MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • அந்த ஒரே விஷயத்துக்காக 23 பட வாய்ப்பை இழந்தேன்! நடிகை விந்தியா பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்!

அந்த ஒரே விஷயத்துக்காக 23 பட வாய்ப்பை இழந்தேன்! நடிகை விந்தியா பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்!

நடிகை என்பதை தாண்டி அதிமுக கட்சியில் இணைந்து, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்காக பல்வேறு இடங்களில் பிரச்சாரம் செய்து கவனம் ஈர்த்தவர் நடிகை விந்தியா. இவர் தன்னுடைய திரையுலக பயணம் குறித்து பேட்டி ஒன்றில் கூறியுள்ள தகவலை இந்த படத்திவில் பார்க்கலாம். 

4 Min read
manimegalai a
Published : Sep 03 2024, 04:25 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
Actress Vindhya About Cinema Carrier

Actress Vindhya About Cinema Carrier

தமிழில், நடிகர் ரகுமான் ஹீரோவாக நடித்து 'ரொமான்டிக் மியூசிக்கல் டான்ஸ்' திரைப்படமாக வெளியான 'சங்கமம்' திரைப்படத்தின் மூலம் தன்னுடைய 17 வயதில் ஹீரோயினாக அறிமுகமானவர் விந்தியா. இந்த படத்தை சுரேஷ் கிருஷ்ணா இயக்க, வி நட்ராஜ்... பிரமிட் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் மூலம் தயாரித்திருந்தார்.
 

210
Actress Vindhya Sangamam movie

Actress Vindhya Sangamam movie

இந்த படத்தில் பரதநாட்டிய கலைஞராக நடிகை விந்தியா நடித்து, ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களின் விருப்பத்திற்குரிய நடிகையாக மாறினார். மேலும் இந்த படத்தில் மணிவண்ணன், விஜயகுமார், ராதாரவி, வடிவேலு, டெல்லி கணேஷ், சார்லி, ஸ்ரீவித்யா, தியாகு, உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் நடித்திருந்தனர். 1999-ஆம் ஆண்டு வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் அதிகம் ரசிக்கப்பட்ட சூப்பர் ஹிட் படமாகவும் அமைந்தது.

படுக்கைக்கு அழைத்தாரா மம்மூட்டி; நடிகை சொன்ன பதில் என்ன?

310
Sangamam is romantic musical dance film

Sangamam is romantic musical dance film

கிராமிய இசை, கிராமிய நடனம் இடையேயும்... பரதநாட்டியம் மற்றும் கர்நாடக இசையில் எது சிறந்தது என்று நடக்கும் போட்டியின் இடையே மலரும் அழகிய அழகிய காதலை மையமாக வைத்து உருவானது தான் சங்கமம் திரைப்படம். பாரதநாட்டியமே தெரியாமல் இந்த படத்தில் நடித்து அனைவரையும் கவர்ந்த நடிகை விந்தியா, தற்போது சினிமாவில் இருந்து முழுமையாக விலகி, அரசியலில் ஆர்வம் காட்டி வரும் நிலையில்... பிரபல நடன இயக்குனர் கலா மாஸ்டர், தனியார் youtube சேனலுக்கு இவரிடம் சினிமா அனுபவம் குறித்து பேட்டி கண்டுள்ளார். இதில் விந்தியா இதுவரை ரசிகர்களுக்கு தெரியாத பல தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.

410
Rhythm Movie

Rhythm Movie

இந்த பேட்டியில் விந்தியா கூறியுள்ளதாவது... " எந்த ஒரு சினிமா பின்னணியும் இல்லாத குடும்பத்தில் இருந்து தான் நடிக்க வந்தேன். சென்னையில் தன்னுடைய பெரியம்மாவின் வீடு உள்ளது. ஒரு முறை விடுமுறைக்காக திருப்பதியில் இருந்து சென்னை வந்த போது,  ஒரு பாட்டில் தான் அர்ஜுன் சார் என்னை பார்த்தார். அப்போது அவர் 'ரிதம்' படத்தில் ஜோதிகா நடித்த கதாபாத்திரத்திற்கு தன்னை ஸ்டில்ஸ் எடுக்க வேண்டும் என கூறினார். அம்மாவும் சரி என சம்மதித்தார். வசந்த் சார் தான் என்னை புகைப்படம் எடுத்தார்.

என்னை ஏமாற்றி படங்களில் நடிக்க வைத்தனர்; முதன் முறையாக மனம் திறந்த ஸ்வர்ணமால்யா!

510
Director Vasanth Taken Photos

Director Vasanth Taken Photos

என்னுடைய போட்டோஸ், தயாரிப்பாளர் பிரமிட் நடராஜனின் டேபிளில் இருந்தபோது... சுரேஷ் கிருஷ்ணா தன்னுடைய புகைப்படங்களை பார்த்துவிட்டு, நானும் புதுமுகத்தை தான் தேடி கொண்டிருக்கிறேன்.  இவரை ஏன் சிறிய ரோலுக்கு பயன்படுத்த வேண்டும், என்னிடம் கொடுத்து விடுங்கள் என கேட்டார். இதற்கு வசந்த் சார்... சங்கமம் திரைப்படத்தில் நடித்தால் ரிதம் படத்தில் நடிக்க கூடாது என கூறினார்.  நான் வசந்த் சார் தான் தன்னை புகைப்படம் எடுத்தார். எனவே நான் 'ரிதம்' படத்தில் நடிக்கிறேன் என கூறினேன். பின்னர் வசந்தி மனம் மாறி, விந்தியாவை உங்களின் படத்திலேயே அறிமுகப்படுத்துங்கள் என கூறி சுரேஷ் கிருஷ்ணாவுக்கு விட்டுக்கொடுத்தார் அதன் பின்னரே சங்கமம் படத்தின் நான் நடிப்பது உறுதியானது என கூறினார்.

610
Vindhya First Salary

Vindhya First Salary

விந்தியா முதல் படமாக சங்கமம் படத்திற்கு வாங்கிய சம்பளம் குறித்து கலா கேட்டபோது, "முதல் படத்திற்காக ஒரு லட்சம் வாங்கியதாக கூறினார். கலா மாஸ்டர்.... அதிர்ச்சியுடன், பரவாயில்லையே இதுவரை நான் பல நடிகர்கள் - நடிகைகளிடம் கேட்டபோது 500 ரூபாய், 1000 ரூபாய், 2000 ரூபாய் 2000 ரூபாய் என்று தான் சொல்லி இருக்கிறார்கள். ஆனால் நீ ஒரு லட்சம் வாங்கி இருக்கிறது பெரிய விஷயம் தான் என பாராட்டினார். அந்த ஒரு லட்சத்தை வாங்கியபோது உன்னுடைய அனுபவம் எப்படி இருந்தது? என கேட்டதற்கு... 10 ஆயிரம் ரூபாய் அட்வான்ஸ் கொடுத்தார்கள் என நினைக்கிறேன், மற்றபடி தன்னுடைய அம்மாவிடம் தான் பணம் கொடுக்கப்பட்டது என மிகவும் கூலாக தெரிவித்தார்.

25 டேக்; பின்புறம் சிவக்க சிவக்க அடிச்ச ஹீரோ; வலியால் துடித்த நடிகை - பயில்வான் சொன்ன பகீர் சம்பவம்

710
Rahman and AR Rahman combination

Rahman and AR Rahman combination

சினிமாவில் ஆசைப்பட்டு தான் நடிக்க வந்தாயா? என கலா மாஸ்டர் கேட்டதற்கு... "இல்லை, ஆனால் ஏ.ஆர்.ரகுமான் பாடங்கள் என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும். 'சங்கமம்'  படத்தில் ஏ ஆர் ரகுமானின் இசைக்காகவே நடிக்க ஆர்வம் வந்தது. இந்த படத்தில் தான் முதல் முறையாக ஏ ஆர் ரகுமான் ஒரு கிளாசிக்கல் பாடலுக்கு இசை அமைத்ததாக கூடுதல் தகவலையும் தெரிவித்தார். மேலும் தயாரிப்பாளர், இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா ஆகியோர், தன்னையும் அவர்களுடைய குடும்பத்தில் ஒருவராக தான் பார்த்தார்கள் எந்த ஒரு இடத்திலும் பயத்தை தனக்குள் திணிக்கவில்லை என நெகிழ்ச்சியோடு பேசினார் விந்தியா.

810
Vindhya is not Professional Dancer

Vindhya is not Professional Dancer

அதே போல் இந்த படத்தில் நடிக்கும் போது, தனக்கு கிளாசிக்கல் டான்ஸ் மட்டுமல்ல சாதா டான்ஸ் கூட தெரியாது. தமிழும் பேச வராது. மணிவண்ணன் சார் தான் எனக்கு இப்படத்திற்காக டயலாக் சொல்லி கொடுத்தார். பொதுவாகவே எனக்கு கொஞ்சம் மெம்மரி பவர் அதிகம் என்பதால்... சீக்கிரம் டயலாக் கற்றுக்கொண்டு பேசினேன். ரகு மாஸ்டர் தான் இந்த படத்திற்கு எனக்கு நடனம் சொல்லி கொடுத்தார். ஸ்டெப்ஸ் சரியாக வரவில்லை என கொஞ்சம் திட்டினாலும்... நிறைய கொஞ்சி எப்படியும் என்னை ஆட வைத்துவிடுவார். உண்மையை சொல்லவேண்டும் என்றால் சங்கமம் படத்தில் நான் நடித்து முடியும் வரை தனக்கு டான்ஸ் தெரியாது என கூறியதை கேட்டு, ஆச்சர்யமடைந்த கலா மாஸ்டர், உனக்கு என்ன ஒரு கட்ஸ் பாரதமே தெரியாமல் கிளாசிக்கல் நடனம் குறித்த படத்தை தேர்வு செய்து நடித்துள்ளாய் என கேட்டதற்கு. அந்த கட்ஸ் உண்மையில் சுரேஷ் கிருஷ்ணா மற்றும் தயாரிப்பாளர் நட்ராஜ் சாருக்கு தான் இருந்தது என்றும் 'சங்கமம் படத்தால் சுமார் 23 படங்களில் நடிக்க வந்த வாய்ப்புகளை இழந்ததாகவும் கூறியுள்ளார்.

கர்ப்பமாக இருக்கும் வயிற்றை காட்டியபடி.. தீபிகா படுகோன் வெளியிட்ட பிரக்னன்சி போட்டோ ஷூட்!

910
Vindhya missed 23 Movies

Vindhya missed 23 Movies

'சங்கமம்' படத்தில் நடித்து கொண்டிருக்கும் போதே... இந்த படம் வெளியாகும் வரை எந்த படத்திலும் நடிக்க கூடாது என ஒப்பந்தம் போடப்பட்டது. ஆனால் பெரிய பெரிய தயாரிப்பு நிறுவனங்களில் இருந்து எனக்கு சுமார் 23 படங்களில் நடிக்க வைக்க வாய்ப்புகள் வந்தன. இந்த அக்ரிமெண்ட் காரணமாக அந்த படங்களை இழந்ததாகவும், அதில் சரத்குமார் மற்றும் பிரஷாந்துக்கு ஜோடியாக நடிக்க இருந்த வாய்ப்புகளும் இருந்தது. படம் ரிலீஸ் ஆகாமல் வேறு படத்தில் நடிக்க கூடாது என்பது தயாரிப்பாளர் பிரமிட் நடராஜன் உறுதியாக இருந்தாங்க பேசியுள்ளார்.

1010
Actress Vindhya Memorable movie

Actress Vindhya Memorable movie

இதுவரை நடித்த படங்களில் மறக்க முடியாத படம் குறித்து எழுபட்ட கேள்விக்கு, 'மணிவண்ணன் இயக்கத்தில் வெளியே வராமல் போன படம் குறித்து பேசினார். இரட்டை வேடத்தில் சந்தியா அந்த படத்தில் நடித்ததாகவும் ஹீரோவாக சத்யராஜ் மற்றும் அப்பாஸ் நடித்தார்களாம். பொள்ளாச்சியில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்தது. சத்யராஜ் சார் எப்போதுமே அந்த இடத்தை செம்ம ஜாலியாக வைத்து கொள்வார். ஒரே நாளில் மட்டுமே சுமார் 19 சீன்ஸை ஷூட் செய்து ஆச்சர்யப்படுத்தினார். அவரை பொறுத்தவரை நடிப்பை நம்மிடம் இருந்து வாங்குவார். இப்படம் வெளியாகவில்லை என்றாலும் தன்னால் எப்போது மறக்க நினைவுகளை கொடுத்துள்ளது என பேசியுள்ளார். 

ரக்கட் லுக்கில்... BMW பைக்கில் அமர்ந்து மிரட்டலாக போஸ் கொடுக்கும் ரட்சிதா மகாலட்சுமி!

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
ஏ. ஆர். ரகுமான்

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved