MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • நண்பன் ரஜினிக்காக ரெட்ரோ லுக்கிற்கு மாறிய மோகன்லால்... ஜெயிலர் படத்தில் அவருக்கு இப்படி ஒரு கேரக்டரா?

நண்பன் ரஜினிக்காக ரெட்ரோ லுக்கிற்கு மாறிய மோகன்லால்... ஜெயிலர் படத்தில் அவருக்கு இப்படி ஒரு கேரக்டரா?

ஜெயிலர் பட ஷூட்டிங்கில் மோகன்லால் கலந்துகொண்டபோது எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து, அவர் ரஜினியுடன் நடிப்பதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

1 Min read
Author : Ganesh A
Published : Jan 09 2023, 09:35 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார், அடுத்ததாக ரஜினிகாந்த் நாயகனாக நடிக்கும் ஜெயிலர் திரைப்படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் நடிகர் ரஜினி, முத்துவேல் பாண்டியன் என்கிற கெத்தான கேரக்டரில் நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக நடிகை ரம்யா கிருஷ்ணன் நடிக்கிறார். இதுதவிர வஸந்த் ரவி, யோகிபாபு, ரோபோ சங்கர் ஆகியோரும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

24

இதில் கன்னட சூப்பர்ஸ்டார் ஷிவ ராஜ்குமார் வில்லனாக நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வரும் ஜெயிலர் படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை 65 சதவீத படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. சமீபத்தில் மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லாலும் இப்படத்தில் கேமியோ ரோலில் நடிக்க உள்ளதாக நாம் செய்தி வெளியிட்டிருந்தோம்.

இதையும் படியுங்கள்... ‘வாரிசு’க்கு பாசிடிவ் ரிவ்யூ தர ப்ளூ சட்டை மாறனுக்கு ரூ.1 கோடியா..! இதென்னடா புது உருட்டா இருக்கு

34

அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை நேற்று சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டு இருந்தது. ஜெயிலர் பட ஷூட்டிங்கில் மோகன்லால் கலந்துகொண்டபோது எடுத்த புகைப்படத்தை பகிர்ந்திருந்தனர். அந்த புகைப்படத்தில் அவர் ரெட்ரோ லுக்கில் காட்சியளிக்கிறார். இதைப்பார்க்கும் போது அவர் இப்படத்தின் பிளாஷ்பேக் காட்சிகளில் நடித்து வருவது போல் தெரிகிறது.

44

இதைப்பார்த்த ரசிகர்கள் மோகன்லாலின் ரெட்ரோ லுக்கே இவ்ளோ மாஸா இருக்குன்னா, அப்போ தலைவரோட லுக் வேறலெவல்ல இருக்கும் போலயே என கமெண்ட் செய்து வருகின்றனர். நடிகர் ரஜினியும், மோகன்லாலும் நெருங்கிய நண்பர்களாக இருந்தாலும், அவர்கள் இருவரும் இணைந்து நடிக்கும் முதல் படம் ஜெயிலர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... பாராட்டு மழையில் ஆர்.ஆர்.ஆர்... படம் பார்த்தபின் ராஜமவுலிக்கு ராஜ மரியாதை கொடுத்த அமெரிக்கர்கள் - வைரல் வீடியோ

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
மோகன்லால்
ரஜினிகாந்த்
Latest Videos
Recommended Stories
Recommended image1
துரத்தும் ஆலிவர் ஆட்கள்... உயிர் பயத்தில் ஜனனி; ஈஸ்வரி பற்றி வந்த குட் நியூஸ் - எதிர்நீச்சல் தொடர்கிறது அப்டேட்
Recommended image2
மனோஜ் காலில் விழுந்து கெஞ்சிய ரோகிணி... டைவர்ஸ் கேஸில் புது ட்விஸ்ட் - சிறகடிக்க ஆசை அப்டேட்
Recommended image3
அஜித் பட லைஃப் டைம் வசூலை ஒரே நாளில் வாரிசுருட்டிய துரந்தர் 2..! பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் இதோ
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved