தி லெஜண்ட் 4வது நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? முதல் படத்திலேயே மாஸ் காட்டிய சரவணன் அருள்
உலகம் முழுவதும் 2500க்கும் மேற்பட்ட திரையரங்குகளிலும் தமிழ்நாட்டில் 650 திரையரங்குகளிலும் வெளியானது. இப்படம் ரூபாய் 45 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ளதால் 65 கோடி வசூல் செய்தால்வெற்றி பெற்றதாக கருதப்படும் என்று கூறப்படுகிறது.
The Legend Movie Review
சரவணன் அருள் நாயகனாக நடித்துள்ள முதல் படமான தி லெஜெண்ட் அறிவியல் புனைக்கதையாக உருவாகியுள்ளது. கடந்த 28ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி பாராட்டுகளை பெற்றுள்ள இந்த படத்தை ஜேடி ஜெர்ரி என இரட்டை இயக்குனர்கள் இயக்கியுள்ளனர். இதன் மூலம் ஊர்வசி ரவுத்தேலா கோலிவுட்டுக்கு அறிமுகமாகியுள்ளார். விவேக், யோகி பாபு, பிரபு, நாசர், கோவை சரளா ,சங்கர், மயில்சாமி ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு...சர்ச்சைக்கு உள்ளான மஹா.. இரண்டே வாரத்தில் ஓடிடி -க்கு வரும் ஹன்சிகாவின் படம்
The Legend Movie Review
முதல் வாரத்தில் உலகம் முழுவதும் ஆறு கோடி வசூல் செய்ததாக தகவல் தெரிவிக்கின்றன. படம் வெளியான முதல் நாளில் 2 கோடி ரூபாய் வசூல் ஆனது. சரவணன் அருள் தனது சொந்த பேனரின் தயாரித்திருந்த தி லெஜண்ட் உலகம் முழுவதும் 2500க்கும் மேற்பட்ட திரையரங்குகளிலும் தமிழ்நாட்டில் மட்டும் 650 திரையரங்குகளிலும் வெளியானது. இப்படம் ரூபாய் 45 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ளதால் 65 கோடி வசூல் செய்தால் வெற்றி பெற்றதாக கருதப்படும் என்று கூறப்படுகிறது.
மேலும் செய்திகளுக்கு...வைரலாகும் சூரரை போற்று... நீக்கப்பட்ட சண்டைக்காட்சியை கொண்டாடும் ரசிகர்கள்..
தொழிலதிபரான சரவணன் அருள் தன சொந்த நிறுவனமான சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமானார். இவரது விளம்பரத்தில் ஹாலிவுட்டின் டாப் டென் நாயகிகளான ஹன்சிகா, தமன்னா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். பின்னர் நாயகனாக அவதாரம் எடுக்க முடிவு செய்த சரவணன் அருள் அதன்படி தற்போது தனது முதல் படத்தையும் வெளியிட்டு விட்டார். இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும் முதல் வாரத்தில் நல்ல வசூலை பெற்றுள்ளதாக பட குழு கொண்டாடி வருகிறது.
மேலும் செய்திகளுக்கு...ஒலிம்பியாட் தொடக்கவிழாவில் புறக்கணிக்க பட்ட தெருக்குரல் அறிவு! குமுறல் பதிவால் மீண்டும் வெடித்த சர்ச்சை!