பாராட்டு மழையில் ஆர்.ஆர்.ஆர்... படம் பார்த்தபின் ராஜமவுலிக்கு ராஜ மரியாதை கொடுத்த அமெரிக்கர்கள் - வைரல் வீடியோ
லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள DGA திரையரங்கில் ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் திரையிடப்பட்டபோது அப்படத்தை பார்த்த அமெரிக்கர்கள் எழுந்து நின்று கைதட்டி பாராட்டுக்களை தெரிவித்தனர்.

பாகுபலி படங்களின் பிரம்மாண்ட வெற்றிக்கு பின் ராஜமவுலி இயக்கிய திரைப்படம் தான் ஆர்.ஆர்.ஆர். இதில் ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் ராம்சரண் ஆகியோர் கதையின் நாயகர்களாக நடித்திருந்தனர். இதுதவிர சமுத்திரக்கனி, அஜய் தேவ்கன், ஆலியா பட், ஷ்ரேயா சரண் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்த இப்படம் கடந்தாண்டு மார்ச் மாதம் ரிலீஸ் ஆனது.
பான் இந்தியா படமாக வெளியான இப்படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்தது. இதன் காரணமாக பாக்ஸ் ஆபிஸில் இப்படம் ரூ.1100 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது. இப்படம் ரிலீசாகி ஒராண்டு நெருங்க உள்ள நிலையில், தற்போது கூட இப்படத்திற்கு மவுசு குறையவில்லை என்று தான் சொல்ல வேண்டும். சமீபத்தில் ஜப்பானில் திரையிடப்பட்டு அங்கும் 20 கோடிக்கு மேல் வசூல் ஈட்டியது.
இதையும் படியுங்கள்... Bigg Boss Tamil 6 : பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய ரச்சிதாவின் சம்பளம் எவ்வளவு தெரியுமா ?
அதுமட்டுமின்றி ஆஸ்கர் விருதுக்கான போட்டியிலும் ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் இடம்பெற்று உள்ளது. இதனால் அமெரிக்காவில் தங்கியுள்ள இயக்குனர் ராஜமவுலிக்கு அங்கு ஏராளமான விருதுகளும் கிடைத்து வருகின்றன. சமீபத்தில் ஆஸ்கருக்கு நிகராக நடத்தப்படும் நியூயார்க் விழாவில் இப்படத்திற்கு விருது வழங்கப்பட்டது.
அதோடு கடந்த சில தினங்களுக்கு முன்னர் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள DGA திரையரங்கில் ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் சமீபத்தில் திரையிடப்பட்டது. இதில் இயக்குனர் ராஜமவுலி மற்றும் நடிகர் ஜூனியர் என்.டி.ஆரும் கலந்துகொண்டனர். படம் பார்த்து முடித்ததும் அங்குள்ள அமெரிக்கர்கள் எழுந்து நின்று கைதட்டி படக்குழுவினரை நெகிழ வைத்தனர். இதுகுறித்த வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது.
இதையும் படியுங்கள்... முதன்முறையாக பிகினி உடையில் போஸ் கொடுத்த கீர்த்தி சுரேஷ்... காட்டுத்தீ போல் பரவும் போட்டோஸ் இதோ