2-ஆவது தேசிய விருது வாங்கிய ஜிவி பிரகாஷுக்கு ஏ.ஆர்.ரகுமான் கொடுத்த விலை மதிப்பற்ற பரிசு!
GV Prakash: இசையமைப்பாளரும் - நடிகருமான ஜிவி பிரகாஷ், தன்னுடைய தாய் மாமா ஏ.ஆர்.ரகுமான் கொடுத்த விலை மதிப்பற்ற பரிசு குறித்து அறிவித்துள்ளார்.

ஜிவி பிரகாஷ் இசை பயணம்:
தமிழ் சினிமாவில் தன்னுடைய மாமாவும், இசையமைப்பாளருமான ஏ.ஆர்.ரகுமான் இசையில், 'ஜென்டில்மேன்' படத்தில் இடம்பெற்ற சிக்கு புக்கு ரயிலு பாடலை பாடியதன் மூலம் குழந்தை பின்னணி பாடகராக பிரபலமானவர் ஜிவி பிரகாஷ். இதை தொடர்ந்து, தன்னுடைய இசை ஆர்வத்தை வளர்த்துக்கொண்டு, 2006 ஆம் ஆண்டு, வசந்தபாலன் இயக்கத்தில் வெளியான 'வெயில்' திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக என்ட்ரி கொடுத்தார்.
ஹீரோவாக அறிமுகம்:
முதல் படத்திலேயே ஜிவி பிரகாஷின் இசை ஒட்டு மொத்த ரசிகர்களையும் கவர்ந்தது. இதை தொடர்ந்து ஓரம் போ, கிரீடம், பொல்லாதவன், எவனோ ஒருவன், காளை, குசேலன், என அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைக்கும் வாய்ப்பை பெற்றார். முன்னணி இசையமைப்பாளராக இருக்கும் போதே... யாரும் எதிர்பாராத விதமாக 2015-ஆம் ஆண்டு, 'டார்லிங்' படத்தில் ஹீரோவாக நடித்தார். ஹாரர் காமெடியில் உருவான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றி பெற்றது.
2-ஆவது தேசிய விருது
தற்போது ஒரு நடிகராக மட்டும் இன்றி இசையமைப்பாளராகவும் கோலிவுட்டில் வெற்றி பெற்றுள்ள ஜிவி பிரகாஷ், சமீபத்தில் 'வாத்தி' படத்திற்கு இசையமைத்ததற்காக கிடைத்த 2-ஆவது தேசிய விருதை பாராட்டி, தன்னுடைய தாய் மாமாவான ஏ.ஆர்.ரகுமான் கொடுத்த விலைமதிப்பற்ற பரிசு குறித்து... மிகவும் எமோஷ்னலாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் வெளியிட்டு தெரிவித்துள்ளார்.
ஏ.ஆர் ரகுமான் கொடுத்த பரிசு:
அதாவது, ஏ.ஆர்.ரகுமான் ஜிவி பிரகாஷுக்கு மிகவும் பிடித்த... அவர் பயன்படுத்திய வெள்ளை நிற Pianoவை பரிசாக கொடுத்துள்ளாராம். விலை உயர்ந்த எத்தனையோ பியானோவை ஜிவி எளிதாக வாங்கலாம் என்றாலும், பல ஹிட் பாடல்கள் ஏ.ஆர்.ரகுமான் கைகளால் உருவாக அவர் பயன்படுத்திய இந்த பியானோ விலைமதிப்பற்றதாகவே பார்க்கப்படுகிறது.
முதல் தேசிய விருது:
ஜிவி பிரகாஷ், ஏற்கனவே கடந்த 2020-ஆம் ஆண்டு, சூர்யா நடிப்பில்... சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான 'சூரரை போற்று' படத்தில் இசையமைத்ததற்காக தன்னுடைய முதல் தேசிய விருதை வாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.