாகும் 'ஜவான்' பட புதிய போஸ்டர்!
இனியா தொடர், இந்த வாரம் 9. 56 புள்ளிகளுடன் நான்காவது இடத்தை பிடித்துள்ளது. இனியாவிடம் எதிர்பாராத விதமாக 15 லட்சம் கிடைக்கவே, அதனை எப்படியும் கைப்பற்ற வேண்டும் என மாமனார் சதி திட்டம் தீட்ட இதை எப்படி இனியா முறியடிப்பார் என்கிற காட்சிகளுடன் பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஒளிபரப்பாகி வருகிறது.
சுந்தரி சீரியல் இந்த வாரம் 9.38 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்தை கைப்பற்றி உள்ளது. ஐஏஎஸ்-ஆக முயற்சித்து வந்த சுந்தரி, தற்போது அதற்கான தேர்வில் வெற்றி பெற்று... நேர்காணலிலும் கலந்து கொள்ளப் போகிறார். இவரை கலந்து கொள்ளவிடாமல் இருக்க சில சதி திட்டம் நடக்கும் நிலையில் இந்த பிரச்னையை எப்படி சுந்தரி சமாளிப்பார் என்கிற எதிர்பார்ப்புடன் இந்த தொடர் ஒளிபரப்பாகி வருகிறது.
மிஸ்டர் மனைவி, தொடர் இந்த வாரம் 9.22 புள்ளிகளுடன் ஆறாவது இடத்தை கைப்பற்றியுள்ளது. பல சீரியல்கள் எமோஷனலாக ஒளிபரப்பாகி வரும் நிலையில், எமோஷனல் மற்றும் காதலுடன் ஒளிபரப்பாகி வருவதால், இந்த தொடர்... துவங்கப்பட்ட சில மாதங்களிலேயே ரசிகர்களின் ஃபேவரட்டாக மாறியுள்ளது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியல் இந்த வாரம் 7. 93 புள்ளிகளுடன் ஏழாவது இடத்திற்கு முன்னேறி உள்ளது. இதற்கு முன்னர் பாக்கியலட்சுமி, பாண்டியன் ஸ்டோர்ஸ், போன்ற சீரியல்களே ஏழாவது இடத்தை பிடித்து வந்த நிலையில்.... அந்த சீரியல்களை அடித்து நொறுக்கி பின்னுக்கு தள்ளி ஓவ்வொரு வாரமும் முன்னணி இடத்தை நோக்கி நகர்ந்து வருகிறது இந்த தொடர்.
எட்டாவது இடத்தில், 7.67 புள்ளிகளுடன் பாக்கியலட்சுமி சீரியல் உள்ளது. தன்னுடைய 25 வருட கல்லூரி கனவை எட்டி பிடித்துள்ளார் பாக்கியலட்சுமி. இவர் படிப்பது இவரின் மகள் இனியாவுக்கு துளியும் பிடிக்கவில்லை. எனினும் மாமியார் என்ன சொன்னாலும் அதற்க்கு கட்டுப்பட்டு நடக்கும் பாக்கியா... மாமியாரை சமாதானம் செய்து படிப்பை தொடர்வாரா? அல்லது பாதியிலேயே படிப்பை கைவிடுவாரா என்கிற பரபரப்பான கட்டத்தில் இந்த சீரியல் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது.
பாண்டியன் ஸ்டோர் சீரியல் 6 .50 புள்ளிகளை புள்ளிகளுடன் ஒன்பதாவது இடத்தை பிடித்துள்ளது. டாப் 5 சீரியல்களில் இடம் பிடித்து வந்த 'பாண்டியன் ஸ்டோர்' சீரியல் சமீப காலமாகவே சற்று விறுவிறுப்பு குறைந்து காணப்படுவதே, டிஆர்பி குறைவுக்கு காரணம் என கூறப்படுகிறது. தற்போது தனம் கேன்சர் டிரீட்மெண்டுக்காக வெளியூருக்கு சென்றுள்ள நிலையில், குடும்பத்தினரை எப்படி சமாளிப்பார் அடுத்தடுத்து வரும் பிரச்சனைகளை எப்படி மேற்கொள்வார் என்பது இந்த சீரியல் மீதான விறுவிறுப்பை அதிகரிக்க செய்துள்ளது.
ஆனந்த ராகம் சீரியல் சன் டிவியில் ஒளிபரப்பாகும் முக்கிய தொடர்களில் ஒன்று. ஆனந்த ராகம் இந்த வாரம் 6.9 புள்ளிகளை பெற்று பத்தாவது இடத்தை பெற்றுள்ளது. ஈஸ்வரி திருமணத்திற்கு எதிராக பலர் சதி திட்டங்கள் தீட்டி வரும் நிலையில், அவை அனைத்தையும் முறியடித்து அழகு சுந்தரத்தை திருமணம் செய்துகொள்வாரா? இல்லையா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.