MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • விடாமுயற்சிக்கு ஆப்பு வைக்க காதலர் தினத்தன்று ரிலீஸ் ஆகும் 9 படங்கள் - முழு லிஸ்ட் இதோ

விடாமுயற்சிக்கு ஆப்பு வைக்க காதலர் தினத்தன்று ரிலீஸ் ஆகும் 9 படங்கள் - முழு லிஸ்ட் இதோ

விடாமுயற்சி திரைப்படம் திரையரங்குகளை ஆக்கிரமித்துள்ள நிலையில், பிப்ரவரி 14ந் தேதி அப்படத்துக்கு போட்டியாக 9 தமிழ் படங்கள் ரிலீஸ் ஆக உள்ளன.

2 Min read
Author : Ganesh A
Published : Feb 09 2025, 10:02 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
விடாமுயற்சிக்கு போட்டியாக வரும் 9 படங்கள்

விடாமுயற்சிக்கு போட்டியாக வரும் 9 படங்கள்

பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் தமிழ் சினிமாவில் ஒரே ஒரு படம் தான் வெளியானது. அது நடிகர் அஜித் குமார் நடித்த விடாமுயற்சி. இப்படம் தான் இந்த ஆண்டின் முதல் பிரம்மாண்ட படமாகும். இப்படம் தமிழ்நாட்டில் சுமார் 1000 திரைகளுக்கு மேல் ரிலீஸ் ஆகி உள்ளது. வசூலிலும் 100 கோடியை நெருங்கி வரும் இப்படம் இந்த ஆண்டில் முதல் 100 கோடி வசூல் படமாக மாற உள்ளது. இப்படத்தை ஒரே வாரத்தில் தியேட்டரை விட்டு தூக்க வைக்க, வருகிற பிப்ரவரி 14ந் தேதி 9 தமிழ் படங்கள் ரிலீஸ் ஆக உள்ளன. அது என்னென்ன படங்கள் என்பதை பார்க்கலாம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
பிப்ரவரி 14ந் தேதி ரிலீசாகும் படங்கள்

பிப்ரவரி 14ந் தேதி ரிலீசாகும் படங்கள்

சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி உள்ள 2கே லவ் ஸ்டோரி திரைப்படம் வருகிற பிப்ரவரி 14ந் தேதி திரைக்கு வர உள்ளது. இப்படத்திற்கு டி இமான் இசையமைத்துள்ளார். இதனுடன் நடிகர் ஜெய், சத்யராஜ், யோகிபாபு ஆகியோர் நடித்துள்ள பேபி & பேபி திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ளது. இப்படத்தை பிரதாப் இயக்கி உள்ளார். மேலும் நடிகர் விமல் நடிப்பில் கடந்த 6 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டு இருந்த படவா திரைப்படமும் காதலர் தினத்தன்று திரைக்கு வர உள்ளது. இப்படத்தில் நகைச்சுவை நடிகர் சூரியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தை நந்தா இயக்கி உள்ளார்.

34
காதலர் தினத்தன்று ரிலீஸ் ஆகும் படங்கள்

காதலர் தினத்தன்று ரிலீஸ் ஆகும் படங்கள்

ஸ்ரீகாந்த் மற்றும் சிந்தியா நடித்துள்ள தினசரி திரைப்படமும் வருகிற பிப்ரவரி 14ந் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தை ஜி சங்கர் இயக்கி உள்ளார். இதனுடன் ஜே.எஸ்.கே சதீஷ் இயக்கியுள்ள ஃபயர் திரைப்படமும் ரிலீஸ் ஆக உள்ளது. இப்படத்தில் பிக் பாஸ் பாலாஜி முருகதாஸ் ஹீரோவாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக ரச்சிதா நடித்துள்ள இப்படமும் இந்த வாரம் திரைக்கு வருகிறது. மேலும் புதுமுகங்கள் நடித்துள்ள ‘கண்ணீரா’ திரைப்படம் காதலர் தினத்தன்று ரிலீஸ் ஆக உள்ளது. இப்படத்தை கதிரவன் இயக்கி இருக்கிறார்.

44
இந்த வாரம் திரைக்கு வரும் தமிழ் படங்கள்

இந்த வாரம் திரைக்கு வரும் தமிழ் படங்கள்

காதலர் தினத்தன்று ஜெய் பீம் பட நடிகை லிஜோமோல் ஜோஸ் நடித்துள்ள காதல் என்பது பொதுவுடைமை திரைப்படமும் ரிலீஸ் ஆக உள்ளது. இப்படத்தை ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணன் இயக்கி உள்ளார். இதனுடன் காமெடி மன்னன் கவுண்டமனி நாயகனாக நடித்துள்ள ஒத்த ஓட்டு முத்தையா திரைப்படமும் பிப்ரவரி 14 அன்று திரைக்கு வருகிறது. இப்படத்தை சாய் ராஜகோபால் இயக்கி உள்ளார். மேலும் வெட்டு என்கிற சிறு பட்ஜெட் படமும் ரிலீஸ் ஆக உள்ளது. இப்படத்தை ராஜசேகர் இயக்கி உள்ளார். இப்படத்துக்கு தமன் இசையமைத்துள்ளார். இப்படமும் பிப்ரவரி 14 அன்று திரைகாண உள்ளது.

இதையும் படியுங்கள்... விஜய்யின் ஜன நாயகன் படத்தில் இணைந்த 4வது ஹீரோயின்; வாரிசு நடிகைக்கு அடித்த ஜாக்பாட்!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
(47.0 ov) 329 & 140/4
AUSAUS
429
Day 3
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
NZNZ
Fri, 30 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
ரத்தமும் சதையுமான மான்ஸ்டர் சேஸிங், திகில் விருந்து: ரூ.1,500 கோடி பாக்ஸ் ஆபீஸ் வசூல் வேட்டை; பாக்ஸ் ஆபிஸை புரட்டிப் போட்ட ஹோப்!
Recommended image2
Bigg Boss : டாஸ்குகளில் மைனிங் மாஃபியாஸை கதறவிட்ட கெள பாய்ஸ்... தன்யா - ஜேசன் இடையே வெடித்த மோதல்
Recommended image3
Top 5 Rewatchable Tamil Movies : எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத டாப் 5 தமிழ் படங்கள்...!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved