புதுசு கண்ணா புதுசு; இந்த வாரம் தியேட்டர் & ஓடிடியில் ரிலீசாகும் படங்களின் லிஸ்ட் இதோ
பொங்கல் ரிலீஸ் படங்களுக்கு போட்டியாக ஜனவரி 17ந் தேதி தியேட்டர் மற்றும் ஓடிடியில் என்னென்ன தமிழ் படங்கள் ரிலீஸ் ஆகி உள்ளது என்பதை பார்க்கலாம்.
Theatre and OTT Release Tamil Movies on January 17
தமிழ் சினிமாவுக்கு 2025-ம் ஆண்டு போட்டி நிறைந்த ஆண்டாக தொடங்கி உள்ளது. இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு அரை டஜன் படங்கள் போட்டிபோட்டு ரிலீஸ் ஆகின. இதில் பாக்ஸ் ஆபிஸில் பட்டைய கிளப்பி வருவது விஷாலின் மதகஜராஜா திரைப்படம் தான். பொங்கல் ரிலீஸ் படங்கள் தியேட்டர்களை ஆக்கிரமித்துள்ளதால் இந்த வாரம் 2 புதுப் படங்கள் மட்டுமே ரிலீஸ் ஆகி உள்ளன. ஆனால் ஓடிடியில் நான்கு தமிழ் படங்கள் களமிறங்கி உள்ளன. அது என்னென்ன படங்கள் என்பதை பார்க்கலாம்.
soodhu kavvum 2
சூது கவ்வும் 2
விஜய் சேதுபதியின் கெரியரில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய படங்களில் சூது கவ்வும் திரைப்படமும் ஒன்று. அப்படத்தின் இரண்டாம் பாகம் கடந்த மாதம் திரைக்கு வந்தது. இப்படத்தை அர்ஜுன் இயக்கி இருந்தார். இப்படத்தில் மிர்ச்சி சிவா நாயகனாக நடித்திருந்தார். ஆனால் இப்படம் வந்த வேகத்தில் காணாமல் போனது. தியேட்டரில் சொதப்பிய சூது கவ்வும் 2 திரைப்படம் இந்த வாரம் ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆகி உள்ளது.
Alangu
அலங்கு
குணாநிதி, செம்பியன் வினோத், காளி வெங்கட் ஆகியோர் நடிப்பில் கடந்த மாதம் திரைக்கு வந்த படம் அலங்கு. இப்படத்தை எஸ்.பி.சக்திவேல் இயக்கி இருந்தார். இப்படம் மனிதனுக்கும், நாய்க்கும் இடையேயான உறவை மையமாக வைத்து எடுக்கப்பட்டது. இப்படத்தை அன்புமணியின் மகள் சங்கமித்ரா தயாரித்துள்ளார். இப்படம் இன்று முதல் அமேசான் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம் ஆகி வருகிறது.
இதையும் படியுங்கள்... பாக்ஸ் ஆபிஸில் வாஷ் அவுட் ஆன பொங்கல் ரிலீஸ் படங்கள்! காரணம் என்ன?
Family Padam
ஃபேமிலி படம்
செல்வக்குமார் திருமாறன் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் ஃபேமிலி படம். இப்படத்தில் விவேக் பிரசன்னா நயாகனாக நடித்திருக்கிறார். அனிவீ இசையமைத்துள்ள இப்படத்திற்கு மெய்யேந்திரன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இப்பட,ம் இன்று முதல் ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம் ஆகி வருகிறது.
Once Upon a Time In Madras
ஒன்ஸ் அப்பான் ஏ டைம் இன் மெட்ராஸ்
பரத் நடிப்பில் உருவாகி இருக்கும் திரில்லர் திரைப்படம் தான் ஒன்ஸ் அப்பான் ஏ டைம் இன் மெட்ராஸ். இப்படத்தில் பரத்துக்கு ஜோடியாக நடிகை அஞ்சலி நாயர் நடித்துள்ளார். மேலும் அபிராமி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தை பிரசாத் முருகன் இயக்கி இருக்கிறார். இப்படம் இன்று ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது.
Theatre Release Movies
தியேட்டர் ரிலீஸ் தமிழ் படங்கள்
ஜனவரி 17ந் தேதி இரண்டு புதுப்படங்கள் தியேட்டரில் ரிலீஸ் ஆகி உள்ளன. அதில் ஒன்று சிதறிய பக்கங்கள். இப்படத்தை பூபேந்திர ராஜா இயக்கி உள்ளார். இப்படத்திற்கு தினேஷ் இசையமைத்துள்ளார். அதேபோல் இன்று தமிழ்நாட்டில் ரிலீஸ் ஆகியுள்ள மற்றொரு திரைப்படம் டாக்கு மகாராஜா. பாலகிருஷ்ணா நடிப்பில் வெளியாகி தெலுங்கில் சக்கைப்போடு போட்டு வரும் இப்படம் இன்று முதல் தமிழில் டப்பிங் செய்யப்பட்டு ரிலீஸ் ஆகி உள்ளது.
இதையும் படியுங்கள்... மூன்றே படத்தில் 3000 கோடி வசூல் அள்ளிய ஒரே ஹீரோயின்! யார் இந்த பாக்ஸ் ஆபிஸ் குயின்?