MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • ஜனவரி 11-ந் தேதி ரிலீஸ் இல்லை... திடீரென தள்ளிவைக்கப்பட்ட விஜய் படம் - புது ரிலீஸ் தேதி அறிவிப்பு

ஜனவரி 11-ந் தேதி ரிலீஸ் இல்லை... திடீரென தள்ளிவைக்கப்பட்ட விஜய் படம் - புது ரிலீஸ் தேதி அறிவிப்பு

ஐதராபாத்தில் இன்று நடைபெற்ற வாரிசுடு படத்தின் பிரஸ்மீட்டில் கலந்துகொண்ட தயாரிப்பாளர் தில் ராஜு அதன் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டதை அறிவித்தார். 

1 Min read
Author : Ganesh A
Published : Jan 09 2023, 11:17 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

நடிகர் விஜய்யின் 66-வது திரைப்படம் வாரிசு. தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கியுள்ள இப்படத்தை தில் ராஜு தயாரித்துள்ளார். தெலுங்கில் முன்னணி தயாரிப்பாளராக இருக்கும் இவர், தமிழில் தயாரித்துள்ள முதல் படம் இதுவாகும். இப்படத்தில் விஜய்யுடன் சரத்குமார், ஷியாம், விடிவி கணேஷ், சதீஷ், ராஷ்மிகா, குஷ்பு, சங்கீதா, சம்யுக்தா, பிரகாஷ் ராஜ், தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்த் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24

வாரிசு திரைப்படம் வருகிற ஜனவரி 11-ந் தேதி ரிலீசாக உள்ளது. இப்படத்திற்கான ரிலீஸ் பணிகள் ஒருபக்கம் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இப்படத்தை தெலுங்கில் வாரிசுடு என்கிற பெயரிலும் டப்பிங் செய்து வெளியிட உள்ளனர். அங்கு சிரஞ்சீவியின் வால்டர் வீரைய்யா மற்றும் பாலகிருஷ்ணாவின் வீர சிம்ஹா ரெட்டி ஆகிய படங்களுக்கு போட்டியாக இப்படம் ரிலீசாக உள்ளது.

இதையும் படியுங்கள்... துணிவு புரமோஷன் நிகழ்ச்சியில் திடீரென கெட்ட வார்த்தையில் பேசி ஷாக் கொடுத்த மஞ்சு வாரியர் - வைரல் வீடியோ

34

முதலில் இப்படத்தை தெலுங்கிலும் ஜனவரி 11-ந் தேதி ரிலீஸ் செய்வதாக இருந்தனர். ஆனால் ரிலீசுக்கு இன்னும் இரு தினங்களே உள்ள நிலையில், வாரிசுடு படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டு உள்ளது. அதன்படி வாரிசுடு திரைப்படம் வருகிற ஜனவரி 14-ந் தேதி ரிலீஸ் செய்யப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். தமிழில் திட்டமிட்டபடி ஜனவரி 11-ந் தேதி வாரிசு படம் ரிலீசாகும் என்பதையும் உறுதிபட தெரிவித்துள்ளனர்.

44

ஐதராபாத்தில் இன்று நடைபெற்ற வாரிசுடு படத்தின் பிரஸ்மீட்டில் கலந்துகொண்ட தயாரிப்பாளர் தில் ராஜு இதுகுறித்த அறிவிப்பை வெளியிட்டார். இந்த தேதி மாற்றத்திற்கான காரணத்தை அவர் தெரிவிக்கவில்லை. போதுமான் திரையரங்குகள் கிடைக்காததன் காரணமாகவே வாரிசுடு ரிலீஸ் தேதி மாற்றப்பட்டு இருக்கலாம் என டோலிவுட் வட்டாரத்தில் தகவல்கள் பரவி வருகின்றன.

இதையும் படியுங்கள்... நண்பன் ரஜினிக்காக ரெட்ரோ லுக்கிற்கு மாறிய மோகன்லால்... ஜெயிலர் படத்தில் அவருக்கு இப்படி ஒரு கேரக்டரா?

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தளபதி விஜய்
விஜய் (நடிகர்)
Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
அய்யாச்சாமி முதல் பாடிசோடா வரை... 'விஜய் vs வடிவேலு' பிளாக்பஸ்டர் ஹிட் காமெடி கூட்டணி ஒரு பார்வை !
Recommended image2
Now Playing
Manorama: கணவர் இறந்த செய்தி கேட்டும் ஷூட்டிங்கை நிறுத்தாத மனோரமா... பி.வாசு பகிர்ந்த ஷாக் சம்பவம்!
Recommended image3
Karuppu Controversy: கருப்பு பட டைரக்டர் ஆர்.ஜே.பாலாஜியை வறுத்தெடுக்கும் சூர்யா ஃபேன்ஸ்.! இதுதான் காரணமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved