MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • பூ மாலையே முதல்; ஓ மகசீயா வரை - தமிழ் திரையுலகை திருப்பிப்போட்ட வித்யாசமான டாப் 4 பாடல்கள்!

பூ மாலையே முதல்; ஓ மகசீயா வரை - தமிழ் திரையுலகை திருப்பிப்போட்ட வித்யாசமான டாப் 4 பாடல்கள்!

Tamil Songs : தமிழ் சினிமாவை பொறுத்தவரை பாடல்களுக்கு பெரிய அளவில் முக்கியத்துவம் கொடுக்கப்படுவது உண்டு. அந்த வகையில் அக்காலம் முதல் இந்த காலம் வரை வித்தியாசமான பல பாடல்கள் வெளியாகி உள்ளது.

2 Min read
Ansgar R
Published : Nov 10 2024, 06:11 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Pagal Nilavu Movie

Pagal Nilavu Movie

கடந்த 1985 ஆம் ஆண்டு பிரபல இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான திரைப்படம் தான் பகல் நிலவு. இந்த திரைப்படத்தில் பிரபல நடிகர் முரளி மற்றும் ரேவதி ஆகிய இருவரும் நடித்திருப்பார்கள். இளையராஜா இசையில் வெளியான இந்த படம் மிகப்பெரிய அளவில் வரவேற்புகளை பெற்றது. இந்த நிலையில் இந்த திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல் தான் "பூ மாலையே தோள் சேரவா" என்கின்ற பாடல். இந்த பாடல் வெளியாகி கிட்டத்தட்ட 39 ஆண்டுகள் ஆகிவிட்டது என்றாலும் கூட இந்த பாடலுக்கு இன்றளவும் பெரிய வரவேற்பு இருந்து வருகிறது. அது மட்டுமல்லாமல் இந்த பாடலில் ஆணின் குரல் ஒலித்துக் கொண்டிருக்கும் பொழுதே இடையில் பெண்ணின் குரல் இணைந்து கொள்ளும். இதை வாய்ஸ் ஓவர்லேப்பிங் என்று சொல்லுவார்கள். கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கு முன்னதாகவே இந்த பாடலை வாய்ஸ் ஓவர்லாப்பிங் மூலம் செயல்படுத்தி அசத்தியிருப்பார் இளையராஜா.

நாயகன் முதல் தெனாலி வரை; காலத்திற்கும் மறக்கமுடியாத டெல்லி கணேஷின் தரமான 4 கதாபாத்திரங்கள்!

24
Thiruda Thiruda

Thiruda Thiruda

1993 ஆம் ஆண்டு பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் ஏ.ஆர் ரகுமான் இசையில் வெளியான திரைப்படம் தான் "திருடா திருடா". உண்மையில் வித்தியாசமான ஒரு கதைகளத்தை இந்த திரைப்படத்தில் மணிரத்தினம் கையாண்டு இருப்பார். பிரசாந்த் மற்றும் ஆனந்த் ஆகிய இருவரும் கதையின் நாயகர்களாக இந்த திரைப்படத்தில் நடித்திருப்பார்கள். இந்த திரைப்படத்தில் வெளியான அனைத்து பாடல்களும் ஹிட் பாடல்கள் என்றாலும் "ராசாத்தி என் உசுரு என்னதில்ல" என்கின்ற பாடல் காதலர்களை பெரிய அளவில் ரசிக்க வைத்த பாடல். இந்த பாடலை மறைந்த பாடகர் ஷாகுல் ஹமீத் பாடியிருப்பார். ஆனால் அவர் பாடும் பொழுதே பின்னணியில் பெண்ணின் குரல் ஒன்று ஹம்மிங்கில்வந்து கொண்டிருக்கும். இது பாடல் முழுக்க அது தொடரும். உண்மையில் அந்த காலகட்டத்தில் வெளியான பாடல்கள் இருந்து இது தனித்துவமாக தெரிந்தது.

34
Manmadhan Ambu

Manmadhan Ambu

கடந்த 2019 ரவிகுமார் இயக்கத்தில், உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில், தேவி ஸ்ரீ பிரசாத் இசையில், உதயநிதி ஸ்டாலினின் தயாரிப்பில் வெளியான திரைப்படம் தான் "மன்மதன் அம்பு". கமல், மாதவன், திரிஷா, சங்கீதா உள்ளிட்ட பலர் இந்த திரைப்படத்தில் நடித்திருப்பார்கள். இந்த படத்தில் வந்த அனைத்து பாடல்களும் மக்கள் மத்தியில் பெரிய அளவில் புகழ்பெற்றது. இருப்பினும் "நீல வானம்" என்கின்ற காதல் பாடல் இன்றளவும் பலருக்கு ஃபேவரட்டான ஒரு பாடல். ஆனால் இந்த பாடல் முழுக்க முழுக்க ரிவர்சல் அமைந்திருக்கும். ஆகவே பாடல் வரிகளையும் ரிவர்ஸில் எழுதி, அதை பாடி ஒரு புதுமையை கையாண்டிருப்பார்கள் உலகநாயகன் கமலஹாசனும் மற்றும் தேவி ஸ்ரீ பிரசாதும்.

44
Tamizh Padam

Tamizh Padam

சி.எஸ் அமுதன் இயக்கத்தில் கடந்த 2010 ஆம் ஆண்டு இசையமைப்பாளர் கண்ணன் இசையில் வெளியானது தான் தமிழ் படம். ஹாலிவுட் உலகில் பிரபலமான "ஸ்பூப்" என்கின்ற ஒரு விஷயத்தை தமிழ் சினிமாவில் கையாண்ட முதல் திரைப்படம் இதுவென்று கூறினால் அது மிகையல்ல. அதேபோல இந்த திரைப்படத்தில் ஒலிக்கும் ஓமகசீயா என்கின்ற பாடலும் இதுவரை தமிழ் திரையுலகில் அர்த்தம் அறியாமல் பாடப்பட்ட பாடல் வரிகளில் இருந்து எடுக்கப்பட்டு அதை ஒன்றாக கோர்க்கப்பட்டு இந்த பாடல் உருவாக்கப்பட்டது.

நிதி நெருக்கடியில் விஜய்யின் தளபதி 69 படம் – கடன் வாங்கும் நிலையில் தயாரிப்பு நிறுவனம்?

About the Author

AR
Ansgar R
கமல்ஹாசன்

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved