மணிரத்னம் படத்துக்கே நோ சொன்ன மைக் மோகன்.. அப்படி என்ன பிரச்சனை? எந்த படம் தெரியுமா?
Actor Mohan : தற்போது வெளியாகியுள்ள தளபதி விஜயின் கோட் திரைப்பட ட்ரைலரில், மிரட்டல் வில்லனாக வந்து அசத்தியிருக்கிறார் மூத்த தமிழ் திரையுலக நடிகர் மோகன்.
Actor Mohan
கடந்த 1980ம் ஆண்டு தமிழில் வெளியான "மூடுபனி" என்கின்ற திரைப்படத்தின் மூலம் தனது கலை உலக பயணத்தை தொடங்கிய கன்னட நடிகர் தான் மோகன். என்ன தான் கர்நாடகாவில் பிறந்து வளர்ந்திருந்தாலும், தமிழைத் தவிர இவர் பிற மொழிகளில் குறைந்த அளவிலேயே படங்களில் அவர் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2000வது ஆண்டுக்குப் பிறகு பெரிய அளவில் திரைப்படங்களில் நடிக்காத அவர், தற்பொழுது மீண்டும் திரையுலகில் களமிறங்கி சிறப்பாக நடித்து வருகிறார்.
Actor Mic Mohan
இந்நிலையில் தனக்கும், இயக்குனர் மணிரத்தினத்துக்கும் இடையே நடந்த சுவாரசியமான சம்பவம் குறித்து அண்மையில் மனம் திறந்துள்ளார் நடிகர் மோகன். இயக்குனர் மணிரத்தினம் கன்னட மொழி திரைப்படங்கள் மூலம் இயக்குனராக களமிறங்கியவர். தமிழில் முரளி நடிப்பில் கடந்த 1985ம் ஆண்டு வெளியான "பகல் நிலவு" என்கின்ற படத்தின் மூலம் கோலிவுட் இயக்குனராக அவர் மாறினார். தமிழில் அவருக்கு ஆரம்ப காலகட்டத்தில் மிகப்பெரிய ஹிட் கொடுத்த 2 படங்கள் என்றால் அது "இதய கோவில்" மற்றும் "மௌன ராகம்" தான். இந்த இரு படங்களிலும் நாயகனாக நடித்தது மோகன் என்பது குறிப்பிடத்தக்கது.
Director Maniratnam
அப்படி இருக்க, கடந்த 1990ம் ஆண்டு பிரபல நடிகர் ரகுவரன் மற்றும் ரேவதி நடிப்பில் வெளியான "அஞ்சலி" என்கின்ற திரைப்படத்தில் நடிக்க முதலில் நாயகனாக மணிரத்தினம் தேர்வு செய்தது மோனை தான். ஆனால் அந்த திரைப்படத்தில் தன்னால் நடிக்க முடியாது என்று மோகன், மணிரத்தினம் அவர்களிடமே கூறியிருக்கிறார். அது ஏன் என்பது குறித்து தான் அண்மையில் அவர் பங்கேற்ற ஒரு பேட்டியில் மனம் திறந்து இருக்கிறார்.
Anjali Movie
"அஞ்சலி" திரைப்படம் மன வளர்ச்சி இல்லாத ஒரு சிறிய குழந்தையை பற்றிய கதை. அந்த திரைப்படத்தில் அனைத்து விஷயங்களுமே எதார்த்தமாக மக்களுக்கு பிடிக்கும் வண்ணம் எடுக்கப்பட்டிருந்தது. ஆனால் மனம் நலம் பாதிக்கப்பட்ட குழந்தையை தனி அறையில் அந்த தாயும், தந்தையும் வைத்து வளர்ப்பது போன்ற காட்சிகள் அந்த திரைப்படத்தில் இடம்பெற்றது. அந்த ஒரு விஷயம் எனக்கு உடன்படாத நிலையில் நான் அந்த திரைப்படத்தில் நடிக்க மறுத்துவிட்டேன் என்று கூறியிருக்கிறார் மோகன்.
"என்ன யாராலும் தடுக்க முடியாது" புதிய லீடராக வரும் தளபதி விஜய் - சர வெடியாக வெடிக்கும் GOAT ட்ரைலர்!