விஜயை புறக்கணித்து..மகனை ஹீரோவாக்கி.. மண்ணை கவ்விய பிரபல தயாரிப்பாளர்?
இன்றைய சூப்பர் ஹீரோ விஜயை நாயகனாக்க வேண்டாம் என கூறி மகனை நாயகனாக வைத்து படமாக்கிய தயாரிப்பாளர் குறித்த தகவல் பரவி வருகிறது.

beast
மாஸ்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் விஜய் நடித்திருந்தார்.
beast
200 கோடி ரூபாய் வசூலை தாண்டியுள்ள இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டேவும் இவர்களுடன் அபர்ணா தாஸ், யோகி பாபு உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு...நயன்தாராவுக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகிடுச்சா? தீயாய் பரவும் தகவலால் பதறிப்போன ரசிகர்கள்!
beast
தமிழ், தெலுங்கு, கன்னடம்,. மலையாளம், இந்தி என பல மொழிகளில் பான் இந்திய படமாக உலகம் முழுவதும் கடந்த ஏப்ரல் 13-ம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மாஸ் காட்டி இருந்தது பீஸ்ட்.
Thalapathy Vijay
பீஸ்ட் படத்தை தொடர்ந்து தற்போது விஜய் 66 படத்தில் விஜய் பங்கேற்று வருகிறார். இந்த படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கி வருகிறார். தில் ராஜு தயாரிக்கிறார்.
மேலும் செய்திகளுக்கு...பிரபல இயக்குனரிடம் கதை கேட்டபோது தூங்கிட்டேன்... ஆனா அந்த படம் மெகா ஹிட் - விஜய் சேதுபதி சொன்ன ஆச்சர்ய தகவல்
Thalapathy Vijay
சரத்குமார், ஷாம், ரஷ்மிகா இணைத்துள்ள இந்த படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் தற்போது நடைபெற்று வருகிறது.
Thalapathy Vijay
இதைதொடர்ந்து அடுத்தடுத்து அட்லீ, வெற்றிமாறன், ஏ ஆர் முருகதாஸ் என படங்களில் கமிட்டாகி விட்டார் விஜய் . இந்நிலையில் விஜய் குறித்து பிரபல இயக்குனர் நந்தகுமார் பேசியுள்ள இன்டர்வியூ வைரலாகி வருகிறது.
vijay
கடந்த 1998-ம் ஆண்டு வெளியான விஜய் அறிமுக நாயனாக இருந்த சமயத்தில் பி.வாசு உள்ளிட்ட முன்னணி இயக்குனர்களிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த இயக்குனர் நந்தகுமார் விஜயிடம் கதை ஒன்றை கூறி சம்மதம் வாங்கியுள்ளார்.
AM Nandakumar
பின்னர் இந்த படத்தை தயாரிக்க ஜென்டில்மேன், ரட்சகன், காதல் தேசம்,காதலன் என பிரமாண்ட படங்களை எடுத்த தயாரிப்பாளர் கே டி குஞ்சு மோகனிடம் கதை கூறியுள்ளார்.
kodiesvaran
கதை கேட்ட தயாரிப்பாளர் விஜய் வேண்டாம் தனது மகனை ஹீரோவாக்க கூறியுள்ளார். வேறு வழியில்லாமல் இந்த படமும் எடுக்கப்பட்டது. இதில் எபி குஞ்சுமோன், சிம்ரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். ஆனால் இந்த படத்தின் பாடல்கள் மட்டும் தான் 1999-ல் வெளியாகின. பினான்ஸ் பிரச்சனைகளால் இந்த படம் வெளியாகவே இல்லை.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.