MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • நிதி நெருக்கடியில் விஜய்யின் தளபதி 69 படம் – கடன் வாங்கும் நிலையில் தயாரிப்பு நிறுவனம்?

நிதி நெருக்கடியில் விஜய்யின் தளபதி 69 படம் – கடன் வாங்கும் நிலையில் தயாரிப்பு நிறுவனம்?

Thalapathy 69 is in Financial Crisis : விஜய்யின் தளபதி 69 படம் நிதி நெருக்கடியால் டிராப் ஆகும் நிலைக்கு தள்ளப்பட இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

2 Min read
Author : Rsiva kumar
| Updated : Nov 10 2024, 09:52 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Thalapathy 69

Thalapathy 69

Thalapathy 69 is in Financial Crisis : கோட் படத்தின் வெற்றிக்கு பிறகு விஜய் தனது கடைசி படமான தளபதி 69 படத்தில் நடித்து வருகிறார். இயக்குனர் ஹெச் வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். மேலும், பாபி தியோல், கவுதம் வாசுதேவ் மேனன், பிரகாஷ் ராஜ், நரைன், பிரியாமணி, மமிதா பைஜூ, மோனிஷா பிளெசி, சமந்தா ஆகியோர் பலர் நடித்து வருகின்றனர். அனிருத் இசையமைக்கிறார். கேவிஎன் புரோடக்‌ஷன்ஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரிக்கிறது.

இந்தப் படத்திற்கு விஜய்க்கு ரூ.275 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், பூஜா ஹெக்டேவிற்கு ரூ.6 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.  இந்தப் படமானது தெலுங்கு சினிமாவி நடிகர் பாலகிருஷ்ணா நடிப்பில் திரைக்கு வந்த பகவந்த் கேசரி படத்தின் தமிழ் ரீமேக் என்று சொல்லப்படுகிறது. முழுக்க முழுக்க அரசியல் பின்னணி கதையை மையப்படுத்திய இந்தப் படத்தில் விஜய் அரசியல்வாதியாக நடிப்பதாக நம்பத் தகுந்த வட்டாரத்திலிருந்து தகவல் கசிந்துள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
Thalapathy 69

Thalapathy 69

இந்தப் படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் பூஜையுடன் தொடங்கியது. கேரளாவில் உள்ள பையனூரில் பாடல் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது. இதற்காக பிரமாண்டமாக செட் அமைக்கப்பட்டு பாடல் காட்சிகள் படமாக்கப்பட்டிருக்கிறது. இதில் விஜய் மற்றும் பூஜா ஹெக்டே இருவரும் நடித்துள்ளனர். சேகர் மாஸ்டர் நடனம் அமைத்து கொடுத்துள்ளார்.

இதைத் தொடர்ந்து தற்போது சென்னையில் 2ஆவது கட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது. இது விஜய்யின் கடைசி படம் என்பதால் படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ஏனென்றால், தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கி முதல் மாநாட்டையும் வெற்றிகரமாக நடத்தி முடித்த தளபதி விஜய் 2026 சட்டமன்ற தேர்தலில் களமிறங்க இருக்கிறார். இதற்காக நாடு முழுவதும் தீவிரமாக பிரச்சாரம் மேற்கொள்ளவும் தன்னை தயார்படுத்தி வருகிறார்.

35
Vijay, Thalapathy 69

Vijay, Thalapathy 69

இதற்கு முதல் வெற்றியே விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் மாநாடு தான். இது ஒருபுறம் இருக்க தளபதி 69 படத்திற்கு நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகவும், படம் கிடப்பில் போடப்பட இருப்பதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது. சினிமாவைப் பொறுத்த வரையில் எந்த ஒரு தயாரிப்பாளரும் பைனான்சியரிடமிருந்து பணம் பெற்று தான் படம் எடுப்பார்கள். படத்தின் வியாபாரத்திற்கு பிறகு வரும் பணத்தை வைத்து பைனான்சியர்களுக்கு செட்டில் பண்ணுவார்கள்.

45
Thalapathy 69

Thalapathy 69

இது காலம் காலமாக நடைமுறையில் இருக்கும் ஒரு பழக்கம். தளபதி 69 படத்தை தயாரிக்கும் கேவிஎன் நிறுவனம் பல தயாரிப்பாளர்களுக்கு பைனான்சும் செய்து வருகிறது. இதுவரையில் ரூ.250 கோடிக்கும் அதிகமாகவே கடன் கொடுத்திருக்கிறதாம். ஆனால், அந்த பணமெல்லாம் இன்னும் திரும்ப வரவில்லையாம். அந்த பணத்தை நம்பி தான் தளபதி 69 படத்தை தயாரிக்க முடிவு செய்திருந்ததாக சொல்லப்படுகிறது.

55
Thalapathy 69 Movie

Thalapathy 69 Movie

இதன் காரணமாக தளபதி 69 படத்தை எடுத்து முடிக்க பணமில்லாமல் திணறி வரும் கேவிஎன் நிறுவனம் தற்போது மதுரையைச் சேர்ந்த சினிமா ஃபைனான்சியரான அன்புச் செழியனிடம் பணம் கடனாக கேட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. அப்படி பணம் கிடைக்கும் பட்சத்தில் தளபதி 69 படத்தை மேற்கொண்டு திட்டமிட்டபடி எடுத்து முடிக்க முடிவு செய்துள்ளதாகவும், இல்லையென்றால் குறிப்பிட்ட காலம் கிடப்பில் போடப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.
தளபதி விஜய்
விஜய் (நடிகர்)
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
329 & 387
AUSAUS
429
Day 4
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Enemy Of The Smuggler Review : எனிமி ஆஃப் தி ஸ்மக்ளர் மிரட்டலா? சொதப்பலா? முழு விமர்சனம் இதோ
Recommended image2
Akshitha : பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறுகிறாரா அக்‌ஷிதா? டாஸ்கின் போது திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு
Recommended image3
Food: அனிருத் இளமையாக இருப்பதற்கு இதுதான் காரணமா? சைவ உணவின் ரகசியம் என்ன? 10 வயது குறைவாக தோற்றமளிக்க உதவும் உணவுகள்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved