MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • சுதந்திர தினத்தன்று தங்கலானுக்கு போட்டியாக தமிழில் ரிலீசாகும் படங்கள் என்னென்ன? முழு லிஸ்ட் இதோ

சுதந்திர தினத்தன்று தங்கலானுக்கு போட்டியாக தமிழில் ரிலீசாகும் படங்கள் என்னென்ன? முழு லிஸ்ட் இதோ

ஆகஸ்ட் 15-ந் தேதி சுதந்திர தினத்தன்று திரையரங்குகளில் ரிலீசாகும் தமிழ் படங்கள் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : Aug 11 2024, 10:59 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Tamil Movies released on August 15

Tamil Movies released on August 15

ஆகஸ்ட் மாதம் தமிழ் சினிமாவுக்கு ஒரு நம்பிக்கை தரும் மாதமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் இந்த மாதம் இதுவரை 10 படங்களுக்கு மேல் ரிலீஸ் ஆகி உள்ளன. அதில் யோகிபாபு நடித்த போட், பிரசாந்தின் அந்தகன், ஹலீதா ஷமீம் இயக்கிய மின்மினி ஆகிய திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. இதுதவிர வருகிற ஆகஸ்ட் 15-ந் தேதியும் மூன்று தரமான தமிழ் படங்கள் ரிலீஸ் ஆக உள்ளன. அதன் பட்டியலை பார்க்கலாம்.

24
thangalaan

thangalaan

தங்கலான்

பா.இரஞ்சித் இயக்கத்தில் சியான் விக்ரம் நாயகனாக நடித்துள்ள திரைப்படம் தங்கலான். இப்படத்தை ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார். இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்து உள்ளார். இப்படம் கேஜிஎப்-பில் நடந்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்து உருவாகி உள்ளது. இதில் விக்ரமுடன் பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படம் வருகிற ஆகஸ்ட் 15-ந் தேதி ரிலீஸ் ஆக உள்ளது.

இதையும் படியுங்கள்.. முதல் நாளை விட டபுள் மடங்கு வசூல்... பாக்ஸ் ஆபிஸில் பிக்-அப் ஆன அந்தகன்! 2 நாட்களில் இத்தனை கோடி கலெக்‌ஷனா?

34
demonte colony 2

demonte colony 2

டிமாண்டி காலனி 2

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள் நிதி நடித்து கடந்த 2015-ம் ஆண்டு வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான படம் டிமாண்டி காலனி. அப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகத்தை சுமார் 9 ஆண்டுகள் கழித்து வெளியிட உள்ளன. இப்படத்தில் அருள்நிதிக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். மேலும் பிக்பாஸ் அர்ச்சனாவும் இப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். இப்படமும் சுதந்திர தின ஸ்பெஷலாக ரிலீஸ் ஆக உள்ளது.

44
raghu thatha

raghu thatha

ரகு தாத்தா

சுதந்திர தினத்தன்று தங்கலான், டிமாண்டி காலனி 2 படங்களுக்கு போட்டியாக ரிலீஸ் ஆக உள்ள மற்றொரு தமிழ் படம் ரகு தாத்தா. இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் கதையின் நாயகியாக நடித்துள்ளார். சுமன் குமார் இயக்கியுள்ள இப்படம் இந்தி எதிர்ப்பை மையமாக வைத்து உருவாக்கப்பட்டு உள்ளது. இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்து உள்ளார். இப்படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றி இருக்கிறது.

இதையும் படியுங்கள்.. நல்ல வேள தப்பிச்சிட்டாரு! இந்தியன் 2 படத்தில் சித்தார்த்துக்கு பதில் முதலில் நடிக்க இருந்தது இந்த டாப் ஹீரோவா?

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
விஜய் முன்னே ரஷ்மிகாவிடம் ரக்ஷித் ஷெட்டி குறித்து கேள்வி – வைரலான ரியாக்ஷன் வீடியோ
Recommended image2
அப்பாடி.! அரண்மனை இப்படித்தான் இருக்குமோ?! திரும்பி பார்க்க வைக்கும் விஜய் தேவரகொண்டாவின் ஆடம்பர வீடு!
Recommended image3
சிவாஜிக்கு ஒரு குரல்.. எம்.ஜி.ஆருக்கு ஒரு குரல்! நடிகர்களுக்காகவே குரலை மாற்றிய டி.எம்.எஸ் - வியக்க வைக்கும் ரகசியம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved