- Home
- Cinema
- ‘வாரிசு’க்கு பாசிடிவ் ரிவ்யூ தர ப்ளூ சட்டை மாறனுக்கு ரூ.1 கோடியா..! இதென்னடா புது உருட்டா இருக்கு
‘வாரிசு’க்கு பாசிடிவ் ரிவ்யூ தர ப்ளூ சட்டை மாறனுக்கு ரூ.1 கோடியா..! இதென்னடா புது உருட்டா இருக்கு
சர்ச்சைக்குரிய விமர்சகரான ப்ளூ சட்டை மாறன் பற்றிய ஒரு தகவல் சமூக வலைதளங்களில் காட்டுத்தீ போல் பரவி வந்த நிலையில், அதற்கு அவரே மீம் போட்டு கலாய்த்துள்ளார்.

யூடியூப்பில் படங்களுக்கு சர்ச்சைக்குரிய வகையில் விமர்சனங்களைக் கூறி அதன்மூலம் பேமஸ் ஆனவர் ப்ளூ சட்டை மாறன். பெரும்பாலும் நெகடிவ் விமர்சனங்களை கூறி சர்ச்சையில் சிக்கும் இவர், கடந்த 2021-ம் ஆண்டு தமிழ் சினிமாவில் இயக்குனராகவும் அறிமுகமானார். இவர் ஆன்டி இண்டியன் என்கிற திரைப்படத்தை இயக்கி வெளியிட்டார். இப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.
இதன்பின்னரும் பிற படங்களை விமர்சனம் செய்வதை விடாமல் தொடர்ந்து வருகிறார் ப்ளூ சட்டை. கடந்த ஆண்டு கூட கவுதம் மேனன் இயக்கிய வெந்து தணிந்தது காடு, பார்த்திபனின் இரவின் நிழல் போன்ற திரைப்படங்களை கடுமையாக விமர்சனம் செய்து சர்ச்சையில் சிக்கினார். இதன்காரணமாக இவருக்கும் இயக்குனர் கவுதம் மேனனுக்கும் வார்த்தை மோதல்கள் எல்லாம் ஏற்பட்டது. ஒரு பேட்டியில் ப்ளூ சட்டை மாறனை நேரில் பார்த்தால் வச்சு செய்யணும்னு தோணுது என வெளிப்படையாகவே கூறி இருந்தார்.
இதையும் படியுங்கள்... பாராட்டு மழையில் ஆர்.ஆர்.ஆர்... படம் பார்த்தபின் ராஜமவுலிக்கு ராஜ மரியாதை கொடுத்த அமெரிக்கர்கள் - வைரல் வீடியோ
இவ்வாறு தொடர்ந்து பரபரப்புக்கு பஞ்சமில்லாதவராக உள்ள ப்ளூ சட்டை மாறன், வருகிற பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸ் ஆக உள்ள விஜய், அஜித் படங்களை என்ன விமர்சனம் செய்யப்போகிறார் என்கிற எதிர்பார்ப்பு அவரது ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து உள்ளது. இந்த நிலையில், ப்ளூ சட்டை மாறன் பற்றிய ஒரு தகவல் சமூக வலைதளங்களில் காட்டுத்தீ போல் பரவி வந்தது.
அது என்னவென்றால் அவர் பொங்கலுக்கு ரிலீசாக உள்ள வாரிசு படத்திற்கு பாசிடிவ் விமர்சனம் கொடுக்க வேண்டும் என்பதற்காக அவருக்கு நடிகர் விஜய் ரூ.1 கோடி கொடுத்துள்ளார் என்பது தான். இதனை தனியார் ஊடகம் ஒன்று யூடியூப்பில் செய்தியாக வெளியிட்டு இருந்தது. இதைப்பார்த்த ரசிகர்கள் அதனை ப்ளூ சட்டை மாறனுக்கு ஷேர் செய்ய, அவர் ‘அட டேய்’ என தன் பங்குக்கு மீம் போட்டு கலாய்த்துள்ளார்.
இதையும் படியுங்கள்... முதன்முறையாக பிகினி உடையில் போஸ் கொடுத்த கீர்த்தி சுரேஷ்... காட்டுத்தீ போல் பரவும் போட்டோஸ் இதோ