தேன்மொழி லிரிக் வீடியோவில் மூன்று நாயகிகளை நினைத்து உருகும் தனுஷின் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. அதோடு நாயகனின் மேக்கிங் காட்சிகளும்  உள்ளது..

திருச்சிற்றம்பலமாக தனுஷ் நடித்து முடித்துள்ள மித்ரன் ஜஹவரின் படம் விரைவில் வெளியாக உள்ளது. சன் பிக்சர்ஸ் பேனரின் கீழ் கலாநிதி மாறன் தயாரிக்கும் இதில் ராஷி கண்ணா, நித்யா மேனன், ப்ரியா பவானி சங்கர் என மூன்று நாயகிகள் நடித்துள்ளனர். பாரதிராஜா நாயகனுக்கு தாத்தாவாகவும், பிரகாஷ் ராஜ் தந்தையாகவும் முக்கிய வேடங்களில் தோன்றியுள்ளனர்.

 பல ஆண்டுகளுக்குப் பிறகு தனுஷ் படத்தில் இசையமைத்துள்ளார் அனிருத். முன்னதாக தங்க மகன் படத்தில்அனிருத்- தனுஷ் காம்போ இடம் பெற்று இருந்தது. ஏற்கனவே சன் பிக்சர்ஸ் படிக்காதவன், ஆடுகளம், மாப்பிள்ளை உள்ளிட்ட தனுஷின் 3 படங்களின் விநியோகிக்கும் உரிமையை பெற்றிருந்தது. இதையடுத்து தற்போது முதல் முறையாக திருச்சிற்றம்பலம் படத்தை தயாரித்துள்ளது. 

மேலும் செய்திகளுக்கு...சர்ச்சைக்கு உள்ளான மஹா.. இரண்டே வாரத்தில் ஓடிடி -க்கு வரும் ஹன்சிகாவின் படம்

Scroll to load tweet…

மேலும் செய்திகளுக்கு...ஒலிம்பியாட் தொடக்கவிழாவில் புறக்கணிக்க பட்ட தெருக்குரல் அறிவு! குமுறல் பதிவால் மீண்டும் வெடித்த சர்ச்சை!

அதேபோல மித்ரன் ஜஹவர், தனுஷின் 'யாரடி நீ மோகினி', 'குட்டி', 'உத்தமபுத்திரன்' ஆகிய மூன்று படங்களை இயக்கியுள்ளார். ஏற்கனவே படத்திலிருந்து தாய் கிழவி, மேகம் கருக்காதா, பழம் வாழ்க்கை உள்ளிட்ட மூன்று பாடல்கள் வெளியாகி உள்ளன. இதில் இரு பாடல்களை தனுஷ் எழுதியிருக்க, பழம் வாழ்க்கை பாடலை விவேக் எழுத அனிருத் ரவிச்சந்திரன் பாடியிருந்தார். இந்த வீடியோவில் மூன்று நாயகிகளை நினைத்து உருகும் தனுஷின் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. அதோடு நாயகனின் மேக்கிங் காட்சிகளும் உள்ளது..

YouTube video player

மேலும் செய்திகளுக்கு...வாரிசுக்காக விமான நிலையத்தில் வரிசையில் நின்ற தளபதி! அடுத்த கட்ட ஷூட்டிங் எங்கு தெரியுமா?

தற்போது தேன்மொழி என்னும் பாடல் வெளியாகி உள்ளது. சந்தோஷ் நாராயணன் பாடியுள்ள இந்த பாடலுக்கு தனுஷ் வரிகள் இயற்றி இருந்தார். பாடல் வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. திருச்சிற்றம்பலம் படத்தோடு தனுஷ் டோலிவுட் இயக்குனருடன் வாத்தி படத்தில் மும்மரமாக உள்ளார். தனுஷின் பிறந்தநாள் ஒட்டி படத்தின் டீசர் மட்டும் முதல் பார்வை போஸ்டர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்திருந்தது.