பாக்ஸ் ஆபிஸில் வாஷ் அவுட் ஆன பொங்கல் ரிலீஸ் படங்கள்! காரணம் என்ன?
பொங்கல் பண்டிகைக்கு இந்த ஆண்டு ரிலீஸ் ஆன வணங்கான், நேசிப்பாயா, கேம் சேஞ்சர், காதலிக்க நேரமில்லை ஆகிய திரைப்படங்கள் பாக்ஸ் ஆபிஸில் செம்ம அடி வாங்கி உள்ளது.
Pongal Release Movies Box Office
2025-ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கிய கேம் சேஞ்சர், பாலா - அருண் விஜய் கூட்டணியில் உருவான வணங்கான், கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ரவி மோகன் நடித்த காதலிக்க நேரமில்லை, விஷ்ணு வர்தன் இயக்கத்தில் ஷங்கர் மகள் அதிதியும், முரளி மகன் ஆகாஷும் நடித்துள்ள நேசிப்பாயா மற்றும் விஷால் - சுந்தர் சி கூட்டணியில் 12 ஆண்டுகளுக்கு முன் எடுக்கப்பட்ட மதகஜராஜா ஆகிய படங்கள் திரைக்கு வந்தன. அந்த படங்களின் தமிழ்நாடு பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் பற்றி பார்க்கலாம்.
Game Changer Box Office
கேம் சேஞ்சர்
பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண், கியாரா அத்வானி நடிப்பில் உருவான படம் கேம் சேஞ்சர். இப்படத்தை தில் ராஜு தயாரித்திருந்தார். இப்படத்தின் தமிழ்நாடு ரிலீஸ் உரிமை மட்டும் ரூ.25 கோடிக்கு விற்பனை ஆனதாம். இப்படம் நஷ்டமின்றி தப்பிக்க 50 கோடி வசூலிக்க வேண்டும். ஆனால் இதுவரை இப்படம் தமிழ்நாட்டில் வெறும் 7 கோடி மட்டுமே வசூலித்துள்ளது. இதே நிலை நீடித்தால் இப்படம் 10 கோடி தாண்டுவதே கடினம் என கூறப்படுகிறது.
Vanangaan Box Office
வணங்கான்
பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடித்த படம் வணங்கான். இப்படத்தை சுரேஷ் காமாட்சி தயாரித்திருந்தார். இப்படம் தமிழ்நாட்டில் இதுவரை வெறும் 4 கோடியே 69 லட்சம் மட்டுமே வசூலித்துள்ளது. இதில் வணங்கான் திரைப்படம் ஒரு நாளில் கூட தமிழ்நாட்டில் ஒரு கோடி வசூலிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்.... மூன்றே படத்தில் 3000 கோடி வசூல் அள்ளிய ஒரே ஹீரோயின்! யார் இந்த பாக்ஸ் ஆபிஸ் குயின்?
kadhalikka neramillai Box Office
காதலிக்க நேரமில்லை
உதயநிதி ஸ்டாலினின் மனைவி கிருத்திகா இயக்கத்தில் ரவி மோகன் நாயகனாக நடித்த படம் காதலிக்க நேரமில்லை. இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இப்படம் ஜனவரி 14ந் தேதி ரிலீஸ் ஆனது. வணங்கான், கேம் சேஞ்சர் படங்களோடு ஒப்பிடுகையில் இப்படம் பாக்ஸ் ஆபிஸில் சற்று அதிகம் வசூலித்துள்ளது. இப்படம் இரண்டு நாட்களில் ரூ.3.3 கோடி வசூலித்துள்ளது.
Nesippaya Box Office
நேசிப்பாயா
அஜித்தை வைத்து பில்லா, ஆரம்பம் போன்ற மாஸ் ஹிட் படங்களை இயக்கிய விஷ்ணுவர்தன், நீண்ட இடைவெளிக்கு பின்னர் தமிழில் இயக்கிய படம் நேசிப்பாயா. இப்படத்தின் மூலம் முரளியின் மகன் ஆகாஷ் நாயகனாக அறிமுகமாகி இருக்கிறார். இதில் அதிதி ஷங்கர் ஹீரோயினாக நடித்துள்ளார். இப்படம் இரண்டு நாட்களில் ஒரு கோடி மட்டுமே வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.
Madha Gaja Raja Box Office
பொங்கல் வின்னர்
மேற்கண்ட 4 படங்களும் பாக்ஸ் ஆபிஸில் பயங்கர அடி வாங்கியதற்கு முக்கிய காரணமாக அமைந்தது விஷாலின் மதகஜராஜா திரைப்படம் தான். 12 வருடத்திற்கு முன்னர் எடுத்த படம் இவ்வளவு பெரிய ஹிட் ஆகும் என யாருமே நினைத்துகூட பார்த்திருக்க மாட்டார்கள். இந்த வருடத்தின் பொங்கல் வின்னர் மதகஜராஜா தான். இப்படம் தமிழ்நாடு பாக்ஸ் ஆபிஸில் கிட்டத்தட்ட 4 நாட்களில் 16 கோடிக்கு மேல் வசூலித்து மாஸ் காட்டி இருக்கிறது. இப்படத்திற்கு தற்போது தியேட்டர்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டதால் தான் மற்றபடங்கள் வசூலில் செம்ம அடி வாங்கி உள்ளன.
இதையும் படியுங்கள்.... ரஜினி படத்தின் லைஃப் டைம் வசூல் சாதனையை 4 நாட்களில் காலி செய்த மதகஜராஜா!