விஜய்யின் ஜன நாயகன் படத்தில் இணைந்த 4வது ஹீரோயின்; வாரிசு நடிகைக்கு அடித்த ஜாக்பாட்!
எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் கடைசி படமான ஜன நாயகன் படத்தில் நான்காவது ஒரு ஹீரோயின் இணைந்திருக்கிறார்.

விஜய்யின் கடைசி படம்
நடிகர் விஜய்யின் கடைசி படம் ஜன நாயகன். இப்படத்தை எச்.வினோத் இயக்குகிறார். இப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். மேலும் பிரகாஷ் ராஜ், கெளதம் மேனன், மமிதா பைஜு, பாபி தியோல், பிரியாமணி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கும் இப்படத்தை கேவிஎன் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்திற்கு ராக்ஸ்டார் அனிருத் இசையமைக்கிறார். ஏற்கனவே விஜய் நடித்த கத்தி, மாஸ்டர், லியோ போன்ற படங்களுக்கு இசையமைத்துள்ள அனிருத், தற்போது நான்காவது முறையாக தளபதி உடன் கூட்டணி அமைத்துள்ளார்.
ஜன நாயகன் அப்டேட்
ஜன நாயகன் திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தை இந்த ஆண்டு அக்டோபர் மாதம் வெளியிட திட்டமிட்டிருந்த படக்குழு, தற்போது அதன் ரிலீஸ் தேதியை அடுத்த ஆண்டுக்கு தள்ளிவைத்துள்ளது. அதன்படி ஜன நாயகன் திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் விருந்தாக திரைக்கு வர உள்ளது. இப்படத்தின் ஷூட்டிங்கே இன்னும் முடிவடையாத நிலையில், அதற்குள் இதன் வெளிநாட்டு ரிலீஸ் உரிமை 75 கோடிக்கு விற்பனை ஆகி இருக்கிறது.
இதையும் படியுங்கள்... 'ஜன நாயகன்' படத்தின் முதல் சிங்கிள் பாடல் ரிலீஸ் எப்போது? தீயாக பரவும் தகவல்!
ஜன நாயகன் படத்தின் 4வது ஹீரோயின்
ஜன நாயகன் படத்தில் ஏற்கனவே பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பிரியாமணி என மூன்று நாயகிகள் இருக்கும் நிலையில், தற்போது நான்காவதாக ஒரு ஹீரோயின் இணைந்திருக்கிறார். அதன்படி நடிகர் கமல்ஹாசனின் மகள் ஸ்ருதிஹாசன், ஜன நாயகன் படத்தில் முக்கிய ரோலில் நடிக்க கமிட்டாகி உள்ளாராம். தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் ஹீரோவாக நடிக்கும் கூலி படத்தில் நடித்து வரும் ஸ்ருதிஹாசன், விரைவில் ஜன நாயகன் ஷூட்டிங்கில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜன நாயகன் படத்தில் ஸ்ருதிஹாசன்
நடிகை ஸ்ருதிஹாசனும் விஜய்யும் இணைந்து நடிப்பது இது முதன்முறை அல்ல. இதற்கு முன்னர் கடந்த 2015-ம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளிவந்த புலி திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார் ஸ்ருதி. அப்படத்திற்கு பின் இருவரும் கடந்த 10 ஆண்டுகளாக கூட்டணி அமைக்காமல் இருந்த நிலையில், தற்போது ஜன நாயகன் படம் மூலம் இந்த கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. இப்படத்தில் ஸ்ருதிக்கு முக்கியமான ரோல் இருக்கும் என்று கூறப்படுகிறது. அது என்ன என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
இதையும் படியுங்கள்... இன்னும் ஷூட்டிங்கே முடியல அதற்குள் 75 கோடி வசூலா? மாஸ் காட்டும் ஜன நாயகன்!