MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • 'விடுதலை 2' படத்தை மிஸ் பண்ணாமல் பார்க்க வேண்டிய 5 காரணம்!

'விடுதலை 2' படத்தை மிஸ் பண்ணாமல் பார்க்க வேண்டிய 5 காரணம்!

சூரி - விஜய் சேதுபதி நடிப்பில், ரசிகர்கள் மத்தியில் அதிகம் எதிர்பார்ப்பக்கட்ட விடுதலை 2 திரைப்படம், இன்று வெளியாகியுள்ள நிலையில், இந்த படத்தை கட்டாயம் பார்க்கவேண்டிய 5 காரணங்கள் குறித்து பார்ப்போம்.  

3 Min read
Author : manimegalai a
| Updated : Dec 20 2024, 12:21 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Viduthalai Movie

Viduthalai Movie

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் 2023-ஆம் ஆண்டு வெளியான, 'விடுதலை' படத்தின் முதல் பாகத்தை தொடர்ந்து வெளியாகியுள்ள 2-ஆம் பாக திரைப்படம் தான் 'விடுதலை 2'. ஜெயமோகன் எழுதிய துணைவன் என்கிற, சிறுகதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தில், ஹீரோவாக சூரி நடிக்க, விஜய் சேதுபதி வாத்தியார் என்கிற முன்னிலை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இன்று காலை 9:00 மணிக்கு 
அரசு அனுமதியோடு ஸ்பெஷல் ஷோ வெளியிடப்பட்ட நிலையில், இந்த படத்தை பார்க்க வேண்டிய 5 முக்கிய காரணங்களை பார்ப்போம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
Vetrimaran Direction:

Vetrimaran Direction:

வெற்றிமாறனின் தரமான இயக்கம்:

வாழ்வியலோடு கலந்த, கதைகளை உயிரோட்டத்துடன் ரசிகர்களுக்கு விருந்தாகும் வித்தகர் வெற்றிமாறன். இவர் இயக்கிய பொல்லாதவன், ஆடுகளம், விசாரணை, வடசென்னை, அசுரன், மற்றும் விடுதலை 2 வரை அவரின் தனித்துவமான இயக்கம் ரசிகர்கள் உணர்வுகளை தூண்டும் விதத்தில் அமைந்திருக்கும் . அதே போல் ஒரு எதார்த்தமான அணுகுமுறையால் தாக்கத்தை ஏற்படுத்த கூடியவர். 'விடுதலை' படத்தின் முதல் பாகத்திலேயே எப்போது அடுத்த பாகம் வெளியாகும் என ஆர்வத்தை தூண்டிய வெற்றிமாறன், இரண்டாவது பாகத்தை எப்படி இயக்கி உள்ளார் என்பதை மிஸ் பண்ணாமல் பார்க்க வேண்டும்.

கோலிவுட்டின் அடுத்த மாஸ்டர் பீஸ் படமாக அமைந்ததா விடுதலை 2? விமர்சனம் இதோ

36
Soori And Vijay Sethupathy Performance

Soori And Vijay Sethupathy Performance

நடிகர்களின் உழைப்பும் - தரமான நடிப்பும்:

எப்படி பாலா இயக்கத்தில் பணியாற்றுவது மிகவும் கடினம் என பல நடிகர்கள் வாய்விட்டு சொல்லி விடுகிறார்களோ... அதே போல் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிப்பதும் கடினமான ஒன்றே. ஆனால் அவர் செட்டில் நடிகர்களை திட்டுவார் இவர் துணை இயக்குனர்களை திட்டியே நடிகர்களிடம் வேலையை வாங்கி விடுவார் என கூறுவார்கள். இருவரும் தாங்கள் எதிர்பார்த்த நடிப்பது நடிகர்களிடம் கிடைக்கவில்லை என்றால் 1 வாரம் ஆனாலும் விடாமல் ரீடேக் எடுத்து ஒரு வழி செய்து விடுவார்கள். இவர்களின் இந்த அணுகுமுறை கூட... இவர்களின் படங்களுக்கு தனி அடையாளத்தை கொடுத்திருக்கலாம்.

இப்படி பட்ட இயக்குனர் வெற்றிமாறன் கையில், விஜய் சேதுபதி, மஞ்சு வாரியர், தினேஷ் போன்ற ஃபேர் ஃபாம்மெர்ஸ் கிடைத்தால் எப்படி அவர்களை நடிக்க வைத்திருப்பர்? சொல்லவா வேண்டும் வேறு லெவலில் இருக்கும். அதே போல் நடிகர் சூரி காமெடியனாக இருந்து ஹீரோவாக மாறி இருப்பதால் அதிகம் மெனக்கெட்டு தான் இந்த படத்தில் நடித்துள்ளார். எனவே இந்த படத்தில் நடிகர்களின் நடிப்பும், இப்படத்திற்காக அவர்கள் போட்டிருக்கும் உழைப்பையும் கண்டிப்பாக வெள்ளித்திரையில் பார்த்து ரசிக்க வேண்டும்.
 

