- Home
- Cinema
- Ilaiyaraaja : கோடையில் மழை வரவச்ச இசைஞானியின் பாடல்... இளையராஜா இசைக்கு இப்படியொரு பவரா?
Ilaiyaraaja : கோடையில் மழை வரவச்ச இசைஞானியின் பாடல்... இளையராஜா இசைக்கு இப்படியொரு பவரா?
Ilaiyaraaja Song Secret : இசைஞானி இளையராஜா இசையமைத்த பாடல் ஒன்றினால் கோடை காலத்தில் மழை வெளுத்து வாங்கியதாம். அந்த நிகழ்வு பற்றி இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.

Ilaiyaraaja Song Secret
தமிழ் சினிமாவில் இசை என்றாலே முதலில் நினைவுக்கு வரும் பெயர்களில் முக்கியமானவர் இளையராஜா. ‘அன்னக்கிளி’ திரைப்படத்தின் மூலம் தொடங்கிய அவரது திரைப்பயணம் பல தசாப்தங்களை கடந்து இன்றும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ள அவர், இசைத்துறையில் பல்வேறு சாதனைகளையும் நிகழ்த்தியுள்ளார். இன்றைய சூழலில் ஒரு இசையமைப்பாளர் ஆண்டுக்கு சில படங்களுக்கு இசையமைப்பதே பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது.
ராஜாவின் மேஜிக்
ஆனால், இளையராஜா திரையுலகில் உச்சத்தில் இருந்த காலகட்டத்தில் ஒரே ஆண்டில் 50 படங்களுக்கு இசையமைத்ததாக கூறப்படுகிறது. குறிப்பாக 1980களில் அவரது இசைப்பணி மிகவும் வேகமாக இருந்தது. இளையராஜாவின் பாடல்கள் பல தலைமுறைகளை கடந்து இன்றும் ரசிக்கப்படுவதற்கு அவரது இசையில் இருக்கும் தனித்துவமும் உணர்வுப்பூர்வமான தன்மையும் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. அவரது பாடல்களைச் சுற்றி பல சுவாரஸ்யமான சம்பவங்களும் கூறப்படுவதுண்டு. அந்த வகையில், இளையராஜாவின் இசையால் கோடைக் காலத்தில் மழை பெய்ததாக கூறப்படும் ஒரு சுவாரஸ்யமான சம்பவம் தற்போது கவனம் பெற்றுள்ளது.
அமிர்தவர்ஷினி ராகத்தில் உருவான பாடல்
இளையராஜா ஒரு பாடலை அமிர்தவர்ஷினி ராகத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கியதாக கூறப்படுகிறது. கர்நாடக இசையில் அமிர்தவர்ஷினி ராகம் மழையுடன் தொடர்புடையதாக பாரம்பரியமாக நம்பப்படுகிறது. இந்தப் பாடலைப் பதிவு செய்வதற்காக பிரபல பாடகர்கள் கே.ஜே.யேசுதாஸ் மற்றும் எஸ்.ஜானகி ஆகியோர் ஸ்டூடியோவுக்கு வந்துள்ளனர். பாடல் அமிர்தவர்ஷினி ராகத்தில் அமைந்திருப்பதை அறிந்த அவர்கள், மழை பெய்யவில்லை என்றால் தங்களை யாரும் குறை சொல்லக்கூடாது என இளையராஜாவிடம் நகைச்சுவையாகக் கூறினார்களாம். பாடலின் பதிவு பணிகள் முடிந்த பின்னர், ஸ்டூடியோவை விட்டு வெளியே வந்த எஸ்.ஜானகிக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்ததாம்.
கோடையில் கொட்டிய கனமழை!
அது கோடைக் காலம் மட்டுமின்றி, மதிய நேரம் என்றும் கூறப்படுகிறது. ஆனால், பாடல் பதிவை முடித்துவிட்டு வெளியே வந்தபோது கனமழை பெய்ததாக எஸ்.ஜானகி ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார். குறிப்பாக, வெளியே செல்ல முடியாத அளவுக்கு மழை பெய்ததாக அவர் அந்த அனுபவத்தை நினைவுகூர்ந்துள்ளார். இதனால் அமிர்தவர்ஷினி ராகத்தில் உருவான அந்தப் பாடலுடன் இந்த சம்பவமும் சுவாரஸ்யமாக பேசப்பட்டு வருகிறது.
அந்த பாடல் வேறெதுவுமல்ல; மணிரத்னம் இயக்கத்தில் உருவான ‘அக்னி நட்சத்திரம்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘தூங்காத விழிகள் ரெண்டு’ பாடல் தான். பிரபு மற்றும் கார்த்திக் இணைந்து நடித்த ‘அக்னி நட்சத்திரம்’ திரைப்படத்தின் பாடல்கள் அனைத்தும் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றன. அதில் ‘தூங்காத விழிகள் ரெண்டு’ பாடலுக்குப் பின்னால் இப்படி ஒரு சுவாரஸ்யமான சம்பவம் இருப்பதாக கூறப்படுவது, இளையராஜாவின் இசையைச் சுற்றி இன்றும் பேசப்படும் பல அனுபவங்களில் ஒன்றாக அமைந்துள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

