இந்த மனசு தான் சார் கடவுள்... ஹவுஸ் கீப்பிங் வேலை செய்யும் பெண்களிடம் அஜித் காட்டிய பண்பு! வைரலாகும் வீடியோ!

ஒருவர் ஏழை - பணக்காரர் என்று பார்க்காமல், நம்மை மதிப்பவர்களை நாமும் திருப்பி மதிக்க வேண்டும் அலட்சியம் செய்ய கூடாது என்பதற்கு அஜித் மிகப்பெரிய உதாரணம். இவரது இந்த பண்பு தான் அவரை இவ்வளவு பெரிய உயரத்திற்கு கொண்டு வந்துள்ளது. இதுகுறித்த வீடியோ ஒன்று தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
 

actor ajith respect house keeping women video goes viral

நடிப்பு என்பதை தாண்டி, சில தனித்துவமான திறமைகள் மூலம் தன்னைக்கென தனி அங்கீகாரத்தை பெற விரும்புபவர் நடிகர் அஜித். பைக் ரேசிங், கார் ரேசிங், துப்பாக்கி சுடுதல், போட்டோ கிராபி, ஏரோ மாடலிங், போன்றவற்றிலும் கை தேர்ந்தவர். அந்த வகையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் திருச்சியில் உள்ள ரைபிள் கிளப்பில் நடைபெற்ற  47-வது மாநில அளவிலான துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் நடிகர் அஜித் கலந்து கொண்டார்.

இந்த போட்டியில்,  தமிழகம் முழுவதிலும் இருந்து ஏராளமான துப்பாக்கி சுடும் வீரர்கள் மற்றும் வீராங்களைகள் கலந்துகொண்டனர். இதில் நடிகர் அஜித்தும் கலந்துகொண்டார். அஜித் திருச்சியில் நடைபெறும் போட்டியில் கலந்து கொள்வதை அறிந்த ரசிகர்கள் பலர் ரைபிள் கிளப் முன்பு திரண்டதால் சற்று பரபரப்பு ஏற்பட்டது. எனினும் தன்னுடைய ரசிகர்களுக்கு இடையே தள்ளு முள்ளு போன்றவை ஏற்பட கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருந்த அஜித், போலீசாருக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தார்.

actor ajith respect house keeping women video goes viral

மேலும் செய்திகள்: சோழத்தின் பெருமை கூற சொல் பூத்து நிக்கும்..! 'பொன்னியின் செல்வன் முதல் சிங்கிள் பாடல் வெளியானது..!
 

மேலும் தன்னை காண வந்த ரசிகர்களை ஏமாற்ற மனம் இல்லாத அஜித், ரைபிள் கிளப் மேலே ஏறி நின்று... தன்னுடைய ரசிகர்களுக்கு கை அசைத்தும், தம்ப்ஸ் அப் காட்டியும், வணக்கம் வைத்தும் தன்னுடைய நன்றிகளை வெளிப்படுத்தினார். இது குறித்த வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் படு வைரலானது.

actor ajith respect house keeping women video goes viral

மேலும் செய்திகள்: பார்த்தாலே போதையாகுது.. உடலோடு ஒட்டிய டைட் உடையில்... தொடையழகை தாராளமாக காட்டிய மாளவிகா மோகனன்!
 

மேலும் இந்த போட்டியில்...  அஜித் செண்டர் பயர் பிஸ்டல் மாஸ்டர் ஆண்கள் அணி பிரிவு, ஸ்டாண்டர்ட் பிஸ்டல் மாஸ்டர் ஆண்கள் அணி பிரிவு, 50 மீட்டர் பிரீ பிஸ்டல் மாஸ்டர் ஆண்கள் அணி பிரிவு மற்றும் ஐ.எஸ்.எஸ்.எப்பிற்கான ஸ்டாண்டர்ட் பிஸ்டல் மாஸ்டர் ஆண்கள் அணி பிரிவு ஆகியவற்றில் தங்கப்பதக்கம் வென்றார். இதுதவிர 2 வெண்கலப் பதக்கங்களையும் வென்றார் என்பது அனைவரும் அறிந்ததே.

actor ajith respect house keeping women video goes viral

மேலும் செய்திகள்: பேரறிவாளனுடன் செம்ம குத்தாட்டம் போட்ட சத்யராஜ் - வைரலாகும் வீடியோ! பறக்கும் விமர்சனங்கள்...
 

இந்த போட்டியில் கலந்து கொள்ள அஜித் திருச்சி ரைபிள் கிளப் சென்றிருந்த போது, சிலருடன் பேசி கொண்டு வருகிறார். அப்போது அஜித்தை பார்த்ததும் அங்கு வேலை செய்யும் ஹவுஸ் கீப்பிங் பெண்கள் அவருக்கு வணக்கம் வைக்கின்றனர். அவர்களை கண்டதும் ஒரு நிமிடம் மிகவும் பண்புடன் சிரித்து விட்டு அவர்களிடம் மிகவும் பண்புடன் அஜித் நடந்து கொண்ட வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.


 

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios