- Home
- Cinema
- நல்ல வேள தப்பிச்சிட்டாரு! இந்தியன் 2 படத்தில் சித்தார்த்துக்கு பதில் முதலில் நடிக்க இருந்தது இந்த டாப் ஹீரோவா?
நல்ல வேள தப்பிச்சிட்டாரு! இந்தியன் 2 படத்தில் சித்தார்த்துக்கு பதில் முதலில் நடிக்க இருந்தது இந்த டாப் ஹீரோவா?
ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான இந்தியன் 2 திரைப்படத்தில் சித்தார்த்துக்கு பதில் முதலில் நடிக்க இருந்த டாப் ஹீரோ பற்றி பார்க்கலாம்.

Indian 2
பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் ஹீரோவாக நடித்து கடந்த 1996-ம் ஆண்டு ரிலீஸ் ஆன படம் இந்தியன். தமிழ் சினிமாவின் கல்ட் கிளாசிக் படமாக கொண்டாடப்படும் அப்படத்தின் இரண்டாம் பாகத்தை சுமார் 28 ஆண்டுகளுக்கு பின் இயக்கி வெளியிட்டு இருந்தார் இயக்குனர் ஷங்கர். இந்தியன் 2 திரைப்படம் இன்றைய காலகட்டத்தில் நடக்கும் ஊழல்களை தட்டிக்கேட்கும் திரைப்படமாக எடுக்கப்பட்டு இருந்தது.
indian 2 kamalhaasan
இந்தியன் 2 திரைப்படத்தில் கமலுடன் சித்தார்த், பாபி சிம்ஹா, விவேக், சமுத்திரக்கனி, எஸ்.ஜே.சூர்யா, பிரியா பவானி சங்கர், ரகுல் ப்ரீத் சிங், ஜெகன் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. அதுமட்டுமின்றி லைகா நிறுவனமும், ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனமும் இணைந்து இப்படத்தை தயாரித்திருந்தது. மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் கடந்த ஜூலை 12ந் தேதி திரைக்கு வந்த இந்தியன் 2 திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் படுதோல்வியை சந்தித்தது.
இதையும் படியுங்கள்... தங்கலான் பட பிரமோஷன் மொத்தமாக நிறுத்தம்; காரணத்தை கேட்டா உங்களுக்கே புல்லரிச்சிடும்
siddharth
கிரிஞ்சான காட்சிகள், சொதப்பலான திரைக்கதை போன்றவற்றால் தற்போது ட்ரோல் மெட்டீரியலாகவும் இந்தியன் 2 மாறி இருக்கிறது. அண்மையில் ஓடிடியில் ரிலீஸ் ஆன இப்படத்தை நெட்டிசன்கள் வச்சு செய்து வருகிறார்கள். இது ஒருபுறம் இருக்க இந்தியன் 2 திரைப்படத்தில் நடிக்க வந்த வாய்ப்பை உஷாராக மறுத்துவிட்டு எஸ்கேப் ஆன பிரபல ஹீரோ பற்றிய தகவல் வெளியாகி உள்ளது. அவர் விலகிய பின்னர் தான் சித்தார்த் அந்த ரோலில் நடித்தாராம்.
Sivakarthikeyan Rejected Indian 2 movie
அந்த ஹீரோ வேறுயாருமில்லை நடிகர் சிவகார்த்திகேயன் தான். இந்தியன் 2 படத்தில் சித்தார்த் நடித்த கேரக்டரில் முதலில் நடிக்க இருந்தது சிவகார்த்திகேயன் தானாம். அந்த சமயத்தில் 2 படங்களில் பிசியாக சிவகார்த்திகேயன் நடித்து வந்ததால் அவர் இந்தியன் 2-வுக்கு நோ சொல்லிவிட்டதாக கூறப்படுகிறது. இதை அறிந்த ரசிகர்கள் நல்ல வேள சிவா தப்பிச்சிட்டாரு என கமெண்ட் செய்து வருகின்றனர்.
இதையும் படியுங்கள்... ஸ்லீவ்லெஸ் பிளவுஸ்.. பஞ்சு மிட்டாய் சேலை கட்டி கவர்ச்சி விருந்து வைத்த திவ்யா துரைசாமி - ஹாட் கிளிக்ஸ்!