வசூலில் அஜித்தின் விடாமுயற்சியை ஓவர்டேக் செய்த சாய் பல்லவியின் தண்டேல்!
நாக சைதன்யா ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ள தண்டேல் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் அஜித்தின் விடாமுயற்சி படத்தை விட அதிகம் வசூலித்து உள்ளது.

விடாமுயற்சியை வசூலில் பின்னுக்கு தள்ளிய தண்டேல்
நடிகர் அஜித்தின் விடாமுயற்சி படத்திற்கு போட்டியாக தமிழ்நாட்டில் ரிலீஸ் ஆன ஒரே ஒரு படம் என்றால் அது தண்டேல் தான். சந்து முண்டேட்டி இயக்கியுள்ள இப்படத்தில் நாக சைதன்யா ஹீரோவாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக நடிகை சாய் பல்லவி நடித்துள்ள இப்படம் பிப்ரவரி 7ந் தேதி திரைக்கு வந்தது. இப்படத்தை அல்லு அரவிந்த் தயாரித்து இருந்தார். இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் பான் இந்தியா படமாக ரிலீஸ் ஆனது.
சாய் பல்லவியின் தண்டேல்
தண்டேல் திரைப்படத்தில் மீனவனாக நடித்திருந்தார் நாக சைதன்யா. இப்படம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி வெற்றிநடைபோட்டு வருகிறது. தண்டேல் திரைப்படம் ரிலீஸ் ஆன முதல் நாளில் இந்தியாவில் மட்டும் ரூ.11.5 கோடி வசூலித்து இருந்தது. உலகளவில் ரூ.21.27 கோடி வசூலித்திருப்பதாக படக்குழுவே அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்தது. நடிகர் நாக சைதன்யாவின் கெரியரில் முதல் நாளில் அதிக வசூல் ஈட்டிய படம் என்கிற சாதனையை தண்டேல் படைத்துள்ளது.
இதையும் படியுங்கள்... விடாமுயற்சிக்கு ஆப்பு வைக்க காதலர் தினத்தன்று ரிலீஸ் ஆகும் 9 படங்கள் - முழு லிஸ்ட் இதோ
தண்டேல் பாக்ஸ் ஆபிஸ்
தண்டேல் படத்துக்கு போட்டியாக ரிலீஸ் ஆன அஜித்தின் விடாமுயற்சி திரைப்படம் முதல் நாளில் ரூ.25 கோடி வசூலித்திருந்த நிலையில், இரண்டாம் நாளில் அப்படத்தின் வசூல் மளமளவென சரிந்து வெறும் 10 கோடி மட்டுமே இந்தியாவில் வசூலித்து இருந்தது. அப்படத்திற்கு கிடைத்த நெகடிவ் விமர்சனங்களும் அதன் வசூல் சரிவுக்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறாது. தற்போது தண்டேல் படம் இரண்டாம் நாளில் விடாமுயற்சியை விட அதிக வசூலை வாரிக்குவித்து கெத்துகாட்டி இருக்கிறது.
விடாமுயற்சி vs தண்டேல் வசூல்
அதன்படி தண்டேல் திரைப்படம் இரண்டாம் நாளில் இந்தியாவில் மட்டும் ரூ.12.64 கோடி வசூலித்து உள்ளது. இது அஜித்தின் விடாமுயற்சி படத்தின் இரண்டாம் நாள் வசூலை விட 2.64 கோடி அதிகமாகும். முன்னதாக நடிகை சாய் பல்லவி நடிப்பில் வெளியான அமரன் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் வசூல் வேட்டை ஆடியதை போல் தற்போது அவர் தெலுங்கில் நடித்துள்ள தண்டேல் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் பட்டைய கிளப்பி வருகிறது. இன்று இப்படம் 50 கோடி வசூலை கடந்துவிடும் என எதிர்பார்க்கபடுகிறது.
இதையும் படியுங்கள்... விடாமுயற்சி வசூல் பிக்-அப் ஆனதா? 3ம் நாள் பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் இதோ