MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • மாயாஜாலம் செய்த 'வான் நிலா' பாட்டு! எழுதியதும் மெட்டுப் போட்டதும் யார் தெரியுமா?! காதலர்களின் இதயத் துடிப்பாய் மாறிய ஒரு பாடலின் கதை.!

மாயாஜாலம் செய்த 'வான் நிலா' பாட்டு! எழுதியதும் மெட்டுப் போட்டதும் யார் தெரியுமா?! காதலர்களின் இதயத் துடிப்பாய் மாறிய ஒரு பாடலின் கதை.!

1977-ல் வெளியான 'பட்டினப்பிரவேசம்' திரைப்படத்தின் 'வான் நிலா நிலா அல்ல' பாடல் உருவான கதையை இக்கட்டுரை விவரிக்கிறது. கே. பாலசந்தரின் உருவாக்கம், எம்.எஸ்.வி-யின் இசை, கண்ணதாசனின் வரிகள், மற்றும் எஸ்.பி.பி-யின் குரல் ஆகியவை இப்பாடலை காவியமாக மாற்றியது.

2 Min read
Author : Vedarethinam Ramalingam
Published : Feb 15 2026, 01:46 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
காதலர்களின் இதயத் துடிப்பாய் மாறிய ஒரு பாடலின் கதை!
Image Credit : facebook

காதலர்களின் இதயத் துடிப்பாய் மாறிய ஒரு பாடலின் கதை!

தமிழ் திரையிசை வரலாற்றில் சில பாடல்கள் ரசிக்கப்படும், சில பாடல்கள் கொண்டாடப்படும். ஆனால், ஒரு சில பாடல்கள் மட்டுமே காலத்தின் சுவடுகளை அழித்துவிட்டு, தலைமுறைகள் தாண்டியும் நம் இதயத் துடிப்போடு கலந்திருக்கும். அந்த வரிசையில், 1977-ஆம் ஆண்டு செப்டம்பர் 9-ம் தேதி வெளியான 'பட்டினப்பிரவேசம்' திரைப்படத்தில் இடம்பெற்ற ‘வான் நிலா நிலா அல்ல...’ பாடலுக்கு என்றுமே ஒரு தனி சிம்மாசனம் உண்டு.

25
பாலசந்தரின் ரசனையும்... எம்.எஸ்.வி-யின் மகுடமும்!
Image Credit : GOOGLE

பாலசந்தரின் ரசனையும்... எம்.எஸ்.வி-யின் மகுடமும்!

இயக்குநர் சிகரம் கே. பாலசந்தர் ஒரு பாடலுக்கான சூழலை உருவாக்கும்போதே, அதில் ஒரு புதுமையைப் புகுத்துவதில் வல்லவர். "இப்படியொரு பாடல் வேண்டும்" என்று அவர் அடம் பிடித்துக் கேட்க, அதற்கு அட்சர சுத்தமாக மெட்டுப் போட்டுக் கொடுத்தவர் மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதன்.

பாடலின் தொடக்கத்திலேயே நம் செவிகளை வருடி, இதயத்தின் ஏதோ ஒரு மூலையைத் தொடும் அந்த வயலின் இசை இருக்கிறதே... அது ஒரு தனி ராஜ்ஜியம்! அந்த வயலினை வாசித்த கலைஞர் (எம்.எஸ்.வி குழுவின் முதன்மை வயலின் கலைஞர்) இசைக்கோர்ப்பு முழுவதும் ஒரு நிழல் பாடகராகவே பயணித்திருப்பார்.

Related Articles

Related image1
ஒரே ராகத்தில் இளையராஜா அடித்த ‘சிக்ஸர்கள்’! இசைஞானி நிகழ்த்திய இசை மாயாஜாலம் இதுதான்!
Related image2
Ilayaraja Music: ஒரே ஒரு கருவி; ஒன்பதாயிரம் உணர்வுகள்.! இளையராஜாவின் படைத்த காலத்தால் அழியாத இசை விருந்து!
35
கவியரசரின் 'லா' வரிசை வித்தை
Image Credit : Google

கவியரசரின் 'லா' வரிசை வித்தை

இந்த மெட்டுக்கு உயிர்கொடுக்க வந்த கவியரசர் கண்ணதாசன், சொற்களைக் கொண்டு ஜாலம் செய்திருப்பார். பாடலின் ஒவ்வொரு வரியையும் 'லா' என்ற எழுத்தில் முடித்து, ஒரு விதமான தாள நயத்தை வரிகளிலேயே கொண்டு வந்திருப்பார். 

"தெய்வம் கல்லிலா? ஒரு தோகையின் சொல்லிலா? பொன்னிலா? பொட்டிலா? புன்னகை மொட்டிலா?"

என்று அவர் அடுக்கிய கேள்விகள், காதலை ஒரு தெய்வீக நிலைக்குக் கொண்டு சென்றன. "நீயில்லாத நாளெல்லாம் நான் தேய்ந்த வெண்ணிலா" என்ற ஒற்றை வரியில் ஒரு காதலனின் மொத்த ஏக்கத்தையும் பிழிந்து கொடுத்திருப்பார் கவிஞர்.

45
எஸ்.பி.பி - குரலில் தேன் தடவிய மாயக்காரன்!
Image Credit : our own

எஸ்.பி.பி - குரலில் தேன் தடவிய மாயக்காரன்!

இந்தக் கூட்டணியின் உச்சகட்டமாக, தனது காந்தக் குரலால் அந்தப் பாடலை அமரத்துவம் பெறச் செய்தவர் எஸ்.பி. பாலசுப்ரமணியம். குறிப்பாக, "சொந்தம் இருளிலா? ஒரு பூவையின் அருளிலா?" என்று பாடும்போது, 'அருளிலா' என்ற இடத்தில் அவர் காட்டும் அந்தச் சிறு குழைவும், சிலிர்ப்பும் இன்றும் கேட்பவர்களை மெய்மறக்கச் செய்யும்.

55
எல்லோருக்கும் பிடித்த நிலா பாட்டு
Image Credit : Google

எல்லோருக்கும் பிடித்த நிலா பாட்டு

விசுவின் கதை-வசனத்தில், டெல்லி கணேஷ், ஜெய்கணேஷ், சிவச்சந்திரன், சரத்பாபு எனப் பல நட்சத்திரங்கள் நடித்திருந்தாலும், 'பட்டினப்பிரவேசம்' என்றாலே நம் நினைவுக்கு முதலில் வருவது இந்த 'வான் நிலா' தான்.

பாடல் வெளியாகி 50 ஆண்டுகளைக் கடந்த பின்னரும், இன்றும் இரவு நேரப் பயணங்களிலும், தனிமைத் தருணங்களிலும் இந்தப் பாடல் நமக்கு ஒரு 'தனி சுகம்'. எம்.எஸ்.வி-யின் இசை, கண்ணதாசனின் வரிகள், எஸ்.பி.பி-யின் குரல் என மூன்றும் சங்கமித்த இந்த 'முக்கனி' விருந்து, என்றும் தெவிட்டாத ஒரு இசை அதிசயம்!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

VR
Vedarethinam Ramalingam
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 17 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். சன் தொலைக்காட்சி, தந்தி டிவி பணியாற்றியுள்ள இவர், ஏசியாநெட் நியூஸ் தமிழில் இணைந்துள்ளார். வணிகம், முதலீடுகள் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். எதிர்கால தேவைகளுக்குக்கு முதலீடு அவசியம் என்பதை அடித்தட்டு மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் எழுதி வருகிறார். இயற்கை விவசாயம் குறித்த படைப்புகளை படைப்பதிலும் கைதேர்ந்தவர்.
இசை
சினிமா
திரைப்பட விமர்சனம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
சூப்பர் ஸ்டார் படங்களின் ஆஸ்தான தயாரிப்பாளர் காலமானார்.! தலைவரின் 'பணக்காரன்' முதல் 'பாட்ஷா' வரை தந்த ஜாம்பவான் மறைவு.!
Recommended image2
Ayyanar Thunai: உயிருக்கே ஆபத்து! கூரையை பிரித்து வீட்டிற்குள் குதித்த சோழன் - சிக்கப் போவது யார்?
Recommended image3
எம்.ஜி.ஆர் பாட்டுன்னா முதல்வர் ஸ்டாலினுக்கு அவ்ளோ இஷ்டமா? - வெளியே வராத அந்த 'மியூசிக்' பிளாஷ்பேக்!
Related Stories
Recommended image1
ஒரே ராகத்தில் இளையராஜா அடித்த ‘சிக்ஸர்கள்’! இசைஞானி நிகழ்த்திய இசை மாயாஜாலம் இதுதான்!
Recommended image2
Ilayaraja Music: ஒரே ஒரு கருவி; ஒன்பதாயிரம் உணர்வுகள்.! இளையராஜாவின் படைத்த காலத்தால் அழியாத இசை விருந்து!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved