- Home
- Cinema
- பிரபல இயக்குனரிடம் கதை கேட்டபோது தூங்கிட்டேன்... ஆனா அந்த படம் மெகா ஹிட் - விஜய் சேதுபதி சொன்ன ஆச்சர்ய தகவல்
பிரபல இயக்குனரிடம் கதை கேட்டபோது தூங்கிட்டேன்... ஆனா அந்த படம் மெகா ஹிட் - விஜய் சேதுபதி சொன்ன ஆச்சர்ய தகவல்
vijay sethupathi : தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வரும் விஜய் சேதுபதி, பிரபல இயக்குனரிடம் கதை கேட்டபோது தூங்கிவிட்டதாக சமீபத்திய பேட்டியில் கூறி உள்ளார்.

தமிழ் திரையுலகில் பிசியான நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. இவர் நடிப்பில் கடந்த மாதம் காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படம் வெளியானது. விக்னேஷ் சிவன் இயக்கிய இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக சமந்தாவும், நயன்தாராவும் நடித்திருந்தனர். முக்கோண காதல் கதையம்சம் கொண்ட இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார்.
மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும், பாக்ஸ் ஆபிஸில் பட்டைய கிளப்பியது. வெளியான ஒரே வாரத்தில் ரூ.50 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படத்தை இப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனதாக அதன் இயக்குனரும், தயாரிப்பாளருமான விக்னேஷ் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
இந்நிலையில், சமீபத்திய பேட்டியில் நடிகர் விஜய் சேதுபதி சொன்ன ஒரு விஷயம் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அதாவது, நடிகர் விஜய் சேதுபதி - விக்னேஷ் சிவன் கூட்டணியில் முதன்முதலில் வெளியாகி வெற்றி பெற்ற படம் நானும் ரவுடி தான். அப்படத்தின் கதையை விக்னேஷ் சிவன் முதலில் கூறியபோது விஜய்சேதுபதி தூங்கிவிட்டாராம்.
ஏனெனில், அவர் சொன்ன கதையில் சுவாரஸ்யமே இல்லையாம். இதையடுத்து கதையில் சில மாற்றங்களை செய்து வருமாறு கூறி அனுப்பி வைத்தாராம். அதன்பிறகு சில மாற்றங்களை செய்த பின் விக்னேஷ் சிவன் கூறிய கதையை கேட்டு இம்பிரஸ் ஆன விஜய் சேதுபதி, உடனே நடிக்க ஓகே சொல்லிவிட்டாராம். சில மாதங்களுக்கு முன் குக் வித் கோமாளி பிரபலம் அஸ்வின் குமார் தான் 40 இயக்குனரிகளிடம் கதை கேட்டு தூங்கியதாக கூறி சர்ச்சையில் சிக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... ‘டாக்டர்’ல தவறவிட்டதை ‘டான்’ படத்தில் தட்டித்தூக்கிய சிவகார்த்திகேயன்...! அப்போ.. பேமிலி ஆடியன்ஸுக்கு மஜா தான்