MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • ஏ.ஆர்.ரகுமானை அழவைத்த ‘அந்த’ ஒரு பாடல் பற்றி தெரியுமா? டியூன் வாசிக்கும்போதே கண்ணீர் வந்துச்சாம்...!

ஏ.ஆர்.ரகுமானை அழவைத்த ‘அந்த’ ஒரு பாடல் பற்றி தெரியுமா? டியூன் வாசிக்கும்போதே கண்ணீர் வந்துச்சாம்...!

இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் பல சூப்பர் டூப்பர் ஹிட் பாடல்களுக்கு இசையமைத்துள்ளார். அதில் ஒரே ஒரு பாடலுக்கு டியூன் வாசிக்கும்போது மட்டும் அவர் கண்ணீர் விட்டு அழுதிருக்கிறார். அந்த பாடல் பற்றி பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : Feb 12 2026, 01:09 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
AR Rahman Song Secret
Image Credit : X

AR Rahman Song Secret

இந்திய சினிமாவை தன்னுடைய பாடல்களால் கட்டிப்போட்டு வைத்திருப்பவர் ஏ.ஆர்.ரகுமான். இவர் சினிமாவில் அறிமுகமாகி 30 ஆண்டுகளுக்கு மேல் ஆனாலும் இந்த இசைப்புயலின் வேகம் இன்னும் குறையவில்லை. இன்று அதிக படங்களை கைவசம் வைத்திருக்கும் இசையமைப்பாளர் என்றால் அது ஏ.ஆர்.ரகுமான் தான். அவரது கைவசம் தற்போது தமிழ் மட்டுமின்றி, தெலுங்கு, இந்தி போன்ற பிற மொழி படங்களும் உள்ளன. படங்களுக்கு இசையமைப்பது மட்டுமின்றி, பல்வேறு நாடுகளுக்கு சென்று இசைக் கச்சேரிகளையும் நடத்தி, ரசிகர்களை தொடர்ச்சியாக மகிழ்வித்து வருகிறார் ஏ.ஆர்.ரகுமான்.

24
ஏ.ஆர்.ரகுமானின் ராஜ்ஜியம்
Image Credit : X

ஏ.ஆர்.ரகுமானின் ராஜ்ஜியம்

ஏ.ஆர்.ரகுமான் தொட்டதெல்லாம் ஹிட் கொடுத்த காலகட்டம் என்றால் அது 90ஸ் தான். அந்த காலகட்டத்தில் இவரின் பாடல்கள் தான் திரும்பிய பக்கமெல்லாம் ஒலித்துக் கொண்டிருந்தன. அந்த காலகட்டத்தில் அவர் கம்போஸ் செய்த பாடல் ஒன்றைப் பற்றி தான் இந்த தொகுப்பில் பார்க்க உள்ளோம். அப்பாடலை கம்போஸ் செய்து டியூன் வாசித்தபோது தன்னை அறியாமலேயே தான் அழுதுவிட்டதாக இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானே ஒரு நேர்காணலில் கூறி இருக்கிறார். அப்படி ஏ.ஆர்.ரகுமானை ஃபீல் பண்ணி அழவைத்த அந்த உணர்வுப்பூர்வமான காதல் பாடல் இடம்பெற்ற படம் மின்சார கனவு.

Related Articles

Related image1
'என் வார்த்தைகள் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளது'... சர்ச்சைக்கு விளக்கமளித்த ஏ.ஆர்.ரகுமான்
Related image2
ஒரே படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் - இளையராஜா இசையமைத்த கதை தெரியுமா? எல்லா பாட்டுமே சூப்பர் ஹிட்..!
34
மின்சார கனவு பாடல் ரகசியம்
Image Credit : X

மின்சார கனவு பாடல் ரகசியம்

இப்படத்தை ராஜிவ் மேனன் இயக்கியிருந்தார். இப்படத்தில் பிரபுதேவா, கஜோல், அரவிந்த் சாமி ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இப்படத்திற்கு மிகப்பெரிய பிளஸ் ஆக அமைந்திருந்தது ஏ.ஆர்.ரகுமானின் இசையும் பாடல்களும் தான். பூ பூக்கும் ஓசை என ஸ்வேதா மோகனின் குரலில் அப்பாடலைக் கேட்டால் இன்றும் இனிமையாக இருக்கும். அதேபோல் மானா மதுர, அன்பென்ற மழையிலே, தங்கத் தாமரை, ஸ்ட்ராபெரி கண்ணே என ஒவ்வொரு பாடலும் தனி ரகம் என்றே சொல்லலாம். இந்தப் பாடல்கள் இன்றளவும் மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்திருக்கின்றன.

44
ரகுமானை அழவைத்த பாடல்
Image Credit : X

ரகுமானை அழவைத்த பாடல்

மின்சார கனவு படத்திலேயே மற்றுமொரு மாஸ்டர் பீஸ் பாடல் ஒன்று இருக்கிறது. அதுதான் ‘வெண்ணிலவே வெண்ணிலவே’ பாடல். பல்வேறு உணர்வுகள் அடங்கிய பாடலாக அது அமைந்திருக்கும். அப்பாடலுக்காக டியூன் தயார் செய்வது ரகுமானுக்கு மிகப்பெரிய சவாலாக இருந்திருக்கிறது. அந்த சமயத்தில் ரமலான் நோன்பில் இருந்திருக்கிறார் ரகுமான். திடீரென ஒரு டியூன் ஐடியா அவருக்கு கிடைத்திருக்கிறது. உடனே அந்த டியூனை அவர் வாசித்திருக்கிறார். வாசிக்கும்போதே அவருக்கு கண்களில் கண்ணீர் வந்துவிட்டதாம்.

ஏனெனில் இதுதான் நான் எதிர்பார்த்த டியூன் என்கிற மனநிறைவு கிடைத்ததால் தன்னை அறியாமலேயே அழுதிருக்கிறார் ரகுமான். மேலும் அந்தப் பாடலில் யாரும் பெரியளவில் பயன்படுத்திராத டஃப் என்கிற பழங்காலத்து இசைக் கருவியை பயன்படுத்தி இருக்கிறாராம் ரகுமான். அதனால் தான் அப்பாடலும் காலம் கடந்து மக்களின் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கிறது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஏ. ஆர். ரகுமான்
தமிழ்ப் பாடல்கள்

Latest Videos
Recommended Stories
Recommended image1
‘ஊரையே அடக்கி ஆண்ட தேவரய்யா...’ சிவாஜிக்கு இப்படி ஒரு மரணமா..? ரகசியம் உடைத்த கவுண்டமணி..!
Recommended image2
ஆதங்கத்தை கொட்டிய அஞ்சலி... மன்னிப்பு கேட்ட சரவணன்; தங்கமயில் நிலை என்ன? பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 அப்டேட்
Recommended image3
கமல் இப்படிப்பட்டவரா? உதவி கேட்டு சென்றவரை அசிங்கப்படுத்தி அனுப்பிய கமல்? கண்ணீருடன் பகிர்ந்த காமெடி நடிகர்.!
Related Stories
Recommended image1
'என் வார்த்தைகள் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளது'... சர்ச்சைக்கு விளக்கமளித்த ஏ.ஆர்.ரகுமான்
Recommended image2
ஒரே படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் - இளையராஜா இசையமைத்த கதை தெரியுமா? எல்லா பாட்டுமே சூப்பர் ஹிட்..!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved