வாரிசுக்காக விமான நிலையத்தில் வரிசையில் நின்ற தளபதி! அடுத்த கட்ட ஷூட்டிங் எங்கு தெரியுமா?
விஜய் நடித்து வரும் 'வாரிசு' படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு இன்னும் ஓரிரு தினங்களில் துவங்க உள்ள நிலையில், தளபதி விஜய் சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்படும் வீடியோ மற்றும் விமான நிலையத்தில் வரிசையில் நிற்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
'பீஸ்ட்' படத்தை தொடர்ந்து தளபதி விஜய் தற்போது ’வாரிசு’ படத்தில் முழு கவனத்தையும் செலுத்தி நடித்து வருகிறார். இயக்குனர் வம்சி இயக்கத்தில், தில் ராஜு தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படத்தில், விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிக்கா மந்தனா நடித்து வருகிறார்.
இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு, ஐதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் போடப்பட்ட பிரமாண்டமான செட்டில் நடந்த நிலையில், இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்தது. இந்த நிலையில் தற்போது மூன்றாம் கட்ட படப்பிடிப்புக்கு படக்குழுவினர் தயாராகி விட்டனர்.
மேலும் செய்திகள்: இந்த மனசு தான் சார் கடவுள்... ஹவுஸ் கீப்பிங் வேலை செய்யும் பெண்களிடம் அஜித் காட்டிய பண்பு! வைரலாகும் வீடியோ!
மூன்றாம் கட்ட படப்பிடிப்புக்காக தளபதி விஜய், சென்னை விமான நிலையத்தில் இருந்து, விசாகப்பட்டினம் சென்றுள்ளார். அங்கு தான் அடுத்த கட்ட படப்பிடிப்பை இயக்குனர் வம்சி எடுக்க உள்ளார். இதற்காக இன்று சென்னையில் இருந்து விமானம் மூலம் விஜய் விசாகப்பட்டினம் சென்றார். இதற்காக அவர் சென்னை விமான நிலையத்திற்கு வந்தது, பயணிகளுடன் வரிசையில் நின்றது ஆகிய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
மேலும் செய்திகள்: பேரறிவாளனுடன் செம்ம குத்தாட்டம் போட்ட சத்யராஜ் - வைரலாகும் வீடியோ! பறக்கும் விமர்சனங்கள்...
'வாரிசு' படத்தின் பெரும்பாலான காட்சிகள் எடுத்து முடிக்கப்பட்டு விட்டதாகவும், எனவே மூன்றாம் கட்ட படப்பிடிப்புடன் அனைத்து காட்சிகளும் எடுத்து படப்பிடிப்பு முடிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து வெளிநாட்டில் 2 பாடல் காட்சிகள் படமாக்கப்பட படக்குழுவினர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.