MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • மொத்த படமும் அவுட்... முதல் நாளிலேயே ஜெயிலர் படத்துக்கு வந்த மிகப்பெரிய சிக்கல் - அதிர்ச்சியில் படக்குழு

மொத்த படமும் அவுட்... முதல் நாளிலேயே ஜெயிலர் படத்துக்கு வந்த மிகப்பெரிய சிக்கல் - அதிர்ச்சியில் படக்குழு

ரஜினிகாந்த் - நெல்சன் கூட்டணியில் உலகமெங்கும் ரிலீஸ் ஆகி இருக்கும் ஜெயிலர் திரைப்படத்திற்கு முதல் நாளே மிகப்பெரிய சிக்கல் ஏற்பட்டு உள்ளது.

1 Min read
Author : Ganesh A
Published : Aug 10 2023, 01:15 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Jailer

Jailer

2023-ம் ஆண்டு மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஜெயிலர் படமும் ஒன்று. ரஜினிகாந்த் நாயகனாக நடித்துள்ள இப்படம் இன்று உலகமெங்கும் ரிலீஸ் ஆகி உள்ளது. ஜெயிலர் படத்தின் முதல் காட்சி தமிழ்நாட்டில் காலை 9 மணிக்கும், பிற மாநிலங்களில் காலை 6 மணிக்கும் திரையிடப்பட்டது. ஜெயிலர் படம் பார்த்த ரசிகர்கள், படம் மிகவும் மாஸ் ஆக இருப்பதாக கூறி வருகின்றனர். இப்படி பாசிடிவ் விமர்சனங்களை குவித்து வரும் ஜெயிலர் திரைப்படத்திற்கு தற்போது சிக்கல் ஏற்பட்டுள்ளது.

24
Jailer

Jailer

ஜெயிலர் படம் திரையரங்கில் ரிலீஸ் ஆன சில நிமிடங்களிலேயே அப்படம் முழுவதும் பைரசி தளங்களில் திருட்டுத்தனமாக ரிலீஸ் ஆகி இருக்கிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த படக்குழு, அப்படம் பகிரப்படுவதை தடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இப்படி திருட்டுத்தனமாக பைரசி தளங்களில் ஜெயிலர் படம் லீக் ஆகி இருப்பதால், அப்படத்தின் வசூலும் பாதிக்கும் சூழல் உருவாகி இருக்கிறது.

இதையும் படியுங்கள்... விஜய் படத்தால் சறுக்கிய நெல்சன் ரஜினி படத்தில் உயர்ந்து நிற்கிறாரா?... ஜெயிலர் ரிசல்ட் என்ன?

34
Jailer

Jailer

பைரசி தளங்களை ஒழிக்க பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டாலும், அதை முழுவதுமாக ஒழிக்க முடியாமல் அரசும் திணறி வருகிறது. இதுபோன்ற பைரசி தளங்களால் சினிமாவின் வளர்ச்சி கடுமையாக பாதிக்கும் சூழல் உருவாகி உள்ளது. இதுபோன்று திரைப்படங்களை திருட்டுத்தனமாக பைரசி தளங்களில் வெயிடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தும் இதுபோன்ற செயல்கள் தொடந்து வருகிறது.

44
Jailer

Jailer

ஜெயிலர் திரைப்படம் தமிழகத்தில் மட்டும் சுமார் 900 திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி இருக்கிறது. இதுதவிர ஆந்திரா, கர்நாடகா, கேரளா போன்ற மாநிலங்களில் இப்படம் அதிகளவிலான தியேட்டர்களில் வெளியிடப்பட்டு உள்ளன. இந்த சூழலில், முதல் நாளே ஜெயிலர் படத்தை திருட்டுத்தனமாக பைரசி தளங்கள் வெளியிட்டுள்ளதால், அப்படத்தை பெரும் தொகை கொடுத்து வாங்கி உள்ள திரையரங்க உரிமையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 

இதையும் படியுங்கள்... ஒரே தியேட்டரில் FDFS... தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்தை மீண்டும் ஒன்று சேர்த்த ஜெயிலர்

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
நடிகை அஞ்சுவின் கண்ணீர் பக்கங்கள்! 'கேளடி கண்மணி' நட்சத்திரத்தின் சினிமா மற்றும் நிஜ வாழ்க்கை ரகசியம்!
Recommended image2
சிவப்பு மைசூர் சில்க் புடவை.. ஜொலிக்கும் தங்க மயில் நெக்லஸ்! ரிசப்ஷனில் தேவதையாய் மின்னிய ராஷ்மிகா!
Recommended image3
விக்ரம் - விஜி ஜோடியும், லாவண்யாவின் வில்லத்தனமும் – விறுவிறுப்பான திரைக்கதைகளுடன் செல்லமே செல்லமே!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved