பகை உணர்ச்சியில் விஜய் ரசிகர்கள்.! 'ஜெயிலர்' படத்திற்கு நெகட்டிவ் விமர்சனம் பரப்படுகிறதா? வெடித்த பஞ்சாயத்து!
சூப்பர் ஸ்டார் ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில், இன்று வெளியாகி உள்ள 'ஜெயிலர்' படத்திற்கு, விஜய் ரசிகர்கள் சூப்பர் ஸ்டார் பஞ்சாயத்தை மனதில் வைத்து கொண்டு, பகை உணர்ச்சியுடன் நெகடிவ் விமர்சனங்களை பதிவிட்டு வருவதாக புதிய சர்ச்சை எழுந்துள்ளது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடைசியாக வெளியான 'தர்பார்', 'அண்ணாத்த', ஆகிய படங்கள் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்த நிலையில், இன்று வெளியாகி உள்ள 'ஜெயிலர்' திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்கள் மத்தியிலும், தொடர்ந்து பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது. இன்று காலை முதலே தலைவரின் ரசிகர்கள் ரஜினியின் கட்டவுட்டுக்கு பாலபிஷேகம் செய்தும், திரையரங்கம் முன்பு பட்டாசுகள் வெடித்தும், தாரை தப்பட்டையோடு... இனிப்புகள் வழங்கி படத்தை வரவேற்று வருகிறார்கள்.
தமிழகத்தில் காலை 9 மணிக்கு போடப்பட்ட, FDFS காட்சியை பார்த்த ரசிகர்கள்... மீண்டும் தலைவர் 'ஜெயிலர்' படத்தின் மூலம் மாஸ் என்ட்ரி கொடுத்து, தன்னுடைய வெற்றியை உறுதி செய்துள்ளார் என ஆர்ப்பரித்து வருகின்றனர். அதேபோல் ஜெயிலர் படத்தில், இசையமைப்பாளர் அனிருத் இசையில் இடம் பெற்ற அனைத்து பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்துள்ளது என கொண்டாடி வருகிறார்கள்.
'பீஸ்ட்' படத்தின் மூலம் தோல்வி இயக்குனர் என்கிற விமர்சனங்களுக்கு ஆளான இயக்குனர் நெல்சன் திலீப் குமார், மீண்டும் தன்னுடைய வெற்றியை இப்படத்தின் மூலம் உறுதி செய்துள்ளார். காலை முதலே ரசிகர்கள் மட்டுமின்றி பல பிரபலங்களும் தலைவரின் படத்தை திரையரங்கில் பார்த்து ரசித்து வரும் நிலையில், ஒரு சில விஜய் ரசிகர்கள் வேண்டுமென்றே பகை உணர்ச்சியுடன் ஜெயிலர் படத்திற்கு நெகட்டிவ் விமர்சனங்களை சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருவதாக வெளியாகியுள்ள தகவல் பரபரப்பை எடுத்துள்ளது.
Jailer
ஏற்கனவே அஜித் - விஜய் ரசிகர்களுக்கு இடையே, யார் பெரியவர்கள்? என்கிற போட்டா போட்டி நடந்து கொண்டிருக்கும் நிலையில், விஜய் சூப்பர் ஸ்டார் என கூறிய விவகாரம் தான், விஜய் ரசிகர்களின் பகை உணர்ச்சிக்கு காரணம் என கூறப்படுகிறது. விஜய்யை அவரது ரசிகர்கள், சூப்பர் ஸ்டார் என ஏற்றுக்கொண்டாலும், இதற்கு ரஜினி ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் பலர் சூப்பர் ஸ்டார் என்றால் அது ரஜினிகாந்த் மட்டுமே என்று தங்களுடைய கருத்தை வெளிப்படையாக கூறி வந்தனர்.
மேலும் 'ஜெயிலர்' இசை வெளியீட்டு விழாவில், சூப்பர் ஸ்டார் பட்டம் குறித்து சூசகமாக ரஜினிகாந்த் காக்கா- கழுகு கதை கூறியதும், முரசொலி மாறன் தற்போது தலைவருக்கு 70 வயதாகிறது... அதே 70 வயதில் உங்களுடைய படத்திற்கும் தயாரிப்பாளர்கள் வரிசையில் நின்றால், நீங்களும் சூப்பர் ஸ்டார் என கூறியதும், ரஜினிகாந்த்துக்கு போட்டி அவர் அவர் மட்டுமே என கூறியதும், விஜய்யை சூப்பர் ஸ்டார் என கூறி வந்தவர்களுக்கு பதிலடி கொடுப்பது போல் அமைந்தது.
இந்த விஷயத்தை மனதில் வைத்துக்கொண்டு தான் விஜயின் ரசிகர்கள் சிலர், சமூக வலைதளத்தில் "முதல் பாதி பரவாயில்லை, இரண்டாவது பாதி மிகவும் மோசமாக உள்ளது" என வேண்டுமென்றே நெகடிவ் விமர்சனங்களை பரப்பி வருவதாக, எழுந்துள்ள சர்ச்சை பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் விஜய் ரசிகர்களின் இப்படிப்பட்ட விமர்சனங்களால், 'ஜெயிலர்' படத்தின் வசூல் மற்றும் காட்சிகள் பாதிக்கப்படுமோ? என்ற அச்சமும் எழுந்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் படத்தைப் பார்த்த ரசிகர்கள் அனைவரும், தலைவர் முத்துவேல் பாண்டியன் ஆக தன்னுடைய தரமான வெற்றியை ஜெயிலர் படத்தின் மூலம் கொடுத்துள்ளார் என கூறி வருகின்றனர்.
நடிகர் பரத்தின் ட்வின்ஸ் மகன்களின் 5-ஆவது பிறந்தநாள் கொண்டாட்டம்..! வைரலாகும் போட்டோஸ்..!