கிழிந்த பாவாடையில் ஆட்டம் போட்ட தமன்னா! புது பாவாடை வாங்கிக்கொண்டு 'ஜெயிலர்' படம் பார்க்க வந்த பிரபலம்!
ஜெயிலர் படத்தை பார்க்க திரையரங்கம் வந்த, நடிகர் கூல் சுரேஷ் தமன்னாவுக்கு பாவாடை ஒன்றை தைத்து எடுத்து கொண்டு வந்தது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், முதல் முறையாக இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் நடித்துள்ள ஜெயிலர் படம், இன்று உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. ரசிகர்கள் மட்டும் இன்றி பல பிரபலங்களும் இந்த படத்தை பார்த்து வருகிறார்கள். அந்த வகையில் எந்த முன்னணி நடிகரின் படம் வெளியானாலும் , முதல் ஆளாக... முதல் காட்சியை பார்த்து விமர்சனம் தெரிவிக்கும் கூல் சுரேஷ் வழக்கம் போல் இன்று காலை பிரபல திரையரங்கில் படம் பார்க்க வந்த போது, செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது பேசிய அவர்... "தலைவருக்கான எல்லா ரசிகர்களுமே எப்போதும் குரல் கொடுத்து கொண்டு தான் இருப்பார்க. இன்று அவரின் ஜெயிலர் படம் கர்நாடகா, ஆந்திர போன்ற மாநிலங்களில் காலை 6 மணிக்கே ரிலீஸ் ஆகி படம் சூப்பர் ஹிட் என அங்கிருந்தே தகவல்கள் எல்லாம் வந்துச்சு. அங்கு எப்படி ஹிட் அடித்ததோ அதே போல் தமிழகத்திலும் ஹிட் ஆகி உள்ளது. அதற்க்கு காரணம் ரஜினிகாந்தின் ரசிகர்கள் தான். ரஜினி சார் ஒரு கழுகு தான்.
அதே போல் ஜெயிலர் படத்தில் என்னுடைய தங்கை தமன்னா, கிழிந்த பாவாடையோடு டான்ஸ் ஆடி இருக்கிறார். அவருக்கு யாரும் அந்த கிழிந்த பாவாடையை தைத்து கொடுக்க வேண்டும் என தெரியவில்லை. அதனால் அவருக்கு நான் இந்த பாவாடையை தைத்து எடுத்து வந்திருக்கிறேன். தமன்னா தங்கச்சி இனிமேல் நீக்க இந்த பாவாடையை போட்டு கொண்டு டான்ஸ் ஆடுங்க. எல்லாரும் உங்களை பாக்குறாங்க இல்லையா என கூறி, காவாலையா பாட்டை பாடினார்.
அதே போல் கர்நாடகாவில் உள்ள என்னுடைய நண்பரை தொடர்பு கொண்டு நான் பேசியபோது... விசில் சத்தம் பிறந்ததாகவும், இந்த படத்தை இயக்கிய என்னுடைய நண்பரும், இயக்குனருமான நெல்சனுக்கு வாழ்த்துக்கள் என கூறியுள்ளார். அவர் இயக்கிய பீஸ்ட் படம் சரியாக போகவில்லை என்றாலும் இப்படம் நன்றாக உள்ளது. ரஜினிகாந்த் சார் சொன்னது போல் இயக்குனர் எடுத்த ஸ்கிரிப்ட் தான் சருக்குமே தவிர எப்போதும், இயக்குனர் சருக்கா மாட்டார். படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றுள்ளது எனவே கண்டிப்பாக படத்தை பாருங்கள் என கூல் சுரேஷ் தெரிவித்துள்ளார்".