கமல்ஹாசனின் காஸ்ட்யூம் டிசைனர் இந்த பிரபலத்தின் மனைவிதான்!!
கமலுக்கு வலது கை போல் செயல்படும் பிரபலம் யார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

ஆகச்சிறந்த நடிகராகவும், பன்முக கலைஞராகவும் இருக்கும் சினிமாவில் உச்சத்தை தொட்டிருந்தாலும், அவரின் தனிப்பட்ட வாழ்க்கை சர்ச்சைகள் நிறைந்ததாகவே உள்ளது. 2 மனைவிகளையும் விவாகரத்து செய்தது தொடங்கி பல நடிகைகளுடன் கிசுகிசுக்கப்பட்டது வரை பல சர்ச்சைகளில் சிக்கினார்.
1978 ஆம் ஆண்டு, தனது 24 வயதில், நடனக் கலைஞரான வாணி கணபதியை கமல் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பிறகு, வாணி ஹாசனின் ஆடை வடிவமைப்பாளராக பல படங்களில் பணியாற்றினார். எனினும் பத்து ஆண்டுகளுக்குப் பிறகு அவர்கள் விவாகரத்து செய்தனர்.
பின்னர் நடிகை சரிகாவை கமல்ஹாசன் திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஸ்ருதி ஹாசன், அக்ஷரா ஹாசன் என்ற இரு மகள்கள் உள்ளனர். திருமணத்திற்கு பிறகு நடிப்பதை நிறுத்திவிட்ட சரிகா, கமலின் ஹே ராம் திரைப்படத்தில் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றினார். எனினும் இந்த தம்பதி 2005-ல் விவாகரத்து பெற்று விட்டனர்.
2005 முதல் 2016 வரை, கமல்ஹாசன் நடித்த நடிகை கௌதமியுடன் லின் இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்தார், அப்போது கௌதமி கமல்ஹாசனின் திரை வாழ்க்கையிலும், பிசினஸிலும் பக்க பலமாக இருந்து வந்தார். எனினும் இருவருக்கும் இடையே ஏற்பட்ட மனகசப்பால் கமல்ஹாசனை விட்டு கௌதமி பிரிந்துவிட்டார்.
இதை தொடர்ந்து திரைப்படங்கள், பிக்பாஸ், அரசியல், தேர்தல் என கமல்ஹாசன் பிசியாகிவிட்டார். .
இந்தியன் 2, தக் லைஃப் படங்களுக்கு இவர் தான் ஆடை வடிவமைப்பாளர். அவர் வேறு யாருமில்லை நடிகரும், டான்ஸ் மாஸ்டர் ராம்ஜியின் மனைவி அமிர்தா ராம். ராஜ் டிவியில் புரோடியூசராக இருந்த பல படங்களில் ஆடை வடிவமைப்பாளராக பணிபுரிந்துள்ளார். கமல்ஹாசன் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு அணியும் உடைகளை வடிவமைப்பதும் இவர் தானாம்.