46
Viduthalai 2 Movie Gripping Social Commentary

Viduthalai 2 Movie Gripping Social Commentary

சமூக பிரச்னையை பேசியுள்ள படம்:

கமெர்ஷியம் திரைப்படங்களை விட, சமூக பிரச்னையை பற்றியும் ஒடுக்கப்பட்ட மக்களை பற்றியும் எடுக்கப்படும் படங்கள், கடந்த சில வருடங்களாகவே அதிகம் கவனம் பெற்று வருகின்றன. அதே பாணியில் தான், 'விடுதலை 2' படத்தின் கதையும் நகர்கிறது. போலீஸ் கான்ஸ்டேபிளாக சூரி நடிக்க, விஜய் சேதுபதி ஒரு போராளியாக நடித்துள்ளார். முதல் பாகத்தில் விஜய் சேதுபதியை ஒரு போராளி என்று மட்டுமே காட்சிப்படுத்திய இயக்குனர், இந்த பாகத்தில் அவர் என்ன நோக்கத்திற்காக தன்னுடைய மக்களுக்காக போராட வருகிறார் என்று ஒரு முக்கிய சமூக பிரச்னையை பேசியுள்ளார். இதுவும் இந்த படத்தை பார்க்க வேண்டிய முக்கிய காரணங்களில் ஒன்று.

சூப்பர் ஹிட் சீரியலில் இருந்து திடீர் என விலகும் கதாநாயகன்! யாரும் எதிர்பாராத காரணம்?

56
Viduthalai 2 Movie Visuals:

Viduthalai 2 Movie Visuals:

விடுதலை 2 விஷுவல்ஸ்:

ஒரு படத்தின் தரத்தை உறுதி செய்வது அந்த படத்தின் ஒளி மற்றும் ஒலி தான். எவ்வளவு அற்புதமான கதையாக இருந்தாலும், இந்த இரண்டும் சரி இல்லை என்றால், கோடிக்கணக்கில் பணம் செலவழித்து எடுத்தாலும் அந்த படம் வெகு சுலபமாக தோல்வியை சந்திக்க நேரிடும். வெற்றிமாறனை பொறுத்தவரை, அவரின் கதைகள் பேசுவதை தாண்டி அவர் படத்தில் இடம்பெறும் காட்சிகளும் பேசும். இதனை 'விடுதலை 2' ட்ரைலரிலேயே நிரூபித்திருந்தார் வேல்ராஜ். 

ஒளிப்பதிவாளர் வேல் ராஜ் 'விடுதலை 2' படத்திற்கு தன்னுடைய ஒளிப்பதிவு மூலம் உயிர்கொடுத்துள்ளது போல், ஜிவி பிரகாஷின் இசை, இப்படத்திற்கு முதுகெலும்பாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. 

66
Viduthalai Movie Climax

Viduthalai Movie Climax

முடிவின் மீதான ஆர்வம்?

முதல் பாகத்தில் எந்த இடத்தில் இந்த படத்தை முடித்தாரோ இயக்குனர் 'வெற்றிமாறன்' அதே இடத்தில் இருந்து தான் இரண்டாம் பாகத்தை துவங்கியுள்ளார். 'விடுதலை' முதல் பாதியின் கிளைமேக்சில் ரசிகர்களை சீட் நுனியில் அமர வைத்த கிளிஃப்ஹேங்கர் காட்சிக்கு பின்னர் என்ன நடந்தது? இந்த படத்தின் முடிவு என்ன என்பதை அறிந்து கொள்ளும் ஆர்வம் அதிகரித்துள்ளதால், அந்த எதிர்பார்ப்புக்கு தீனி போடும் விதத்தில் எடுக்கப்பட்டுள்ள இரண்டாம் பாகத்தை கண்டிப்பாக திரையரங்கில் மிஸ் பண்ணாமல் ரசிகர்கள் பார்க்க வேண்டும்.

சூப்பர் ஹிட் சீரியலில் இருந்து திடீர் என விலகும் கதாநாயகன்! யாரும் எதிர்பாராத காரணம்?
 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
விஜய் சேதுபதி
சூரி (நடிகர்)
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
329
AUSAUS
(90.0 ov)330/4
Day 2
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
NZNZ
Fri, 30 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›

Recommended Stories
Recommended image1
Sai Pallavi : நல்லா சமைக்கத் தெரியணும்! வருங்கால கணவருக்கு சாய் பல்லவி வைத்த கண்டிஷன்கள் என்னென்ன?
Recommended image2
Actor Dhanush Political Entry: 234 தொகுதிகளிலும்... நடிகர் தனுஷ் அடுத்த திட்டம்.! அரசியலை நோக்கிய சைலன்ட் மூவ்?
Recommended image3
Ramayana First Review : பிரம்மாண்டத்தின் உச்சமா?... வெறும் பில்டப்பா? ராமாயணா முதல் விமர்சனம் வந்தாச்சு..!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved