விஜய் பர்த்டே ட்ரீட்..மாஸாக வெளியாகும் தளபதி 66 அப்டேட்!
விஜய் பர்த்டே ஸ்பெஷலாக வரும் ஜூன் 22-ம் தேதி படத்தில் பர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

vijay 66
நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்து வெற்றி கண்ட பீஸ்ட் படத்தையடுத்து வம்சி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் திரைப்படம் தளபதி 66. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். ஸ்ரீ வெங்கடேஷ்வரா கிரியேசன்ஸ் சார்பாக தில் ராஜு இப்படத்தை தயாரிக்கிறார். இப்படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைக்க உள்ளார்.
Thalapathy 66
பூவே உனக்காக ஸ்டைலில் உருவாகும் இந்த படம் முழுக்க முழுக்க குடும்ப செண்டிமெண்ட் படமாக இருக்குமென தெரிகிறது. இதில் விஜய்யுடன் இணைந்து சரத்குமார், பிரபு, பிரகாஷ் ராஜ், ஸ்ரீகாந்த், சங்கீதா என பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள். தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் தயாராகும் இந்த படம் மூலம் விஜய் டோலிவுட்டில் அறிமுகமாக உள்ளார்.
Thalapathy Vijay
சென்னையில் இதன் முதல்கட்ட படப்பிடிப்பு அரபிக் குத்து படமாக்கப்பட்ட அதே இடத்தில் எடுத்து முடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் சமீபத்தில் முடிந்தது.அங்கு பாடல் மற்றும் சண்டை காட்சிகள் படமாக்கப்பட்டதாக தெரிகிறது.. இதில், விஜய்யுடன் பிரகாஷ் ராஜ், சரத்குமார், ஸ்ரீகாந்த் போன்ற நடிகர்கள் கலந்துகொண்டனர்.
vijay 66
சமீபத்தில் படப்பிடிப்பு முடிவடைந்து சென்னை திரும்பிய விஜயின் புகைப்படம் மற்றும் பொங்கல் ரிலீஸ் என அறிவிக்கப்பட்ட இந்த படம் குறித்த போஸ்டர் வைரலானது. இதில் விஜய் மற்றும் வம்சி இருவரும் கலந்து கொண்டனர். இந்நிலையில் விஜய் பிறந்த நாளான ஜூன் 22 -ம் தேதி படத்தில் பர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் வெளியாகும் என தகவல் வைரலாகி வருகிறது.