வைரலாகும் சூரரை போற்று... நீக்கப்பட்ட சண்டைக்காட்சியை கொண்டாடும் ரசிகர்கள்..
சூரரை போற்று படத்தில் இருந்து நீக்கப்பட்ட காட்சிகள் ஆன்லைனில் வெளியாகி ரசிகர்களின் கொண்டாட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ இணையத்தில் பரவி வைரல் ஆகி வருகிறது.
சுதா கொங்காரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான சூரரை போற்றி இன்று வரை பல பாராட்டுகளையும் விருதுகளையும் குவித்து வருகிறது. கடந்த 2020 ம் ஆண்டு ஓடிடி தளத்தில் வெளியான இந்த படம் பார்வையாளர்களின் கவனத்தை கவர்ந்திருந்தது. முதலில் ஓடிடி தளத்தில் வெளியானதால் இந்த படத்தை திரையிட முடியாது என பிரச்சனையை கிளப்பியிருந்தன திரையரங்கு உரிமையாளர்கள். பின்னர் தாமதமாக கேரள திரையரங்குகளில் கடந்த ஆண்டு வெளியிடப்பட்டது. அங்குள்ள ரசிகர்களையும் வெகுவாக ஈர்த்திருந்தது. இப்போது அக்ஷய் குமார் நடிப்பில் ஹிந்தியில் ரீமேக் ஆகிறது.
சமீபத்தில் இந்த படத்திற்கு 5 தேசிய விருதுகள் கிடைத்தன. சிறந்த நடிகருக்கான விருதை சூர்யாவும், சிறந்த நடிகைக்கான விருதை அபிராமி பாலமுரளியும், சிறந்த திரைக்கதைக்கான விருதை சுதா கொங்கராவும் , இசையமைப்பாளருக்கான விருதை ஜீவி பிரகாஷும், சிறந்த படத்திற்கான விருதை சூரரை போற்றும் தட்டிச் சென்றது.
மேலும் செய்திகளுக்கு...தனுஷ் படத்திலிருந்து தேன்மொழி..திருச்சிற்றம்பலம் 4 வது சிங்கிள் வீடியோ இதோ !
சாமானியர்கள் விமானத்தில் பறக்க இயலும் என்னும் கதைகளத்தை கையில் எடுத்த சுதா, ஜி ஆர் கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்றை படமாக்கினார். இந்த துறையில் முதலீடுகள் மற்றும் போட்டியால் அவர் எதிர்கொண்ட கஷ்டங்களை மையமாகக் கொண்டு இந்த படம் எடுக்கப்பட்டது. சூர்யா நாயகன் மாறனாக தோன்றியிருந்தார்.
மேலும் செய்திகளுக்கு...சர்ச்சைக்கு உள்ளான மஹா.. இரண்டே வாரத்தில் ஓடிடி -க்கு வரும் ஹன்சிகாவின் படம்
இந்நிலையில் சூரரை போற்று படத்தில் இருந்து நீக்கப்பட்ட காட்சிகள் ஆன்லைனில் வெளியாகி ரசிகர்களின் கொண்டாட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ இணையத்தில் பரவி வைரல் ஆகி வருகிறது. மாறனின் காட்சி ஹிந்தி பதிப்பில் சேர்க்கப்படும் என்றும் கூறப்படுகிறது, அதோடு ரீமேக் ஆகும் சூரரைப்போற்றுவில் சூர்யா காமியோவாக நடிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளுக்கு...ஒலிம்பியாட் தொடக்கவிழாவில் புறக்கணிக்க பட்ட தெருக்குரல் அறிவு! குமுறல் பதிவால் மீண்டும் வெடித்த சர்ச்சை!
சூர்யாவின் சமீபத்திய வெளியீடான எதற்கும் துணிந்தவன் படம் கலவையான விமர்சனங்களை பெற்றதை அடுத்து தற்போது பாலாவுடன் வணங்கான் என்னும் படத்தில் நடித்துள்ளார். படம் விரைவில் வெளியாகும் என தெரிகிறது. படம் குறித்த போஸ்டர் வெளியாகி வைரலானது. சூர்யா இதையடுத்து வாடிவாசல் படத்தில் வெற்றிமாறனுடன் விரைவில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்திற்காக காளைகளுடன் பழகி வருகிறார் நாயகன். இது குறித்தான வீடியோக்களும் வெளியாகி வைரலாகின. மேலும் சமீபத்தில் வெளியாகி வெற்றி கண்ட விக்ரம் படத்தில் ரோலக்ஸ் வேடத்தில் வந்து ரசிகர்களை வெகுவாக ஈர்த்து விட்டார் சூர்யா.