இந்த வாரம் புஷ்பா 2 படத்துக்கு போட்டியாக ரிலீஸ் ஆகியுள்ள படங்கள் என்னென்ன தெரியுமா?
ஒவ்வொரு வாரமும், சினிமா ரசிகர்கள் எதிர்பார்ப்புக்கு தீனி போடும் விதத்தில் 4 முதல் 5 படங்கள் ரிலீஸ் ஆகி வருகிறது. அந்த வகையில் நேற்று அல்லு அர்ஜுன் நடிப்பில் புஷ்பா 2 திரைப்படம் வெளியான நிலையில், அந்த படத்துக்கு போட்டியாக களமிறங்கியுள்ள படங்கள் என்னென்ன என்பதை பார்ப்போம்.
புஷ்பா 2:
இந்த வாரம் வெளியான படங்களில் அதிக எதிர்பார்ப்பு நிலவிய திரைப்படம் என்றால் புஷ்பாவுக்கு தான் அதில் எந்த சந்தேகமும் இல்லை. இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் டோலிவுட் ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன் நடித்துள்ள இந்த படம், ப்ரீ புக்கிங்கிலேயே ரூ.100 கோடி வசூலை அள்ளியுள்ள நிலையில் முதல் நாளே 160 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா தான் கதாநாயகியாக நடித்துள்ளார்.
மேலும் மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்துள்ளது. சுமார் 500 கோடி பட்ஜெட்டில் வெளியான இந்த படம், வழக்கம் போல் ஒரு தரப்பினர் மத்தியில் பாசிட்டிவ் விமர்சனங்களையும், மற்றொரு தரப்பினர் மத்தியில் நெகட்டிவ் விமர்சனங்களை பெற்று வந்தாலும், அது இந்த 'புஷ்பா 2' படத்தை பெரிதாக பாதிக்கவில்லை. முதல் நாளே தன்னுடைய வெற்றியை உறுதி செய்துள்ள புஷ்பா 2, ரசிகர்களுக்கான மாஸ் படமாக வெளியாகி இந்த வாரம் வசூலில் புகுந்து விளையாட துவங்கியுள்ளத.
பிளட் அண்ட் பிளாக்:
இன்று டென்ட் கொட்டா ஓடிடி தளத்தில் நேரடியாக ரிலீசாக உள்ள திரைப்படம் 'ஃபேமிலி படம்'. இந்த படத்தை செல்வா குமார் திருமாறன் என்பவர் எழுதி - இயக்கியுள்ளார். கே பாலாஜி தயாரிப்பில் உருவாக்கியுள்ள இந்த படத்தில், உதய கார்த்திக், விவேக் பிரசன்னா, சுபிக்ஷா, உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். திரைப்படம் இயக்க வேண்டும் என நினைக்கும் ஹீரோ அதற்காக பல பேரிடம் கதையை எடுத்து செல்கிறார். ஆனால் அவரின் முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிகிறது. பின்னர் தன்னுடைய குடும்பத்தின் துணையோடு, எப்படி ஒரு படத்தை எடுத்து முடிக்கிறார். அதற்க்கு எப்படியெல்லாம் அண்ணன் - தம்பி உதவுகின்றனர் என்பதை சலிக்காத காமெடி காட்சிகளோடு இயக்கியுள்ளார் செல்வகுமார் திருமாறன். கலகலப்புக்கு பஞ்சம் இல்லாத இந்த திரைப்படம் இந்த வாரம் ஓடிடியில் நேரடியாக வெளியாக உள்ளது.
சன் டிவியின் சூப்பர் ஹிட் சீரியலில் இருந்து வெளியேறிய ஹீரோ! புது ஹீரோ யார் தெரியுமா?
தூவல்:
இயக்குனர் ராஜவேல் கிருஷ்ணா இயக்கத்தில், கமலா குமாரி பாலசுப்ரமணி தயாரிப்பில் வெளியாகி உள்ள திரைப்படம் 'தூவல்'. இந்த படத்தில் ராஜ்குமார் நாகராஜன், இலையா, சிவம் தேவ், நிவாஸ் ராஜவேல், திவ்யா கிருஷ்ணன், ராஜவேல் கிருஷ்ணா, உள்ளிட்ட பல அறிமுக நடிகர்கள் நடித்துள்ளனர். ஆறு மற்றும் மலைப்பிரதேசத்தில் வாழும் மக்களை அடிப்படையாகக் கொண்டு இந்த திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்திற்காக இதுவரை சுமார் 40 விருதுகளை வென்றுள்ளது. இதற்கு முன்பு கடலில் மீன் பிடிக்கும் மீனவர்களின் வாழ்க்கையை திரைப்படமாக பலர் எடுத்திருந்தாலும், ஒரு சிறிய ஆற்றில் மீன் பிடித்து தங்களுடைய வாழ்வாதாரத்தை நடத்தும் மீனவர்கள் மற்றும் அவர்களின் வாழ்வாதாரம் குறித்து எந்த ஒரு படத்திலும் பேசியது இல்லை என்பதால், இப்படம் புதுமையான கதைலத்தில் இணைந்துள்ளது. இந்த படம் டிசம்பர் 6-ஆம் தேதி முதல் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகியுள்ளது.
பிளட் அண்ட் பிளாக்:
இயக்குனர் குரு கார்த்திகேயன் எழுதி இயக்கியுள்ளார் திரைப்படம் 'பிளட் அண்ட் பிளாக்'. இந்த படத்தில் யானி ஜாக்சன், கிஷோராம், சஞ்சய், சுகி விஜய், ஷர்மி, ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர், திருமணம் முடிந்து மலை பிரதேசத்திற்கு ஹானி மூன் செல்லும் ஒரு ஜோடி சைக்கோ கில்லரிடம் சிக்கிக் கொண்டு, தப்பிக்கிறார்களா? இல்லையா என்பதே இந்த படத்தின் கதைக்களம். புதுமையான சைக்கோ திரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்த படம், இன்று முதல் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
டப்பாங் குத்து:
இந்தப் படத்தின் பெயரை கேட்கும் போதே, இது தமிழர்களின் கலாச்சார நடனங்களில் ஒன்று என்பது நமக்கு புரிந்திருக்கும். ஆனால் அதை தவிர்த்து தமிழர்களின் பாரம்பரியமாக பார்க்கப்படும் தாலாட்டு, ஒப்பாரி, கும்மாங்குத்து ஆட்டம், ராஜா ராணி ஆட்டம், நலங்கு, குலசிங்கு, தெருக்கூத்து, நையாண்டி, தூது பாடல், உடுக்கை, குலவை, என 15 வகையான கிராமிய கலைகளை ஒன்று சேர்த்து அதை ஒரு கதையாக உருவாக்கி படமாக்கியுள்ளனர். இந்த படத்தில் சங்கர பாண்டி ஹீரோவாகவும், தீப்தி ராஜ் என்பவர் கதாநாயகியாகவும் நடித்துள்ளார். மேலும் காதல் சுகுமார், ஆன்ட்ரிஸ், துர்கா, உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இன்று இந்த திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ளது. புஷ்பாவுக்கு போட்டியாக வெளியாகி உள்ள இந்த சிறு பட்ஜெட் படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.