MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Mohan : பிளாப் ஆக இருந்த மைக் மோகனின் படம்... பட்டி டிங்கரிங் செய்து பிளாக்பஸ்டர் ஹிட்டாக்கிய தியேட்டர் ஓனர்..!

Mohan : பிளாப் ஆக இருந்த மைக் மோகனின் படம்... பட்டி டிங்கரிங் செய்து பிளாக்பஸ்டர் ஹிட்டாக்கிய தியேட்டர் ஓனர்..!

Mike Mohan : மதுரையை சேர்ந்த தியேட்டர் ஓனர் ஒருவர் செய்த மாற்றத்தால் மைக் மோகனின் படம் பிளாக்பஸ்டர் ஹிட்டாகி இருக்கிறது. அது எந்தப் படம் என்பதை விரிவாக பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : Oct 01 2026, 09:56 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
தியேட்டர் ஓனர் செய்த தரமான சம்பவம்
Image Credit : IMDB

தியேட்டர் ஓனர் செய்த தரமான சம்பவம்

ஒரு திரைப்படம் வெற்றி பெறுவதற்கு கதை, நடிப்பு, இசை, இயக்கம் என பல காரணிகள் முக்கியமாக இருக்கும். ஆனால், ஒரு தியேட்டர் உரிமையாளர் செய்த வித்தியாசமான முயற்சியால் ஒரு படம் எதிர்பாராத வகையில் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்று மிகப்பெரிய வெற்றியை அடைந்த சம்பவம் தமிழ் சினிமாவில் நடந்துள்ளது.

1986-ம் ஆண்டு ஏவிஎம் தயாரிப்பில் வெளியான திரைப்படம் ‘மெல்ல திறந்தது கதவு’. மோகன், ராதா, அமலா, விசு, கமலா காமேஷ், செந்தில் உள்ளிட்டோர் நடித்திருந்த இந்தப் படத்திற்கு ஆர்.சுந்தர்ராஜன் இயக்குநராக இருந்தார். ஏவிஎம் நிறுவனத்தின் தயாரிப்பில் மோகன் நடித்த முதல் படமாகவும் இது அமைந்தது.

படத்திற்கு இசையமைத்தவர் எம்.எஸ்.விஸ்வநாதன். அதேசமயம், படத்தில் இடம்பெற்ற ‘குழல் ஊதும் கண்ணனுக்கு’ பாடலுக்கு இளையராஜா இசையமைத்திருந்தார். இந்தப் பாடலும் பின்னர் படத்தின் முக்கியமான அடையாளங்களில் ஒன்றாக மாறியது.

அந்த கேரக்டரா? நோ வே.. கோட் பட மைக் மோகன் கதாபாத்திரம் - ரிஜெக்ட் செய்த இரு டாப் ஹீரோஸ்!

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
வித்தியாசமான காதல் கதை
Image Credit : IMDB

வித்தியாசமான காதல் கதை

படத்தின் கதையில் மோகன், அமலாவை காதலிப்பார். ஆனால், அமலாவின் முகத்தை அவர் நேரில் பார்த்திருக்க மாட்டார். இருவரும் சந்திக்க முடிவு செய்யும் தருணத்தில் எதிர்பாராத விதமாக அமலா புதைகுழியில் சிக்கி உயிரிழந்துவிடுவார். இந்த சம்பவம் மோகனின் வாழ்க்கையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அதன் பிறகு திருமணம் குறித்த எண்ணமே அவருக்கு இல்லாமல் போகிறது.

இதற்கிடையில் மோகனை ராதா காதலிக்கத் தொடங்குகிறார். மோகனின் தந்தை அவரது திருமணத்துக்கு ஏற்பாடு செய்தாலும், அமலாவை இழந்த துயரத்தில் இருக்கும் மோகன் அதற்கு சம்மதிக்க மறுக்கிறார். ஒரு கட்டத்தில் ராதாவும் அதே புதைகுழியில் விழுந்து தனது உயிரை மாய்த்துக்கொள்ள முயற்சிக்கிறார். ஆனால், மோகன் அவரை காப்பாற்றுகிறார். இதன் பின்னர் இருவரும் ஒன்றிணைவதுதான் கதையின் முக்கியமான திருப்பமாக அமைகிறது.

34
படத்தை காப்பாற்றிய தியேட்டர் உரிமையாளர்!
Image Credit : IMDB

படத்தை காப்பாற்றிய தியேட்டர் உரிமையாளர்!

படம் வெளியான ஆரம்ப வாரங்களில் எதிர்பார்த்த அளவுக்கு பெரிய வரவேற்பு கிடைக்கவில்லை என கூறப்படுகிறது. அப்போது மதுரையில் உள்ள ஒரு திரையரங்க உரிமையாளர் எடுத்த முடிவு படத்தின் வெற்றிப் பாதையையே மாற்றியதாக சொல்லப்படுகிறது.

படத்தின் முதல் பாதிக்குப் பதிலாக இரண்டாம் பாதியை முதலில் திரையிட்டிருக்கிறார் அந்த தியேட்டர் உரிமையாளர். இதனால் ரசிகர்களிடையே படத்தின் மீதான ஆர்வம் அதிகரித்ததாகவும், தொடர்ந்து படம் குறித்த பேச்சு மக்களிடம் பரவியதாகவும் கூறப்படுகிறது.

அதன்பிறகு தமிழ்நாடு முழுவதும் ‘மெல்ல திறந்தது கதவு’ திரைப்படத்தை மாற்றி திரையிட்டுள்ளனர். இதன்பின்னரே திரையரங்குகளில் வரவேற்பு அதிகரிக்கத் தொடங்கியதாம். ஆரம்பத்தில் சுமாராக சென்ற படம் பின்னர் ரசிகர்களின் ஆதரவுடன் மிகப்பெரிய வெற்றிப்படமாக மாறியது.

44
சென்சாரிலும் நடந்த சுவாரஸ்யம்!
Image Credit : IMDB

சென்சாரிலும் நடந்த சுவாரஸ்யம்!

படம் வெற்றியடைந்த பின்னர், ஏவிஎம் நிறுவனம் திரைப்படத்தை மீண்டும் சென்சார் சான்றிதழுக்காக அனுப்பியதாகவும் கூறப்படுகிறது. அப்போது சென்சார் அதிகாரி ஒருவர் படத்தின் தலைப்பை வைத்து நகைச்சுவையாக, “இப்போ என்ன டைட்டில்... ‘மெல்ல திறந்தது கதவா?’, இல்லை ‘கதவு திறந்தது மெல்லவா?’” என்று கிண்டலாகக் கேட்டாராம்.

இப்படி, ஒரு காலத்தில் பெரிய வரவேற்பு கிடைக்காமல் இருந்ததாகக் கூறப்பட்ட ‘மெல்ல திறந்தது கதவு’, ஒரு திரையரங்க உரிமையாளரின் வித்தியாசமான முயற்சிக்குப் பிறகு ரசிகர்களிடம் பேசுபொருளாகி வெற்றிப்படமாக மாறியதாக சொல்லப்படும் இந்த சம்பவம், தமிழ் சினிமாவின் சுவாரஸ்யமான திரையரங்க அனுபவங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.

மணிரத்னம் படத்துக்கே நோ சொன்ன மைக் மோகன்.. அப்படி என்ன பிரச்சனை? எந்த படம் தெரியுமா?

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தமிழ் சினிமா
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Baththa Review : விஜய் சேதுபதி பந்தயம் அடித்தாரா? பல்பு வாங்கினாரா? பத்தா விமர்சனம் இதோ
Recommended image2
Siragadikka Aasai : விஜயாவை டார்ச்சர் பண்ணும் பாட்டி... அண்ணாமலையின் உத்தரவால் வீட்டை விட்டு வெளியேறும் முத்து - மீனா
Recommended image3
சிறகடிக்க ஆசை vs பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 : ஜெராக்ஸ் எடுத்ததுபோல் ரெண்டு சீரியலுக்கும் இவ்ளோ ஒற்றுமையா?
Related Stories
Recommended image1
14 ஆண்டுகளுக்கு பிறகு..முதல் முறையாக ஆக்ஷன் ஹீரோவான மைக் மோகன்..
Recommended image2
Mohan new movie: வேற லெவல் டைட்டிலுடன் ஹீரோவாக மீண்டும் ரீஎன்ட்ரி கொடுக்கும் மைக் மோகன்! வெளியான சூப்பர் தகவல்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved