Mohan new movie: வேற லெவல் டைட்டிலுடன் ஹீரோவாக மீண்டும் ரீஎன்ட்ரி கொடுக்கும் மைக் மோகன்! வெளியான சூப்பர் தகவல்
தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வருவார் என அனைத்து ரசிகர்களாலும் எதிர்பார்க்கப்பட்ட ஹீரோக்களில் ஒருவர் நடிகர் மோகன் (Actor mohan). மிக குறுகிய காலத்தில் அதிக படங்களில் நடித்தது மட்டும் இன்றி இவர் நடித்த படங்கள் சூப்பர் ஹிட் வெற்றியும் பெற்றது. இந்நிலையில் இவர் நீண்ட இடைவெளிக்கு பின்னர் மீண்டும், ஹீரோவாக நடிக்க உள்ள தமிழ் படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வருவார் என அனைத்து ரசிகர்களாலும் எதிர்பார்க்கப்பட்ட ஹீரோக்களில் ஒருவர் நடிகர் மோகன். மிக குறுகிய காலத்தில் அதிக படங்களில் நடித்தது மட்டும் இன்றி இவர் நடித்த படங்கள் சூப்பர் ஹிட் வெற்றியும் பெற்றது. இந்நிலையில் இவர் நீண்ட இடைவெளிக்கு பின்னர் மீண்டும், ஹீரோவாக நடிக்க உள்ள தமிழ் படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
'மூடு பனி' என்கிற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் மைக் மோகன். இந்த படத்தை தொடர்ந்து இவர் நடிப்பில் வெளியான, 'நெஞ்சத்தை கிள்ளாதே' திரைப்படம் 365 நாட்கள் ஓடி சாதனை படைத்தது. இதை தொடர்ந்து வெளியான கிளிசல்கள், பயணங்கள் முடிவதில்லை, கோபுரங்கள் செய்வதில்லை போன்ற படங்கள், ஒரு வருடத்திற்கு மிகாமல் ஓடி, தமிழ் சினிமாவில் இவரை நிலைக்க செய்தது.
மிக குறுகிய காலத்தில் எப்படி முன்னணி இடத்தை இவர் பிடித்தாரோ, அதே வேகத்தில் திரையுலகத்தி விட்டும் விலகினார். இவர் மீது காதல் கொண்ட நடிகை ஒருவர் காதலை வெளிப்படையாக கூறியும் இவர் ஏற்று கொள்ளாததால், இவருக்கு எ....ஸ் நோய் இருப்பதாக கூறி விட்டுஅந்த நடிகை ஜாலியாக திரையுலகிற்கு டாட்டா காட்டிவிட்டு திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார்.
ஆனால் இவரின் திரையுலக வாழ்க்கை பாழாய் போனது. எனினும் நடிகை சொன்னதை பொய்யாக்கும் விதத்தால், தற்போது வரை நடிகர் மோகன் மிகவும் ஆரோக்கியமாக வாழ்ந்து தான் வருகிறார். இந்நிலையில் இவர் கடந்த 2008 ஆம் ஆண்டு, 'சுட்டப்பழம்' என்கிற படத்தில் நடித்தார். ஆனால் அந்த திரைப்படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெறவில்லை. இதை தொடர்ந்து இவர் நடிப்பில், கன்னடம் தெலுங்கு, ஆகிய மொழிகளில் வெளியான திரைப்படமும் பெரிதாக வெற்றிபெறவில்லை.
கடைசியாக கடந்த 2016 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான Abbayitho Ammayi என்கிற படத்தில் கதாநாயகிக்கு அப்பாவாக நடித்தார். அதன் பின்னர் எந்த படங்களிலும் நடிக்காமல் இருந்து வந்த நிலையில், தற்போது மீண்டும் தமிழ் சினிமாவில் ஹீரோவாக ரீ-என்ட்ரி கொடுக்க உள்ளார். இதுகுறித்த அதிகார பூர்வ தகவல், டைட்டிலுடன் வெளியாகியுள்ளது. 'சில்வர் ஜூபிலி ஸ்டார்' என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தை, 'தாதா7' என்ற படத்தை இயக்கிய விஜய் ஸ்ரீ இயக்க உள்ளார். இந்த படத்தின் வித்தியாசமான போஸ்டர் நேற்று கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு வெளியானது குறிப்பிடத்தக்கது.